Ticker

6/recent/ticker-posts

ஆன்மீகம் கோவில் குளம் வழிபாடு

குரு பார்க்க கோடி தோஷம் விளகும்

குரு பார்க்க கோடி தோஷங்கள் விலகும், சாந்தம் ஆகும், கிரக வினைகளால் மனது பேதலித்து திரிபவர்களை சாந்தபடுத்துவது தெய்வ வழிபாடு மட்டும்தான் எல்லா கிரகங்களையும் தன் பார்வையால் சாந்தமாக்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மனம் சாந்தப்பட்டால் செயல்கள் வெற்றிபெறும், இதை குருபகவான் தன் சுற்றுகளில் வந்து தன் பார்வைகளால் சாந்தபடுவது நாட்கள் வருடங்கள் பல ஆகும். இந்த நிகழ்வைத்தான் நம் முன்னோர்கள் குரு என்ற கோவில் கட்டி மனம் என்னும் குளம் வெட்டி அந்த ஸ்தலத்தில் வருவோர்க்கு கிரக கோளாரால் ஏற்பட்ட சஞ்சலங்களை குறைப்பதற்கு ஏற்பட்ட வழிமுறை வழிபாடுகள்தான், ஊர்ந்து உன்னிப்பாக கவனித்தால் எல்லாம் விளங்கும். கோவில்- குரு குளம்- சந்திரன் அமைதியாக்கி அகத்தை நோக்க வைக்கும் இடம்.
அனைத்து கோவில்களிலும் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் போன்ற அமைப்புகள் உள்ளன ஜாதகத்திலுல்ல தோஷத்தை கழிக்கும் மிக முக்கியமான யோகம் எல்லா கோவில்களிலும் உணரலாம்.
குருவே சரணம்

பஞ்ச பூதத்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?

நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயாம்
பிரபஞ்சம் பஞ்ச பூதத்தால் ஆனாது அதன் விகிதாசாரம் குறையும் போது, தன்னைத்தானே சரி செய்து கொள்ள முயலும் அப்போது பஞ்ச பூத சீற்றங்கள் ஏற்படும்.
எந்த ஆதாரத்தையும் இயற்க்கைக்கு மாறாக அழிக்கும்போது ஒரு கட்டத்தில் தன் பற்றாக்குறைகளை தானே நிவர்த்தி செய்து கொள்ள முற்படும்போது இயற்கை சீற்றங்கள் உருவாகும் அதற்கு நவக்கிரகங்களின் பெயர்ச்சிகளை சாதகம் ஆக்கி கொள்ளும் நவக்கிரக கட்டுபாட்டில் இருக்கும்போது நாம் தெரிந்தோ தெரியாமலோ அழித்த பஞ்ச பூதங்களை நவக்கிரக கட்டுபாடு இழக்கும்போது பாகைக்கு ஏற்ப தானே சரி செய்து கொள்ளும் அப்போது ஏற்படும் சீற்றம்தான் சுனாமி சூறாவாளி கனமழை வெள்ளம் நிலநடுக்கம் நெருப்புக்குழம்பு.
இயற்கையை அழிக்கமால் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை ஆரோக்கியமான நீன்ட ஆயுள் உள்ள வாழ்க்கை. நாம் பாதை அழிவை நோக்கி செல்கிறது பஞ்ச பூதங்களை காத்து வணங்குவோம்.

ஐந்தாம இடம்

மனசு, இதயம், மகிழ்ச்சி, எண்ணம், திட்டம்,
ஆசைகள், பூர்வ புண்ணிய ஸ்தானமும் இந்த இடம்தான். 
உன்மனாதால் நினைக்கும் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்கவேண்டும் அவைகள் பாவங்களாக மாறக்கூடாது உன் மன எண்ணங்கள் வக்கரத்தனமாகவும் வஞ்சிக்கும் நினைவில் இருந்தால், நீ எத்தனை புண்ணியங்கள் செய்தாலும் அன்னதானங்கள் செய்தாலும் எத்தனை மகான்களை தரிசித்தாலும் உன் ஜாதக யோகங்கள் வேலை செய்யாது தரித்தர யோகத்தில் நிர்கதியாய் நிற்பாய்.
பாவகணக்கில் வரவு வைக்கப்பட்டு கோட்சார ரூபத்தில் வாடவைத்து வதங்க வைத்து உன்னை கொண்று விடும்.
ஐந்திற்கு ஐந்தாம் இடம் என்பது பூர்வ ஜென்ம புண்ணியஸ்தானம் தகப்பனார் அதற்கு ஐந்தாம் இடம் உன் பிறப்பு லக்கனம் அல்லது ஜீவன் ஆகும்
நான்கிற்கு ஐந்தாம் இடம் எட்டாம் இடம் பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு விரயம்தான் மரணம்.
மேலும் சூட்சமம் நோக்க நோக்க புரியும் தெரியும் மற்ற பதிவில் பார்க்கலாம் 

ஊழ் விதி (Fate)

குறள் 330

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
மு.வரதராசனார் உரை
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
விதி என்பது என்ன?
விதி மதி வழி வந்து நடக்க இருக்கின்ற செயலை நடத்தி காட்டும்.
ஒரு செயல் கர்மாபடி நடக்க நவ கிரகங்கள் செயல்படுத்த இருக்கின்ற காரியங்களை மனம் மூலம் தூண்டி விடும்.
நீ நன்மை செய்தாலும் தீமைகள் செய்தாலும் உன் மனம் அறியாமல் நடக்காது.
அதனால் தான் மனதை அடக்க மார்க்கம் உண்டு மனம் தூண்டுகின்ற ஆசைகளை சுருக்கி கொண்டால் கர்ம வினைகளை கடந்து விடுவாய்.
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்.
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது.

ஆண்டவன் எல்லோருக்கும் படி அளப்பான் பள்ளிக்கூட வாசலில் சோளக்கதிர், மிட்டாய் வியபாரம், மாங்காய் வியபாரம் செய்கிறவர்களுக்கும் ஆண்டவன்  படி அளக்கிறான் அது கேவளமல்ல லட்சக்கணக்கில் முதலீடும் கௌரவமும் பார்த்தால்தான் வாழ்கை மலைப்பாகத்தெரியும், கஷ்ட காலத்தில் உங்கள் தேவைகளுக்கு ஆண்டவன் படிஅளப்பான் வழிகாட்டுவான் ஆசைகளுக்கு வழிகாட்ட மாட்டான், அந்த காலத்தில் நீங்கள் படும் ஆசைகள் கடன்களாக மாறி உங்களை துன்பத்தில் மிதக்க வைக்கும் ஏன் சில சமயம் உயிரைக்கூட பறித்து விடும் அதற்கு சமமான அவமானத்தை தாங்கி கொள்ளலாம்.

ஆறுக்கு உடையவன் இரண்டில் இருந்தால் பிறர்தனம் உங்கள் கையில், இதை யோக காலத்தில் பெற்றால் யோகமாக அமையும் துன்ப காலத்தில் உங்களுக்கே வில்லங்கமாக மாறிவிடும், யோக காலத்தில் ஆசைகளுக்கு ஆண்டவன் வழிகாட்டுவான், அந்த காலத்தில் உங்கள் ஆசைகளை தீரத்துக்கொள்ளுங்கள் இந்த காலத்தை வழிகாட்டுபவர்தான் உண்மை ஜோதிடர். சூரியன் செவ்வாய் சேர்க்கை பணி புரியும் இடத்திலேயே பிரச்சனைகளை உருவாக்கி வேடிக்கை பார்க்கும், எத்தனை இடம் மாறினாலும் இந்த வேலையை செவ்வனே நிறைவேற்றும் இதற்கு சனி சம்பந்தம் ஏற்பட்டால் இதன் மூலம் அரசு பகை ஏற்படும் கலகம் செய்ய தூண்டும். கலகவாதியாக திரிவார். கடன் வாங்க கொடுக்க நேரம்காலம் வேண்டும்.

ஜோதிடம் - கர்மவினை

ஜோதிடம் என்பது கைகாட்டி போன்றது, போகும் பாதையைத்தான் காட்டி கொடுக்கும், அழைத்துச்செல்லாது, அழைத்து செல்லும் வாகனம் கர்மவினையால் ஆனது, கர்மவினை என்பது நீ செய்த பாவ மூட்டைகளால் ஆனது, உன்பயணம் சிறக்க புண்ணியம் தேவை. ஜோதிடம் பார்த்தவுடன் உனக்கு யோகம் வேலை செய்யாது. வினையால் விளையும் காலத்தை அறிந்து கொள்ளலாம்.

இவர் கெடுதல் மட்டுமே கூறிக்கொண்டு இருக்கிறார் நல்லது கூறுவதில்லை, என்று பல பேர் மனதில் கூறிக்கொண்டும் சில பேர் பதிவிகளிலும் கமண்ட் மூலமாகவும் தெரிவித்துகொண்டு இருக்கிறார்கள் இங்கு பல ஆத்மாக்கள் எல்லா சுகங்களையும் பரிகொடுத்து விட்டு விடை கிடைக்கிடைக்குமா? யாராவது கூறுவார்களா? என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள், கிரகங்கள் கொடுக்கும் நன்மைகளில் கெடுபலன்கள் இல்லை ஆனால் கிரகங்கள் கொடுக்கும் தீமைகள் சிதறி அடிக்கும் கால அளவும் அறியமுடியாது மனம் வெறுத்து வாழும். இந்த காலத்தை அறிந்து மற்றவர்களுக்கு வழிகொடுக்கலாம், பொருட்சேதத்தை குறைக்க வழிசெய்யலாம், ஆதிபரிகாரங்களை செய்து அடங்கி வாழலாம்.

சோதனைக்காலத்தில் எடுக்கும் அத்தனை முடிவுகளும் சுகம் பெறாது. மனம்மானது பாவங்களை செய்யத்துனியும், மனம்போனபோக்கில் வாழ மனது புரியவைக்கும். இதற்கு இந்தகாலகட்டத்தில் நல்லோர் துனணவேண்டும். மனைதைகட்டுபடுத்த ஆலயங்கள் சென்று மனதை செம்மையாக்கி கொள்ளவேண்டும்.

எல்லாபிறப்பும் எடுத்த பிறகுதான் கடைசி பிறப்பு மானிட பிறப்பு, எடுத்த பிறப்புகளுக்கு எல்லாம் காருண்யம் செய்யவேண்டும் கிரக வேதனையில் சிக்கி தவிக்கும் நம் பிறப்பிக்கும் காருண்யம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால்தான் நம்மீது பற்றித்தொடரும் கர்ம வினை கரையும். இதைத்தான் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு என்று வள்ளல் பெருமான் கூறினார்கள்.

ஆதிபரிகரங்கள் 

அன்னசத்திரம் அமைத்தல், ஆலயங்கள் கட்டுதல் (புதுபித்தல்), குளம் வெட்டுதல் (எல்லா உயிர்களுக்கு நீர் ஆதாராம்) தெரு ஓரங்களில் மரம் நடுதல், சுமைதாங்கி அமைத்தல், எழுத்தருவித்தல், இவை எல்லா வற்றிலும் ஜீவகாருண்யத்தை பார்க்கலாம்.

You May Also Like 

சக்கரவர்த்தி கலியபெருமாள்.

Post a Comment

0 Comments