ஜோதிட கேள்வி பதில்கள்
1) ஏழரை சனி அட்டமத்து சனி நடக்கும்போது திருமணம் செய்யலாமா?
திருமணம் செய்யலாம் ஆனால் சந்திர தசை அல்லது ராகுதசை நடந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
விபத்துகளையும் உயிர்ச்சேதத்தையோ பொருட்சேதத்தையோ அல்லது அவமானங்களையோ உண்டு பன்னும் வம்பு வழக்கு கேஸ் உடல்நலம் குன்றுதல் மருத்துவத்திற்கு புலனாகாத வியாதிகளை உண்டு பண்னும். தடை தாமதங்கள் ஏற்படும் சோம்பேறித்தனைத்தை உண்டு செய்யும். கர்ம வினை பலன்களை அனுபவிக்க செய்யும் புண்ணியம் செய்தவர்களுக்கு செய்த புண்ணியங்கள் அரனாக இருந்து பாதுகாக்கும்.
செய்தொழிலை நஸ்டபடுத்திவிடும் தெரிந்த தொழிலை கவணமாக செய்து வரவேண்டும் தெரியாத தொழிலை அல்லது புதிய தொழிலை செய்யக்கூடாது கடுமையான அலைச்சலையும் அவமாணங்களையும் உண்டு செய்யும்.
2) எனக்கு குலதெய்வம் தெரியவில்லை எந்த தெய்வத்தை வணங்கலாம்?
குலதெயவம் தெரியாதவர்கள் குழப்பம் அடையத்தேவை இல்லை உங்கள் மனதைக்கவரும் ஏதாவது ஒரு சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று அவரையே குருவாகவும் குலதெய்வமாகவும் மனப்பூர்வமாக நம்பி வழிபடுங்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டல் கிடைக்கும்.
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments