Ticker

6/recent/ticker-posts

ராசி பலன்கள்

ஓம் ஆம் க்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேயர் நமஹ!

ஆனி மாத பலன்கள்

மேச ராசி பலன்கள் (அசுவினி4 பாதங்கள், பரணி4 பாதங்கள் கிருத்திகை 1ஆம் பாதம் மட்டும்)

ராசி அதிபதி செவ்வாய் 12 ல் மறைவு அது மிகுந்த கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது குடும்பத்திற்குள் சன்டை சலனங்கள் ஏற்படும் உடலில் குறிப்பாக கைகளில் திடரென வெட்டுக்காயங்கள் ஏற்படும் இடறிவிழுதல் தசையில் வலி சிலருக்கு எலும்பில் பிரச்சனை ஏற்படலாம் தீக்காயம் உண்டாகும் கடன் அதிகமாகும் கடன் வாங்க வைக்கும் கவலை ஏற்படும். கோட்சார ராகு சந்திரன் மீது பயணம் வீன் பயம் கெட்ட கனவுகள் செலவுகள் பில்லி சூனிய பயம் கண்பார்வை கண்ணில் நீர்வடிதல் உண்டாகும், வீன் வம்பு வழக்குகள் உண்டாகும். ராசிக்கு மூன்றில் சூரியன் சுப பலன்களே ஆனால் மற்ற கிரகநிலைகள் சாதகமாக இல்லாததால் இந்த சுப பலன்கள் எல்லாம் வீன்தான். ராசிக்கு இரண்டில் புதன் அவமானபட வைக்கும், எதிரிகளால் சன்டை சச்சரவை உண்டாக்கும் பண விரயத்தை ஏற்படுத்தும் பிறருக்காக தன் உழைப்பு வீனாகும் சில சமயம் பொருள்கள் களவு போகும் எச்சரிக்கை. சிலருக்கு செவ்வாய் சிலருக்கு ராகு தசை நடக்கும் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகமான உழைப்பு குறைந்த வருவாய் 10 ல் சனி கஷ்டமான ஜீவனம் ஓயாத உழைப்பு அதற்கு குறைந்த பலனே கிடைக்கும் லாபம் ஆதாயம் இல்லாத வேலையை ஊர் கவுரத்திற்காக செய்வார்கள் வருமானம் வந்தாலும் அது தனக்கில்லை ஒரே கிரகம் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் தன வரவு இருந்துகொண்டே இருக்கும் ஆனால் அந்த தனம் உங்களுடையது அல்ல வேறு யாருக்காவது சென்று விடும். மனைவிக்கு சில சமயம் கருசிதைவு ஏற்படலாம் ஏதாவது கோளாறு வந்து  போகலாம் மனைவி இடத்தில் சுகம் இல்லாமல் வேறு எங்கேயாவது சென்று பிரச்சனைகள் வரலாம் ராகு தசை நடப்பவர்கள் அவமானத்தை ஏற்படுத்தும் வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிடும் நேரத்மில் சூடாக சாப்பிட இயலாத அளவுக்கு சன்டை வந்து செல்லும் நடத்தை குறைந்த பெண்களின் தொடர்பு ஏற்படும், பெண்ணாக இருந்தால் தவறு செய்ய சொல்லும் தடமாற செய்யும் எச்சரிக்கை அவமான படுத்திவிடும். வீன் அலைச்சலை உண்டு செய்யும்.

ராகு தசை நடந்தால் இருப்பிடத்தை மாற்றுவது வெளிநாடு மாநிலம் சென்று வேலைபார்த்து வருவது சிறந்த பரிகாரம்.

சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று வழிபட்டு வாருங்கள் ராகு தசை நடப்பவர்கள் திசை மாறி இருக்கும் அம்மனுக்கு அல்லது காளிக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிப்பட்டு வாருங்கள்.

சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.

இங்கே கோட்சாரத்தை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம் நான் ராசிபலன் எழுதி புகழ்பெறுவதற்கு அல்ல கோட்சாரம் அடிப்படை கிரக நகர்வுகள் பார்வை பலன்களை தெரியாமல் ஜோதிடம் கற்க இயலாது இந்த ராசிபலன்கள் மூலம் உங்களுக்கு அடிப்படை ஜோதிட அறிவு கிடைத்து விடும் யாரெல்லாம் கிரகத்தை விவரித்து பலன்கள் எழுதிகிறார்களோ ஜோதிட பயிற்சியாளர்கள் ஒரு வருட காலம் திரும்ப திரும்ப ராசிபலன களை படித்து வாருங்கள் இரண்டாவது வருடத்தில் ஜோதிடத்தில் உங்களுக்கு நல்ல அறிவு கிடைத்துவிடும் என்பது உறுதி.


சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்

You May Also like

Post a Comment

0 Comments