கர்ம வினை நீக்கி வாழ்வில் வெற்றி பெற கடைபிடிக்க வேண்டியவைகள்
உங்கள் கர்மா நீங்கி கஷ்டம் நீங்கி கடன் குறைந்து மிகுந்த செல்வத்தோடு வாழலாம் தொடர்ந்து இங்கே கூறியதை கடைபிடித்து வாருங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.
ஜோதிடம் பார்ப்பது விதியை மாற்றவதற்குஅல்ல வரும் இடர்களை தாங்கி கொள்வதற்கும் பக்குவபடுத்தி கொள்ளுவதற்காகத்தான்.
ஜோதிடம் என்பது இது விதியை மாற்றும் அற்புத கலை அல்ல வேதனைகளை தாங்கி கொள்ள மனதை தயார்படுத்திக்கொள்தற்கும் சூட்சம எதிர்காலத்தை புரிந்துகொள்ளுவதற்கும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது.
இங்கே கூறபட்டுள்ள அறிவுறைகளை புரிந்து கொண்டு அதன்படி வாழ்க்கையை நகர்த்தி வந்தால் நிச்சயமாக ஒரு நல்ல நிலையை அடைந்து விடுவீர்கள்.
படுக்கையில் அமர்ந்து சாப்பிட வேண்டாம் இழப்பை உண்டு செய்யும்.
ராகுதசை சந்திர தசை நடப்பில் இருந்தால் மிகுந்த எச்சரிக்கையாக நடக்கவேண்டும் நல்ல வழிகாட்டி துணைகொண்டு உங்கள் செயல்களை செய்து வரவேண்டும்.
நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் உங்கள் மதத்தில் கூறபட்ட ஏதாவது ஒரு ஸ்லோகத்தை திணமும் பல முறை தெடர்ந்து பாராயணம் செய்து வாருங்கள் மனம் ஒடுங்கி கர்ம பதிவில் இருந்து விடுபடும்.
அனைத்து விதமான யோகத்தை அனுபவிக்க உடல்நலம் மிக முக்கியம் உடலை மிகுந்த கவனுத்துடன் வளர்த்து வரவேண்டும். அளவான உணவு சீரான நடைபெயர்ச்சி அதிகாலை சீரான தியாணம் ( மூச்சு பநிற்சி) மிக நீண்ட ஆயுளை உடல்நலுத்துடன் கடக்க முடியும்.
வறுமை கடன் நோய் ஒழிய எளிய பரிகாரம்:-
ஜாதக ரீதியான பிரச்சனை ஏற்படும்போது மூன்று விதமான முக்கியமான பிரச்சனைகளை உருவாக்கி விடும் ஒன்று கடன் நோய் வறுமை எப்போது வேண்டுமாணாலும் ஏற்படலாம் என்பதை உணர்ந்து உடலை ஆரோக்கயத்தோடு வளர்த்து எளிமையான பயிற்சிகளை தினமும் செய்து வரவேண்டும். உங்களுக்கு ஒரு வருமானம் இருக்கும போதே வேறு ஒரு வருமாணத்தை எப்படியாவது தேடிக்கொள்ள வேண்டும் வறுமை எப்போது வேண்டுமானலும் வரும் என்பதை உணர்ந்து சிறுக சிறுக பணத்தை சேமித்து வரவேண்டும். உண்மையாக உழைத்து வரவேண்டும். உங்களை எதிர்கால நலத்திற்காக தினமும் புதிய தகவல்களை அறிந்து உங்களை புதிப்பித்து கொண்டே வரவேண்டும் தேவை இல்லாத வாதங்களை கூறி சும்மா இருக்க கூடாது.
(மனமே கர்மா) கர்மாவின் பிடியில் இருந்து எவ்வாறு தப்பிப்பது!
தினமும் திரும்ப திரும்ப படியுங்கள்
மனம் என்னும் சந்திரன் உன் கர்மாவிற்கு ஏற்ப அழைத்து சென்று கற்பனை ஆசைகளை தூண்டி மது மாது காம இச்சைகளை மனித மாமிச பின்டத்தில் தூண்டி விட்டு அழித்து விடும். நீ மனத்திற்கு கட்டபட்டு விடக்கூடாது மனதை நீ கட்டுபடவைக்கவேண்டும் மனம் செய்வதை நீ செய்யக்கூடாது நீ செய்வதை மனம் ஏற்க வேண்டும். நீ அறிஞர்களின் மகான்களின் குருவின் ஆசிரியர்களின் அறிவுறைகளை மனதிற்கு கட்டளையிட்டு அந்த அறிவுறையில் வாழ்ந்து வந்தால் கர்மா உன்னை கடந்து சென்று விடும் நீ கர்மாவின் பிடியில் இல்லாதவன் அறிஞர்களின் மகான்களின் குருவின் ஆசிரியர்களின் அறிவுறைகளின் பிடியில் இருப்பாய் இதை செய்து பார் சில காலம் கடினமாக இருக்கும் அதன் பிறகு உன் எதிர்காலம் சிறப்பான முறையில் முன்னேறி செல்லும் இது முற்றிலும் உண்மை.
மனதில் உள்ள கர்ம பதிவுகளை மாற்ற தப்பிக்க ஏதாவது ஒரு ஸ்லோகங்களை தினமும் சிறிது நேரம் பாராயணம் செய்து வாருங்கள் அதன் மகிமை லட்சத்தை தாண்டும்போது போக போக அதன் சூட்சமத்தை உணருவீர்கள்.
வருமை பல வேதனைகளையும் வலிகளையும் சந்தித்து வாழும் ஒவ்வொரு பணக்காரர்களும் வருமையை கடந்துதான் வெற்றி பெற்று இருப்பார்கள் அவர்களிடம் ஏராளமான சகிப்புத்தன்மை இருக்கும். அவர் சேர்த்த சொத்துகள் வாரிசுகளிடம் செல்லும்போது அதிகாரம் மமதை ஆனவம் சகிப்புத்தன்மை இல்லாத மனதால் வருமையின் வேதனை வலிகள் தெரியாத காரணத்தால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துகளை இழக்கிறான்.
வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிகள் என்பது அவ்வளவு எளிதாக நீ அடைந்து விடமுடியாது அந்த வெற்றிக்கு பின்னால் பல தோல்விகளையும் அவமானங்களையும் நம்பிக்கை துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்ப்புகளையும் இழப்புகளையைம் சந்தித்துதான் வெற்றிகளை அடைந்து இருப்பார்கள்.
வெற்றி என்பது பல வலிகளையும் வேதனைகளையும் அவமானங்களையும் துன்பங்களையும் வருமைகளையும் உள்ளடக்கியது.
அழுக்கு ஆடை, கிழிந்த ஆடை, ஈர ஆடைகளை அணியக்கூடாது. அணிந்தால் தரித்திரமே மிஞ்சும். ஆடை-சுக்கிரன்.
நீ எவ்வாறு வாழ்ந்தால் வெற்றி பெறலாம்?
பிறப்பின் நோக்கம் செய்த கர்மாவை கழிப்தற்குதான் பிறப்பு ஏற்படும்! செய்த கர்மாவிற்கு ஏற்ப கிரகங்கள் அமைய பெற்றுதான் பிறப்பை கர்மா ஏற்படுத்தும். பெண்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருந்து கர்ம வழியில் தர்மபடி நடந்து வாருங்கள் நிச்சயம் பிறப்பின் நோக்கம் நிறைவேறும்.
கர்ம வழியில் தர்மபடி என்பது உங்கள் மனம் போன போக்கில் நடக்க கூடாது உங்கள் மனம்போன போக்குதான் கர்மா வழி அது பல தவறுகளை செய்து மீண்டும் கர்மாவை சேர்த்துக்கொள்ளும், ஒரு வழிகாட்டி தேரந்தெடுத்துக்கொள்ளுங்கள், வாழ்க்கைக்கு ஒருவர் உங்கள் பணம் பொருள் தேவைகளுக்கு ஒரு அட்வைசரை தேர்ந்து எடுத்து அவர்களின் வழிகாட்டுதல் படி உங்கள் பயணம் தொடர்ந்தால் எந்த கர்மாவும் படுத்தாது.
உன் மனம் தான் கர்மா மனம் கர்ம படி வாழ விடும் கர்ம படி வாழந்தால் நீ வாழ்வில் சிக்கி தவிப்பாய் ஒவ்வோருவருக்கும் ஒரு வழிகாட்டி வேண்டும் வழிகாட்டியின் வழிகாட்டுதல் படி நடந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் நீ உன்மனம் சொல்படி நடந்தால் வாழ்க்கையில் சிக்கி தவிப்பாய்.
பரிகாரம் என்பது உன் வாழ்க்கை பாதையை மாற்றி விடாது, நீ செல்கின்ற பாதையில் திடமாக செல்ல உன்மனதை திடபடுத்தும் உனக்கு ஏற்படுகின்ற அடி மற்றும் வலிகளை தாங்கி கொள்ள தாயார் படுத்தும் ஆனால் உணக்கு அடி வலியும் வேதனைகளும் நிச்சயம் உண்டு.
உன் வழிகாட்டியை தேடி சிக்கன பிடித்து வாழ தொடங்குங்கள் வாழ்த்துகள்.
வழிகாட்டி இல்லாத வாழ்க்கை பல வேதணைகளை சந்தித்து வாழும், நீ உன் சுய புத்தியில் செல்கின்ற பாதை கர்ம படியே செல்லும்.
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments