குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
அனைத்து சித்தர்களின் திருவடிகளை வணங்கி!
எல்லோரும் நன்றாக வாழ இறைவனின் திருவருளாலும் சித்தர்களின் குருவருளாலும் பிராத்தனை செய்வோம். நாம் செய்த வினைகளால் பிறந்து, வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் செய்த வினை முடியும்காலம் நம்விதி முடிந்துவிடும்.
வாழும்காலம் வரை வாழ்க்கையில் நாம் வாங்கும் கர்ம வினைஅடிகளை புன்னியம் என்ற கவசத்தால் நம்மை பாதுகாத்து கொள்ள திருவருளும் குருவருளும் துணைபுரிய மாத பிதா குரு தெய்வங்களை போற்றி வணங்குவோம்.
சுபகிரகங்களில் குருபெயர்சியையும் பாபகிரகங்களில் சனி ராகு கேது பெயர்களையும் முக்கியமாக எடுத்து கொண்டு பலன்களை பார்த்து வருகிறோம்.
குரு எந்த இடத்திற்கு வந்திருக்கிறார் எந்தந்த இடங்களை பார்க்கிறார் மற்ற வருட கிரகங்களின் நிலைகள் என்னன்ன என்பதை ஆராய்ந்து பலன் கூறவேண்டும். குரு அவரவர் ராசிக்கு 2 5 7 9 11 இடங்களுக்குக்கு வரும் போது நற்பலன்களும், 3 6 8 12 ஆம் இடங்களில் வரும்போது துர்பலன்களும், 4 10 ஆம் இடங்களான கேந்திரங்களுக்கு வரும்போது சமபலன்களும் நடக்கும்.
பொதுவாக குரு பகவான் ஒரு ராசி கட்டத்தில் ஒருவருடம் தங்கி நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நற்பலன்களையும் கெடுபலன்களையும் தருவார் ஆனால் இந்த வருடம் வெறும் ஐந்து மாதங்கள் மட்டும் தங்கி அதிசாரமாக மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அப்படி அதிசாரமாக பெயர்ச்சி அடைந்தாலும் பலன்களை குறைவாக அளித்துவிட்டு செல்லாமாட்டார் மாறாக ஒரு வருடம் அளிக்க கூடிய அனைத்து சுப அசுப பலன்களையும் கொடுத்து விட்டுத்தான் செல்வார்.
குரு பெயர்ச்சியால் ஏற்படும் பொதுவான நன்மைகள் என்னன்ன என்பதை பார்க்கலாம் பொதுவாக குடும்பத்தில் நடக்க கூடிய சுபகாரியங்களை நடக்க ஏற்பாடு செய்வார் திருமணம், கிரகபிரவேஷம் செய்தல், மனை முகூர்த்தம் செய்தல் காதுகுத்துதல், வேண்டுதலை நிறைவேற்றுதல், புண்ணிய ஸ்தலங்களுக்கு ஸ்தலயாத்திரை செல்லுதல், நீண்ட காலம் குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் தேர்ச்சி, நிலம் வாங்குதல் வீடுகட்டுதல் அடகுவைத்த பொருள்களை மீட்டுதல், கடன்கள், பத்திரங்களை பணம் செலுத்தி திருப்புதல், வேலை இல்லாதவர்களுக்கு வேலை, புதிய தொழில், நீண்ட கால தவணையில் கடன் பெறுதல், பங்கு சந்தையில் லாபம் பெறுவது, லாபம் இல்லாத தொழிலை லாபமாக இயங்கவைக்கும் இது போன்ற நன்மையான பலன்களை இந்த குரு பெயர்ச்சி அளிக்கும்.
குரு பெயர்ச்சியானது வாக்கியபடி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு ஐப்பசி மாதம் 27 ஆம் தேசி நவம்பர். 13 ஆம் தேதி சனிக்கிழமை பெயர்ச்சி ஆகிறார், திருகணிதபஞ்சாங்கபடி குருபகவான் கார்த்திகைமாதம் 4 ஆம் தேதி நவம்பர் 20 தேதி பெயர்ச்சி ஆகிறார்.
12 ராசிகளுக்கும் என்னன்ன பலன் களை தரப்போகிறார் என்பதை வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக விரிவாக காணலாம்.
அருகில் உள்ள ஜீவசாமதிக்கு வியாழக்கிழமை தோறும் சென்று நெய்தீபம் ஏற்றிவழிபட்டுவாருங்கள் உங்கள் முயற்சிகளில் ஏற்படும் தடை தாமதம் நீங்கி எளிதில் வெற்றிபெறுவீர்கள்.
கமண்டுகளில் கேட்கப்படும் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு தொகுத்து பதில் அளிக்கப்படும்.
குருவே சரணம்!
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments