Ticker

6/recent/ticker-posts

ஜோதிடம் கற்போம்

ஜோதிட பதில்- இங்கே பதிவிடபடும் பதிவுகள் அனைத்தும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்

அடிப்படை ஜோதிடம் -Basic Astrology 

பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் யாவை?

திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகும்?

திதி என்பது சூரியனுக்கு சந்திரனுக்கும் உள்ள தூரத்தை கூறுகிறது.கரணம் என்பது திதியின் பாதி அளவு ஆகும்.
வாரம் என்பது 7 நாட்களின் கிழமைகளை குறிப்பது ஆகும்.
யோகம் என்பது வான் வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் பயணிக்கின்ற மொத்த தொலைவு ஆகும்.

அமாவசை பௌர்ணமி என்றால் என்ன?  

அமாவசை என்பது ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் சூரியனும் சந்திரனும் கூடும் காலத்தை அமாவசை என்று அழைக்கிறார்கள்.
பௌர்ணமி என்பது சூரியனுக்கு ஏழாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தை பௌர்ணமி என்று அழைக்கிறோம்.

ஒன்பது கிரகங்கள் 

1. சூரியன் 
2 சந்திரன் 
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

ராசி வீடுகள்

கேந்திரம் 1, 4, 7, 10
திரிகோணம்- 1, 5, 9
பணபரம்- 2, 5, 8, 11
அபோக்லியம்- 3, 6, 9, 12
உப ஜெயஸ்தானம்- 3, 6, 10, 11

1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானங்கள் ஆகும். (லக்ஷ்மி ஸ்தானம்)
1 , 4 , 7 ,10 - ஆகிய வீடுகள் - கேந்திர ஸ்தானங்கள் ஆகும்  ( விஷ்ணு ஸ்தானம் )
3, 6 , 8 , 12 - ஆகிய வீடுகள் -மறைவு  ஸ்தானங்கள் ஆகும்.
2 , 11 - ஆகிய வீடுகள் - உப , ஜெய ஸ்தானங்கள் ஆகும்.

தசா புத்திகள் 

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை ஆகும்

தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன? 

சூரிய தசை -        6 ஆண்டுகள்  
சந்திர தசை -      10 ஆண்டுகள்  
செவ்வாய் தசை -  7 ஆண்டுகள் 
ராகு தசை -         18 ஆண்டுகள் 
குரு தசை -          16 ஆண்டுகள்  
சனி தசை -          19 ஆண்டுகள் 
புதன் தசை -        17 ஆண்டுகள் 
கேது தசை -          7 ஆண்டுகள்  
சுக்கிர தசை -     20 ஆண்டுகள் 
மொத்தம்            120 ஆண்டுகள்

திதி என்பது என்ன?

சூரியன், சந்திரன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பது திதி ஆகும்
பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை தேய்பிறை திதி என்றும், பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை வளர்பிறை திதி என்றும் குறிப்பிடுவர் இதனை சமஸ்கிருதத்தில் கிருஷ்ணபட்சம், சுக்கிலபட்சம் என்பர் இவைகள் முறையே

1. பிரதமை, 2. துவி தியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்தசி 15, அமாவாசை அல்லது பவுர்ணமி என்று அழைக்கிறோம்.

கந்தரலங்காரப்பாடல்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடின

-அருணகிரிநாதர்

கிரககாரகர்கள் ஜோதிட விளக்கங்கள்

தந்தைக்குக் காரகன்- சூரியன்
உடல் காரகன்- சூரியன்
களத்திர காரகன்- சுக்கிரன்
தன காரகன்- குரு
தாய்க்குக் காரகன்- சந்திரன்
மன காரகன்- சந்திரன்
ஆயுள் காரகன்- சனி
தொழில் காரகன்- சனி
புத்திரகாரகன்- குரு
கல்வி, புத்தி காரகன்- புதன்
ஆற்றல், திறமைகளுக்குக் காரகன்- செவ்வாய்

பஞ்ச அனான யோகம்

ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் ஐந்து வீடுகளில் அமையப்பெற்றால் அதற்கு பஞ்ச அனான யோகம் எனப்படும் இதன் பலன்கள் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, அடைந்தது வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள், மற்ற யோகங்களை பொருத்து இந்த யோகம் பலமடங்கு சிறப்பு பெருகிதரும்.

குரு மங்கள யோகம் என்றால் என்ன?

குரு பகவான் இருக்கும் இடத்திலிருந்து  கேந்திரமாகிய 1,4,7,10 ஆகிய இடங்களில் செவ்வாய் காணப்பட்டால்  அந்த அமைப்பு குரு மங்கள யோகம் ஆகும், இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும், குறிப்பாக நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும். 

ஜோதிடத்தில் யோகங்கள் பற்றி அறிய கீழே உள்ள Link ஐ Click செய்து படியுங்கள்


பித்ரு தோஷம் என்றால் என்ன?

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

குருவடிசரணம் திருவடிசரணம்

ஜோதிட விதிகள் பல ஆயிரங்கள் அதில் ஒன்று இங்கே

சுக்கிரன் 12ல் இருந்தால் சுகபோக நோக்கிலும், பெண்கள் வழியிலும் ஜாதகர் செலவு செய்வார்
12ஆம் இடத்தில் உள்ள சுபக்கிரகங்கள் பொருளைச் சேர்பதற்கு வசதி செய்து தருவார்கள்

ஜாதகத்தில் குரு வலுவிழுந்து காணபட்டால் என்ன செய்யவேண்டும்?

ஒருவரின் ஜாதகத்தில் குரு நீசம், பகை, 6 8 12 ல் மறைவு பெற்றிருந்தாலும் அஸ்தங்கம் ஆகியிருந்தாலும் சனி கேது இணைவு, சந்திரன் கேது இணைவு, சனி ராகு இணைவு, குரு கேது இணைவு பெற்றிருந்தாலும் இவர்களின் வாழ்க்கையில் பல விதமான பிரச்சணைகளையும் சிக்கல்களையும் சந்திக்க இயலும்.

இவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகான்களை தரிசித்து வந்தாலும் சித்தர்களின் ஜீவசமாதிகளை வழிபட்டு வந்தாலும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து எளிதில் கர்மவினைகளிருந்து விடுபடுவார்கள்.

27 நட்சத்திரங்களின் வடிவங்கள்

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி, அடுப்பு, முக்கோணம்
கிருத்திகை - கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை
ரோஹிணி - தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை, வைரம், கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம், அம்மி
மகம் - வீடு, பல்லக்கு, நுகம்
பூரம் - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து, புலிக்கண்
ஸ்வாதி - பவளம், தீபம்
விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்
அனுசம் - குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்
கேட்டை - குடை, குண்டலம், ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு
அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை
சதயம் - பூங்கொத்து, மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன், படகு

Post a Comment

0 Comments