வருட பலன்கள் குரு பெயர்ச்சி சனி ராகு கேது பெயர்ச்சி
இந்த பதிவை 2021 வருட பலனாகவே எடுத்துக்கொள்ளலாம் ஓம் சிவாயநம சிவ!
குரு சனி ராகு கேது (வருட கிரகங்கள்)
செவ்வாய்
எந்த ஒரு வருட கிரகங்கள் பெயர்ச்சி ஆவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பலன்களை கொடுக்க ஆரம்பிக்கும் நல்ல பலன்களாக இருந்தாலும் கெடுபலன்களாக இருந்தாலும் முதலில் ஒரு சலனத்தை ஏற்படுத்திய பிறகே தன் காரகங்களை கொடுக்கும்.
கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு ஆனால் காரகங்கள் வளம் பெறும் விருத்தி அடையும் ஒன்றுக்கொன்று பகையானால் அதன் காரகங்கள் பாதிப்பு ஏற்படும் இணைவு இணைகின்ற இடம் மற்ற கிரகங்களின் பார்வைகளை பொருத்து பாதிப்பகளின் விகிதாசாரங்கள் கூடும் குறையலாம்.
பாதிப்பை மட்டும் எழுதாதே நல்லதையும் எழுது என்கிறது மனம் நல்லது யார்தடுத்தாலும் நிற்காது கிடைத்து விடும் கர்ம பாதிப்புகள் கூட்டு மரணங்கள் நடந்தே தீரும் எந்த மகான்களின் பிராத்தனை உலக மக்களை காக்க மாட்டர்களா என்ற என்னத்தில் பதிவிடுகிறேன் அனைவரின் பிராத்தனைகள் கூட்டு பிராத்தனையாகி வெற்றி அடைய திருவடி வணங்குகிறேன்.
காலம் மிகச்சிறந்த மருந்து மிக கொடியதும் கூட
நடக்க இருக்கின்ற கோட்சாரத்தை நினைத்தாலே பயமாக உள்ளது மீண்டும் என்ன என்ன நடக்க போகிறது என்றே தெரியவில்லை இப்படி பட்ட கால கட்டத்தில் நம் கர்ம பிறப்பு மகா பாவியான பிறப்பாகத்தான் இருக்கிறது புண்ணியங்கள் இல்லை இந்த புனித உலகில். பல பாவங்களை செய்து நம் தலையில் வைத்துவிட்டு சென்று விட்டார்கள்.
மிதுனத்தில் இருந்த ராகு அவர்கள் ரிசபத்தை நோக்கி வர இருக்கிறார்கள் ஆனால் அடுத்து ஆட்சி பெற்ற சனி அத்துடன் ஆட்சி தகுதியில் இருந்த குரு மகரத்தில் நீசம் பெற இருக்கிறார் நீசத்தை நோக்கிய பயணம் குருவின் காரகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் குரு நிலதத்துவ ராசிகளில் ராகு சனியுடன் இணைவு ஏற்பட உள்ளது.
குரு சனி இணைவு தொல்லை தொந்தரவுகளுக்கு இடமில்லை ஆனால் ராகு இணைவு மிகப்பெரிய ஆபத்தை உண்டுபன்னும் கூட்டு மரணங்களை ஏற்படுத்தும் இத்துடன் செவ்வாய் இணைவு ஏற்படும்போது சொல்லவே வேண்டாம் இயற்கை பேரிடர் பேர்அழிவுகள் இயற்கை சீற்றங்கள் நிலபிளவுகள் மண்சரிவுகள் வெடிவிபத்துகள் ராணுவம் காவல் துறையால் ஏற்படும் பிரச்சனைகள் கலவரங்கள் ஏற்படும, விஷ வாய்வுகசிவுகள் ஏற்படும் மண்ணில் உள்ள ரசாயன கிடங்குகள் வெடிவிபத்துகள் உண்டாகும் இதானால் ஏற்படக்கூடிய கூட்டு மரணங்கள் ஏராளத்தை நடத்தி காட்ட இருக்கிறது.
