Ticker

6/recent/ticker-posts

அக்கினி காரியங்கள், அவதார சின்னங்கள் -பகுதி 99

அக்கினி காரியங்கள், அவதார சின்னங்கள்

திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி!

என் அனுபவம் சிலர் கூறலாம், சிலர் கூறாமலும் இருக்கலாம், நான் ஊரில் இருக்கும் சமயத்தில் என்னை பார்க்க வருபவரும் சரி, அல்லது தபால் மூலம், நேரில், மின் அஞ்சல் மூலம் ஏன் என் உறவு மற்றும் குடும்ப நபர்களின் ஜாதகம் பார்க்கும் போதும் சில ஜாதகங்களை மிக எளிதாக எந்த பிரச்சனைகளை சந்திக்காமல் பார்த்து விடுவேன், சில ஜாதகங்களை நான் பார்க்க முற்படும்போது  நான் படும் பாடு இனம்புரியாத உடல் இருக்கம், பல்வேறு இடர்பாடு களிடையே, சில சொல்ல இயலாத பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டு வருகிறேன் சிலர் இதை உணரலாம் சிலர் இதை உணராமலும் இருக்கலாம். இந்த அன்டமும் பின்டமும் பஞ்ச பூதத்தால் ஆனது பஞ்ச பூதங்களின் நிகழ்வுகள் அனைத்தும் நவக்கிரங்களின் கட்டுபாட்டில் இயங்குகிறது, நவக்கிரகங்களின் பாதைகள் 27 நடச்திரங்கள் மூலம் நிறைவேற்றி காட்டுகிறது, 

கர்மவினை பிண்டத்தின் காலக்கணக்குதான் ஜோதிடம் ஆகும், இதை பகுத்து அறிந்து பலன்கூறுபவர் கர்மவினை சந்தியில் நசுக்கபடுபவார்கள், ஒரு திசைக்கு ஒரு திசை ஒத்துபோகாது, ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் ஒத்துபோகாது, அதை எதிர்கொள்வதுதான் பல்வேறு கவசங்கள் அணிந்து எதிர்கொள்வர் அந்த கவசங்கள் அணிந்தோ, அதை பன்படுத்தியோ, அக்னி காரியங்கள் செய்தோ தன்னை கிரக தாக்குதலை தாங்கும் கவசமாக பயன்படுத்தி வெற்றிக்கண்டனர், இது வெறும் கதை அல்ல, காரிய சித்தி என்பர், முன்னோர்கள் பயன்படுத்திய சின்னங்களும், ஆயுதங்களும் வண்ணங்களும், நவரத்தினங்கள் நெற்றியில் அனியக்கூடிய சின்னங்கள் அனைத்தும் பாதுகாக்கும் கவசங்கள் ஆகும. ஒவ்வோரு இனத்தவரும், நாட்டவரும் பயன்படுத்தி வந்தார்கள் இதை காலபோக்கில் இழக்க ஆரம்பித்தோம், இதை விளையாட்டாக நினையாமல் இதில் மறைமுக சூட்சமத்தை உணர்ந்து அதை உபயோகபடுத்தி வளமை அடைய வேண்டுகிறேன். இந்த உபயோகங்களை ஆதி நூல்கள் அற்புதமாக விளக்குகிறது இதைத்தான் பரிகாரம் என்ற பெயரில் பல மாற்றங்களோடு வெளிவருகிறது, அக்கினிகாரியங்களையும், அவதாரசின்னங்களையும் அவர்கள் பயன்படுத்திய வழியில் கவசமாக பயன்படுத்தி இந்த புன்னிய பூமியில் பாவமில்லா பெருவாழ்வு வாழ வழ்த்துகிறேன்.

குருவேசரணம் குருவடிசரனம் திருவடிசரனம்

(அக்கினி காரியங்கள், அவதார சின்னங்கள் என்ற தலைப்பில் மூன்று பதிவுகள் எழுதி இருக்கிறேன் விரைவில் இறை அருளால் வெளிவரும் இதன் மகத்துவம் பல உகங்கள் அறிந்தது)

அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்

ஜோதிடத்தில் திறக்க முடியாத பல பூட்டுக்கள் உள்ளன அவற்றிற்கு சாவிகள் மர்மாக சூட்சமாக நம் முன்னோர்கள் கொடுத்து சென்று உள்ளனர், சிலர் தெரிந்தும் மனதளவில் வைத்துக்கொண்டு பலன் கூறி வருகின்றனர் பலர் தன் சீடர்களுக்கும் மாணவர்களுக்கும் ரகியாமாக கற்றுக்கொடுத்தும் சூட்சமாக சொல்லிக்கொடுத்தும் வருகின்றனர்.

இன்னும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுடன ஜோதிடம் சுழன்று வருகிறது அவைகள் ஏட்டிலே எழுதபடாத சூட்சமாக சொல்லி வருகின்றனர் ரகசியம் காத்து வருகின்றனர் பல உதாரணங்களை அதற்கு சான்றாக தர முடியும். தன் பரம்பரைக்கும் நம்பிக்கை உள்ள சீடர்களுக்கும் தீட்சையாக கடைகூறு காலத்தில் கோடிட்டு கூறிச்சென்றுள்ளனர். 

அவைகளை இன்னால் வரை எந்த நூல்களும் வெளிப்படுத்தி எழுதவில்லை இது நிதர்சனமான உண்மை.

கர்ம வினை என்பது உனக்கு தெரியாத ஒன்று மாயை கர்ம வினையால் நல்லதும் உண்டு கெடுதல்களும் உண்டு ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் கர்ம வினைகளை நடத்த கூடியவர்கள் அவைகள் அனைவரும் நம் கர்ம வினைகளை உற்பத்தி செய்து கொண்டே இருப்பார்கள் நல்லதும் உண்டு கெடுதல்களும் உண்டு வெளிப்படுத்தும் நேரம் மாய கிரகங்களான ராகு மற்றும் கேதுக்களுக்குமட்டுமே உரிமையை தந்துள்ளனர் அவைகள் சரியான நேரத்தில் சரியான காலத்தில்  வெளிபடுத்திகொண்டே இருக்கும் எப்போது தடை விதிக்கவேண்டும் எப்போது கொடுக்கவேண்டும் இவைகளில் நிரந்தர தடை தற்காலிக தடை என பகுத்து அளித்து வேடிக்கை பார்க்கும். கர்ம வினை என்ற மாய கணக்கு மாய கிரகங்களான ராகு கேதுக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அந்த ராகுபகவான் கேதுபகவான் நடக்கும் தசைகாலத்தில் சிலர் மிகப்பெரிய இழப்புகள், பிரிவு, அவமானங்கள் முரிவு, பொருட்சேதங்கள், காணாமல் போதல் போலீஸ் கேஸ், விஷ பயங்கள் தற்கொலை முயற்சி உயிர்சேதங்கள், நட்புகள் பிரிவு ஏற்படும் திடிரென சீறுவார்கள், பெண்கள் விஷயத்தில் அவமானங்கள் தகாத உறவுகள் அடிதடி பஞ்சயாத்துகள், மதுவின் உச்சத்திற்கு சென்று நீசபடுத்தும், மூலைநரம்பில் பிரச்சனைகள் உள் குடலை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நட்பும், கடன் தீராத பயம் செய்வினை தோஷங்கள் என வந்து மிரட்டிச்செல்லும். பிறக்கும் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை 

பிறசவம்பார்க்கும் மருத்துவரைச் மிரட்டும் தொடர் ரத்தப்போக்கு உயிரை பிரிக்கும் போராட்டம்.

பெரிய கொடுமை சிலருக்கு இதன் பிறகு வரும் குருதசை கர்மவினைக்கேற்ப பழிவாங்க துடிக்கும்

ஏன் எப்படி எப்போது எதனால் இதை எவ்வாறு என்பதை பிறகு பார்க்கலாம் உங்கள் அனுபவத்தை பதிவிடுங்கள்.

(*அனுபவ பதிலுக்கு பிறகு பதிவின் விதிமுறைகள் விளக்கப்படும்*) 

தானங்கள் பதினாறு.   தொடர்-23

திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி!

குருவடிசரணம் திருவடிசரணம்,

தானங்கள் பதினாறு அன்னதானம், பூமிதானம், கன்னிகாதானம், கோதானம், ரிசபதானம், பொன்தானம், வெள்ளிதானம், ஆடைதானம், படுக்கைதானம், வாகனதானம், தீபதானம், எள்தானம், தானியதானம், வீடுதானம், வித்தைதானம், அபயதானம் இந்த தானங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ எவர் ஒருவர் செய்கின்றாரோ அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்தும் அல்லது ஜாதக ரீதியாக உள்ள கர்ம வினைகளுக்கும் சாப தோஷங்களுக்கும் பரிகாரமாக அமைந்துவிடுகின்றன ஆதிகாலம் கொண்டு இன்றுவரை அரசர்களும் ஆன்மிகவாதிகளும் அரசியல்வாதிகளும் சித்தர்களும் பல தானங்கள் செய்து கர்ம வினைகளுக்கு பரிகாரம் தேடிக்கொண்டனர் இந்த தானங்கள் மொழி, இனம், மதம் மற்றும் உலக நாடுகள் எங்கும் உள்ள மக்கள் தான் அறியாமல் தன்னால் இயன்ற வரை தானங்கள் செய்து கர்ம வினைகளை போக்கி கொள்கின்றனர், இவைகள் எல்லாம் பூர்வஜென்ம புண்ணிய கணக்கில் சேர்ந்து விடும் எந்தந்த தானங்கள் எந்தந்த கர்ம வினைகளை போக்கும் என்பதை பின் வரும் பதிவுகளில் காணலாம்

பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது

சித்தர்கள், ஞானிகள், எல்லாம் அதிகம் பேசமாட்டார்கள் எப்போதும் நிஷ்டையில் இருந்து கொண்டு லோகத்தையும் லோக ஷேமத்திற்காகவும் நிந்தித்துக் கொண்டு இருப்பார்கள் அவர்கள் வார்த்தைகளும், பேச்சுகளும் சுருங்கத்தான் இருக்கும் ஆனால் அதன் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும், அப்படி எழதப்பட்டவைதான் வேதங்கள், ஸ்லோகங்கள், ஜோதிடங்கள், மூலமந்திரங்கள் இவைகள் வரிகள் சிறிது, கீர்த்திகள் மிகப்பெரியது படிக்க, படிக்க உங்கள் கர்மம் மாறும் எனவே பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் படித்து உரு ஏற்றி கொள்ளுங்கள் இதன் மூலம் திரு ஏறும், திரு ஏறுவதன் மூலம் தீரும் வினை.

குருவேசரணம் குருவடிசரனம் திருவடிசரனம்

உருஏற திருஏறும் திருஏற தீரும் வினை ( உன் மிகப்பெரிய செல்வம் வினைதான் ஏழு ஜென்மத்திற்கும் பற்றித்தொடரும்) 

திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி

அவர் அவர் பார்வை மற்றும் புரிதல் பொருத்து ஜோதிடத்தின் இறுதி நிலை புலப்படும், ஜோதிடம், ஞாணம் இவற்றின் புரிதல் வேண்டும், ஜோதிடத்தால் என்ன கிடைக்கப்பெறும் என்ற புரிதல் வேண்டும், அதன் பிறகுதான் ஆத்மநிலை அடையக்கூடும், அறிஞர்கள் ஞானிகள் எழுதியக்கலை ஞானக்கல்வி புனிதமானது ஆனித்தரமானது, நினைத்தது நடக்கவேண்டும் என்ற நினைப்பில் ஜோதிடம் பார்த்தால் அந்த ஞானம் இருக்கிறதா என்ற புரிதல் வேண்டும், உன் மிகப்பெரிய செல்வம் வினைதான் ஏழு ஜென்மத்திற்கும் பற்றித்தொடரும், பாவ வினை கறைப்பதற்கும், புண்ணிய வினை சேர்பதற்கும் வழிக்காட்டபடும், 

நானும் திருவாதிரை நட்சத்திரம் என் அப்பன் சிவனும் திருவாதிரைதான் நான் அவரைப்போல ஆகவேண்டும் என்றால் முடியுமா? அவரிடம் இருந்து எதைப்பெற முடியுமோ அதைப்பெறலாம், அவரைப்போல என்னை எல்லோரும் வணங்க வேண்டும் என்றால் அதற்கான யோக்கிதை வேண்டும் அதுபோல என் நட்சத்திரம் சுவாதி என் தெய்வமான் யோகி சுரத்குமார் நட்சத்திரம் சுவாதி அவரைப்போல நான் ஆக முடியாமா என்றால் சிந்திக்வேண்டும், ஒருவர் ஒரு சிலரோடுதான் இனங்கி இருப்பார்கள், ஒருசிலர் மட்டும் உதவி செய்வார்கள், ஒருசிலரை மட்டும் வணங்குவார்கள் ஒருசிலரை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பார்கள், ஒருசிலரோடு கடைசிவரை எதிரியாகவே இருப்பார்கள், அவைகள் யார் யார் என்று பகுத்தரிந்து நட்சத்திர வாரியாக பிரித்து சாஸ்த்திரத்தில் எழுதி உள்ளார்கள் இதைத்தான் திருமண பொருத்தம், நட்பு, தெய்வம், குரு குலதெய்வம், ஆயுதம் வழிபாடு, மருத்துவம் என்று பிரித்து எவற்றை வணங்கினால், எவரிடம் நம் வியாதியை அரிந்தால், எவரிடம் உதவி கோரினால் துரிதமாக செயல்படும், எந்த ஆயுதத்தை வைத்திருந்தால் நமக்கு உதவியாக இருக்கும் என்பதை பகுத்தரிந்து பழகிவந்தனர், இந்த நிகழ்வுகளை பழய இதிகாசங்களில் காணலாம், இந்த பரிகாரம் உண்ணதமான பரிகாரம்

இந்த பதிவு புரியவில்லை என்றால் ஜோதிடம் புரியாது

You May Also Like 

அக்கினி காரியங்கள் அவதார சின்னம்

உங்கள் சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments