Ticker

6/recent/ticker-posts

கடன் - பணம் வரும் காலம் எப்போது?


ஜோதிட பதில்

Tamil Astrology கடன் -Loan -Debt

1) கடனாளியாகும் யோகம் யாருக்கு அமையும்?
2) வாழ்நாள் முழுவதும் யார் கடனாளியாக இருப்பார்கள்?
3) தன யோகம் தரும் காலம் எப்போது?

பிறப்பு ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு ராகு அல்லது கேதுவுடன் இணைவு ஏற்பட்டால் கடன் வாங்க அஞ்சமாட்டான்.
சனி சந்திரன் இணைவு பணம் கையிருப்பு இருந்தால் இழப்பு ஏற்படும் இல்லை என்றால் கடன் வாங்க நேரிடும் கட்டாயம் ஒருநாள் வீதியில் நிற்க வைக்கும் சில சமயம் பெருத்த அவமானத்தை உண்டு செய்யும். சலனத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.
யாரெல்லாம் உணவு சார்ந்த தொழிலில் இருக்கிறார்களோ அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான் பாடம் கற்பித்துவிடும்.

கடன்
வழக்கு
சிக்கல் கேதுவே காரண கிரகம், சனி செவ்வாய் இணைவும் கடனை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை தாமத திருமணம் கலப்பு திருமணம் முறைமாறிய திருமணத்தையும் ஏற்படுத்தும்.
விநாயகர் முருகபெருமான் ஆஞ்சநேயர் வழிபாடுகளை செய்து வந்தால் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

Loan -Debt

செல்வத்தை கொடுக்கும் கிரகம் சுக்கிரன் குரு -பெரும் பணம், கடனை கொடுக்கும் கிரகம் செவ்வாய் ஆகும் சந்திரன் செலவுகளை தூண்டுவான் செவ்வாயை போல பலனை கொடுக்கும் கிரகம் கேது ஆகும் கேது தடைக்கான கிரகம் ஆகும்.

ராகு கேது நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்களை பொறுத்து செயல்படும் எந்த எந்த பாவத்திற்கு காரகத்திற்கு நாம் பிரச்னைகளாக இருந்தோமோ அந்த அந்த காரகங்களுக்கு தடைகள் வருவது போல ராகு கேதுக்கள் நம்பிறப்பு ஜாதகத்தில் அமைந்து விடும். கர்மவினை தடை சனி கேது பொருளதாரத்தை பாதிக்கும் சனி செவ்வாய் திருமணத்தை பாதிக்கும் குரு பெரும் பணம் குரு கேது மிகுந்த கடனை கொடுத்து வேடிக்கை பா்க்கும் சனி ராகு கடனாலி ஆக்கி ஊரை விட்டு நாட்டை விட்டு துறத்தும்.

சனி -கர்மக்காரகன்
கேது-தடை, தாமதம்
கர்மக்காரன் சனியுடன் ராகு கேது அல்லது செவ்வாய் இணைவு பார்வை பரிவர்த்தனை ஏற்பட்டால் ஜாதகர் வாழ்க்கை முழுவதும் கடன் தொல்லையால் அவதிபடுவார், பணபற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும் சில சமயம் சொத்துக்களை இழந்து நிற்பார்கள் சிலர் பூர்வீகத்தை விட்டே வெளியே சென்று விடுவார்கள், சிலர் பிறர் தயவில் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருப்பார்கள். குடியிருக்க வீடு் இல்லாமல் இருப்பார்கள் மாதா மாதம் கடன் வாங்கி வாழக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.

கடன் தொல்லை அதிகரிக்கும் காலம் எது? -ஜோதிட பதில்

ஏழரை சனிகாலத்திலும் அஸ்டமத்து சனி காலத்திலும் சந்திர தசை காலத்திலும் ராகு தசை காலத்திலும் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் கேது உள்ள ராசிக்கு கோட்சார சனி வருங்காலத்திலும் கடன் தொல்லை அதிகரிக்கும். அது போல கோட்சார கேது பிறப்பு ஜாதகத்தில் சனி உள்ள ராசிக்கு வரும் காலங்களில் கடன்கள் அதிகரிக்கும், பிறப்பு ஜாதகத்தில் சனி உள்ள ராசிக்கு கோட்சார செவ்வாய் வரும் காலம் கடன்கள் உருவாகும்.  அதுபோல ஒரே வீட்டீல் வசிக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏழரைசனியோ இராகு தசையோ நடந்தாலும் வறுமை பிரச்சனைகள் வருமானத்தடை பொருட்சேதங்கள் அவமனாங்களை கொடுக்கும். புதன் தசை காலத்திலும் எந்த தசையாக இருதந்தாலும் புதன் புத்தி காலத்திலும் கடன் நோய் வழக்கு உண்டு.

பணம் தனம் வரும் காலம் எது?

பிறப்பு ஜாதக சுக்கிரன் அல்லது குரு மீது கோட்சார சனி செல்லும் காலம் அல்லது பிறப்பு ஜாதக சனி அல்லது சுக்கிரன் மீது கோட்சார குரு செல்லும் போது பணம் வந்து சேரும். இரண்டாம் அதிபதி 11 ஆம் அதிபதி சேர்ந்தோ ஆட்சி உச்சம் பெற்றோ பரிவர்த்தனை அடைந்தோ கேந்திர திரிகோணத்தில்  இருந்தாலோ மிகுந்த தன யோகத்தை அளிக்கும். இரண்டு 11 ஆம் அதிபதிகள் மீது கோட்சார குரு அல்லது சுக்கிரன் பயணித்தாலும் பணம் வந்து சேரும். 

தனம் பணம் சுக்கிரன் குரு 

பணம் என்றாலே சுக்கிரன்
நிறைய பணம் பெரும்பணம் குரு
சுக்கிரன் சனி இணைவு பணக்காரனாக்கும், அத்துடன் ராகு இணையும்போது பெரும்பணக்காரனாக்கும் ஆனால் ராகு இணைவு என்பது பணத்தை நல்ல வழியில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் பின்னால் சிக்கல் வந்து சேரும். இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்ற கிரகம் இருந்தால் பணக்காரன் ஆனால் சிக்கமானக இருப்பார்கள் கஞ்சன் என்று சொல்லுவார்கள். இரண்டாம் இடம் லக்கனம் பதிணொன்றாம் இடம் சம்பந்தம் தொடர்பு இணைவு பெரும்பணத்தை அள்ளித்தரும் கோடீஸ்வரணாக்கும். சம்பந்தம் என்பது தொடர்பு பார்வை பரிவர்த்தனை சாரம் இப்படி உள்ள அமைப்பு ஆகும். லக்னாதிபதி இரண்டிலோ பதிணொன்றிலோ அல்லது இரண்டாம்பதிபதி லக்கனத்திலோ அல்லது பதிணொன்றிலோ அல்லது பதிணொன்றாம்மதிபதி இரண்டிலோ /லக்கனத்திலோ இருப்பது மிகுந்த யோகத்தை கொடுக்கும்.  

தனம் பணம் இரண்டாம் இடம் ஆகும்,  லாபம், வெற்றி, ஒருகாரகத்தை தூண்டும் ஸ்தானம் அந்த ஸ்தானத்தின் 11 ஆம் இடம் ஆகும். லாபம் மற்றும் வெற்றியை தரக்கூடியது 11 ஆம் இடம்தான், அது போல ஒரு லக்கனம் வெற்றி பெற வேண்டும் என்றால் 11 ஆம் இடத்தில் சூரியன் இருக்கும் லக்கனம் வெற்றி பெறக்கூடிய லக்கனம் ஆகும்.

எனவே இரண்டாம் இடத்திற்குரியவர் 11 ஆம் இடத்திலோ அல்லது 11 ஆம் இடத்திற்குரியவர் இரண்டாம் இடத்திலோ இருந்தால் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள். இரண்டுக்குரியவர் லக்கனத்திலோ 11 க்குரியவர் லக்கனத்திலோ அல்லது ஒருவருக்கொருவர் தன் வீட்டில் ஆட்சி பெற்று இருந்தாலோ நல்ல தனயோகத்தை பெறுவார்கள் வாழ்க்கை பல வெற்றிகளை எளிதில் அடைவார்கள்.

5) ஜோதிட தகவல்📚

கடன் வழக்கு சிக்கல் இவற்றிற்கு காரணம் எவை?

Tamil Astrology -ஜோதிட பதில் 
You May Also like

Post a Comment

0 Comments