ரிசபம் நிலம் நிலத்தில் ராகு மகர நிலத்தில் நீச குரு அவருடன் மகர ஆட்சியாளர் சனி இவர்களுக்கு திரிகோணத்தில் அல்லது பாகை நெருக்கத்தில் உஷ்ணமான நெருப்பு செவ்வாய் வரும்போது நிலத்தை பிளப்பதும் எரிமலைகள் அதிமாக வெப்பத்தை வெளிப்படுத்தும் கிடங்குகள் அழிவதும் நிலத்தை நெருங்கும் விமானங்கள் வாகனங்கள் விபத்துக்கள் உள்ளாவதும் உயர்பலிகள்(கூட்டுமரணங்கள்) மண்சாரந்த அழிவுகள் மண்ணில் ஏற்படும் இயற்கை பேர்அழிவுகள்(பூகம்பம்) மண்சரிவுகள்.
எப்போது எல்லாம் ராகு சனி உடன் செவ்வாய் இணைவு ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் அதன் காரகத்துவங்கள் பாதிப்பு அடையும். பொதுமக்கள் கலவரம் தடியடி கட்டபஞ்சாய்த்து இதனால் ஏற்படக்கூடிய உயிர் சேதங்கள்.
இந்த இணைவுகளில் சுக்கிரன் 1 5 9 சப்தம் ஸ்தானம் வீடுகொடுத்தவருடன் இணைவு ஏற்படும் போதும் சுக்கிர காரகத்துவங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் அதாவது பெண்கள் நடிகை நடிகர் மரணங்கள் அவமாணங்கள் உண்டாகும் தற்கொலை முயற்சி மேற்கொள்வார்கள் வாகணம் விபத்துகள் ஏற்படும்.
இப்படி பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்காமல் இருக்க இறைவனை பிராத்தனை செய்வோம்
ஜோதிடம் தோற்று பிராத்தனை வெற்றியாகட்டும்.
சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்
*************************************************************************
2018 ஆம் வருடம் முடிந்து 2019 ஆம் ஆண்டு ஆங்கில வருடம் பிறக்க இருக்கிறது 2018 சிலர் வாழ்க்கை முன்னேற்றங்கள், நல்ல கல்வி மேற்படிப்பு குடும்பம் மனைவி மக்கள் வருமானம் பதவி உயர்வு வேலைவாய்ப்பு தோழில் முன்னேற்றம் என நற்பலன்களை அடைந்திருப்பீர்கள் சிலர் எதிர்மறையான பலன்களை அடைந்திருப்பார்கள் வர இருக்கின்ற புது வருடத்தில் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க்கையில் நல்ல நிலையில் கொண்டு செல்ல இறைவனை “வேத ஜோதிட குழும” சார்பாக பிராத்தனை செய்கிறோம், கடந்த வருடத்தில் கர்ம வினைகள் சார்பாக சில விரும்பத்தகாத செயல்கள் நடந்து அதற்கு நான் பொருப்பாக இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். வரும் புதிய வருடத்தில் எல்லோரும் அனைத்து அன்பர்களும் நல்ல உடல் பலத்தோடும் ஆரோக்கியத்தோடும் எல்லா செல்வங்களையும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன், நான் பலன் கூறும்போது சிலர் நமக்கு கெடுதலாக கூறுகிறாரே என்று கூட நினைத்து வருந்தி இருக்கலாம் நான் பொது பலனாகத்தான் கூறி இருந்தேன், அதனால்தான் பலன் கூறுவதையே நிறுத்திவிட்டேன். நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை என்னை யாரும் எதிரியாக பார்க்க வேண்டாம், பலருக்கு பலன் கூறி இருக்கிறேன் சிலருக்கு கூறவில்லை அந்த கடனை வரும்காலங்களில் பலன் கூறி விடுகிறேன்
என்று அன்புடன்!
