நிருதி மூலை என்றால் என்ன? அதன் சுப அசுப பலன்கள் யாவை?
வீட்டின் அல்லது மனையின் தென்மேற்கு திசையில் அமையபெற்ற பகுதி நிருதி முலை அல்லது கன்னி மூலை அல்லது கணபதி மூலை என்று பெயர்.
இந்த நிருதி மூலை 90 டிகிரிக்கு சரியாக அமையவேண்டும் மனையின் நிருதி மூலை மேடாக இருக்கவேண்டும். அந்த இடத்தில் பள்ளம் கழிவுநீர் தொட்டி, கழிப்பறை குளியல் அறை அமைக்க கூடாது. அந்த இடத்தில் பூஜை அறை பணப்பெட்டகம் அமைக்கலாம். ஆழ்துளை கிணறு அமைக்ககூடாது.
நிருதி மூலை பாதிக்கபட்டால் வீட்டில் செல்வம் தங்காது கடன் அதிகரிக்கும் தொழில் பாதிக்கபடும் நஷ்டபடும் நோய்களால் பாதிக்க படுவார்கள் வீட்டில் நிம்மதி இருக்காது பெண்களால் தொல்லைகள் ஏற்படும் அகலாமரணம் கூட ஏற்படும். தினம் குடும்பத்தில் சன்டை இருந்து கொண்டே இருக்கும். மன அழுத்தம் இருதய நோயாளி சர்க்கரை வியாதி நபர்கள் அந்த வீட்டில் உருவாகி விடுவார்கள்
வீடு கட்டி அந்த வீட்டில் முதல் ஐந்து வருடம் கழித்து அனைத்து பிரச்சனைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொடுமை படுத்தும்.
நிருதி பாதித்தால் மொத்தத்தில் குடும்பம் நிம்மதி இழந்து தவிக்கும்.
என் அனுபவ வாஸ்து சாஸ்திரம்
பஞ்ச பூத தத்துவங்கள் எங்கல்லாம் மாறுபடுகிறதோ அங்கு தன்னைத்தானே சரி செய்து கொள்ள முயலும் அப்போது பஞ்சபூத சீற்றங்கள் ஏற்படும் இதைத்தான் நாம் அழிவாக ஏற்றுக்கொள்கிறோம் தன்னை தானே மாற்றிக்கொள்ள நினைக்கும் போது நவக்கிரகங்களின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும்போது தன் செயல்களை நிறைவேற்றி கொள்ளும். இந்த தத்தவம்தான் வாஸ்து குறைபாடுஒரு சமதளபரப்பில் எந்த குற்றங்களும் கிடையாது ஒரு மரமோ ஒரு சுவரோ ஒரு பல்லமோ உதயமாகும்போது இயற்கை மீறல்கள் ஏற்படுகிறது இயற்கை பஞ்ச பூத தத்தவங்களால் இயங்கி வருகிறது இந்த இயக்கத்திற்கு நாம் குறுக்ககீடாக செயல்படும்போது தன்னை புதுப்பித்துகொள்ள நினைக்கும் அவ்வாறு புதிப்புத்துகொள்ளும் போகும் அந்த இடம் இடஞ்சார்ந்த பொருள்கள் அழிவதற்கு உட்படுகிறது இதுதான் வாஸ்து குறைபாடு ஆகும். எந்த இடங்களுக்கும் பஞ்ச பூத குறைபாடு ஏற்படாமல் நம் நம் செயல்களை தொடங்கினால் அழிவு சக்தி குறைந்து ஆக்க சக்திகளை அதிகபடுத்திகொள்ளலம். அந்த குறைபாடு உள்ள இடத்தில் வசிக்கும் மனிதர்களை முடக்கும் மரங்கள் திடிரென கீழே சாயும் தீ விபத்து ஏற்படும் விவசாயம் சரிவராது இயற்கை வளங்களை அழிக்க முற்படும் நம் முன்னேற்றத்திற்கு தேவையான பொருட்களை சேமிக்க இயலாது.
வாஸ்து பலம் உள்ள இடங்கள் நமக்கு கவசம்போல இருந்து பாதுகாக்கும் எனவே ஒரு இடத்தில் பஞ்சபூத தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கவேண்டும். ஒரு இடத்தை சரி செய்ய வேண்டும் என்றால் முதலில் நீரத்துவத்தையும் நில தத்துவத்தை சரிசெய்யவேண்டும்.
நீர்தத்தவம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உயிர்த்தவும் அழியக்கூடும் நிலத்ததுவம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடல்தத்துவம் பாதிப்படையும்
ஈசானியம் வடகிழக்கு உயிர் உடல் உடல்நலம் முன்னேற்றம் புகழ் செல்வம் மகிழ்ச்சி வம்சவருத்தி இவற்றை பற்றி அறியலாம்
நிருதி கன்னிமூலை தென் கிழக்கு உடல்நலம் இறப்பு செல்வம் உயர்வு ஒழுக்கம் அமைதி வாரிசு இவற்றை பற்றி அறியலாம்.
மனையடி சாஸ்திரம்
நீங்கள் வசிக்கும் இல்லங்களின் வாஸ்து பிரச்சனை வீடு கட்டியுடன் உங்களுக்கு பாதிப்பு அடையச்செய்யாது 60 மாதம் கழித்துதன் அதன் வேலையை தொடங்கும் ஈசானியம் நிருதி அக்கினி வாயுமூலைகளின் தோஷ தொடர்புகள் 60 மாதம் கழித்து ஆட்டத்தை தொடங்கிவிடும்.
ஒரு சில உதாரணங்கள் நிருதி மூலையின் நிரந்தர பள்ளம் இதய நோயாளி நீன்டகால வியாதி கடன் தொல்லைஅந்த இடத்தின் வீட்டு பத்திரம் அடவில் இருக்கும் அந்த இடத்தின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தோன்றும்.
வாயு மூலையில் நிலத்தில் துலையுட்டு நீர் எடுத்தால் அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எலும்பை முறித்துக்காட்டும்.
ஈசானியம் கழிவூநீரால் பாதிக்கபட்டால் குடும்பத்தலைவன் அகால மரணம் அடைவான் பல நோயாலிகளை அந்த குடும்பத்தில் உருவாக்கி விடும்.
இப்படி பல வாஸ்து கெடுபலன்கள் உண்டு பிறகு ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வீடே இல்லாதவர்கள் ஒரு 500 சதுர அடியிலாவது ஒரு மனை கட்டி கொள்ள குடும்ப நபர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்தால் எப்போது வழி பிறக்கும் என்பதை பின் வரும்பதிவுகளில் தெளிவு படுத்துகிறேன்.
வாஸ்து குறையால் அடகு போன வீட்டுபத்திரத்தை எவ்வாறு மீட்பது என்பதையும் பார்க்கலாம்.
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் ஆரணவல்லி தாயார், செவலூர் -புதுக்கோட்டை மாவட்டம்
0 Comments