சக்கரவர்த்தி கலியபெருமாள்
*************************************************************************
ஶ்ரீ முருகன் திருவடிசரணம்
கோட்சார நிகழ்வுகள் 2019
தனுசு சனி கேது அதி சாரம் பெற்ற குரு
மிதுன ராகு சந்திரன்
கும்ப சூரியன்
சுக்கிரன் ராகு
புதன் ராகு
மேச செவ்வாய் இவர்களின் பங்கலிப்புகள் மற்றும் மேசத்தில் சூரியன் வருங்காலம் வரை சில முக்கிய நிகழ்வுகள் ஏற்படும், அதுபோல மேச செவ்வாய் சிம்மம் வருங்காலம் வரை பல முக்கிய நிகழ்வுகள் ஏற்படும். சூரியனும் செவ்வாயும் குரு ராகு சனி கேதுக்களின் திரிகோணங்களில் வரும் போது நல்லதும் கேட்டதும் மாறி மாறி நடந்தேறும்.
பல அந்தரங்கள் அம்பலமாகும், மறைமுகமாக நடத்தபட்ட கேளிக்கை கிளப்புகளின் அந்தரங்கள் வெளிவரும். இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இருட்டில் நடந்தவைகள் வெளிச்சத்துக்கு வரும், கலையை பயன்படுத்தி செய்த அந்தரங்கள் அம்பலம் ஆகும்.
நீதித்துறை நெருக்கடிகளை சந்திக்கும், நிதி துறை வங்கிகள் சில நெருக்கடிகளை சந்திக்க நேரும். பல இடங்களில் போராட்டங்கள் கலவரங்கள் ஏற்படும், சில போலி மத குருக்கள் பல பிரச்சனைகளில் சிக்குவார்கள், பல மதம்சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரும். கட்சிக்குள் பல பிரிவிணைகளை ஏற்படுத்திவிடும் சிதரடிக்கும். மாநிலம் மாவட்டங்கள் நகரங்கள் பிரிவினைகளும் அல்லது புதியவைகள் உருவாக்கப்படும், ஒரு அரசியல் வாதியின் வாழ்க்கை முடிவை நோக்கிய பயணம். மத சார்ந்த சட்ட திருத்தங்கள் ஏற்படும். 🌏 ஆட்சி மாற்றம் ஆட்சியாளர்கள் மாற்றம் முக்கியமான காவல் துறை அதிகாரிகள் மாற்றம் ராணுவம் அதிகாரிகள் மாற்றம், கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படும். சில மாற்றங்களால் கலவரங்கள் உண்டாகும்.
கோர விபத்துகள் வெடி விபத்துகள் குண்டு வெடிப்புகள் துப்பாக்கி சூடுகள் போர் பதற்றம் போராட்டங்கள், தீவிபத்துகள், காவல் துறைக்கு கலங்கம் ஏற்பட்டு மறையும், விமான விபத்துகள் தீவிரவாத மிரட்டல்கள் தாக்குதல் ஏற்படும், பல சமூக விரோதிகளுக்கு காவல் துறையினரால் நேரடியாக தீர்ப்பு வழங்கபடுவார்கள், பிரபலமான அரசியில் வாதிகள் பாதுகாப்பை பலபடுத்தி கொள்ளவேண்டும்.
பிரபல எழுத்தாளர், அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் , பத்திரிக்கையாளர் பிரபல பேச்சாளர்கள் பெரிய பிரச்சனைக்கு உள்ளாவர்கள், அவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வரும்
கலைத்துறையில் புகழ் பெற்றவர் வாழ்க்கை முடிவை நோக்கிய பயணம். அனைத்து தவறான ரகசியங்களும் வெளிச்சத்த்திறகு வரும். ( சுக்கிரன் ராகு)
கல்வி நிறுவணம், ரூபாய் நோட்டுகள், பத்திரம் மோசடிகள் கண்டுபிடிக்கபட்டு சரிசெய்யபடும். அனைத்து பிரச்சனைகளும் எந்த ஆபத்துகள் இல்லாமல் தீர்வு பெற எல்லாம் வல்ல ஆண்டவனை எல்லோரும் இணைந்து பிராத்திப்போம்
உங்கள் பார்வை ஜோதிட ரீதியாக இருக்கட்டும் இது கிரக இணைவுகளின் பலன்கள்.
குருவேசரணம்
0 Comments