Ticker

6/recent/ticker-posts

ராசி பலன்கள்

 குரு பெயர்ச்சி பலன்கள் 2021 கும்ப ராசி 

எந்த ஒரு பெயர்ச்சியாக இருந்தாலும் பெயர்ச்சி ஆனவுடன் அல்லது ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே குழப்பங்களும் அச்சங்களும், துக்கங்களும்  உடல் உபாதைகளும் ஏற்படும் கன்டிப்பாக குறைந்த பாகையில் உள்ள கிரகங்கள் கொண்ட ஜாதகர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு விடும். அதாவது குளத்திற்கு புதிய நீர் வரும்போது குளம் முழுவதும் குழம்பித்தான் தெளியும் இந்த குழம்பிய நீரில் சில மீன்கள் மூச்சு தினரி இறக்க நேரிடும். இதே நிலைதான் மனிதர்களுக்கும் வருடகிரகமான குருபெயர்ச்சி நடக்கும்போது சிலர் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு உயிர்சேதங்கள் நடைபெறுகிறது சிலரை ICU ல் அட்மிட் செய்ய வைத்து விடும் இது போன்ற பல நிலமைகள் உண்டாகும்.

இதுவரை 12 ஆம் இடமான விரயத்தில் இருந்த குருபகவான் ஜென்ம ராசிக்கு வந்து உள்ளார் “ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்தது” என்பது ஜோதிட பாடல் அப்படி என்றால் ஜென்ம குரு வருவோருக்கு எல்லாம் கஸ்டம் என்று அர்த்தமல்ல. இதை பற்றி விளக்கமாக பின்னால் பார்க்கலாம் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை அதன் போக்கிற்கு விட்டு ஆடவிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் ஜென்ம குரு கட்டாய இடப்பெயர்ச்சியை உண்டாக்கும் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற்றும் நட்பு உறவுகளை பிரியமாக நேரிடும் அதனால் பார்த்த தொழில் பதவி பறிபோகும் விடவேண்டிய கட்டாயம் ஏற்படும், மனக்கவலையை, பொன் பொருள் நஷ்டம் உறவுகளுடன் விரோதம் உண்டாகும் ஒரு அச்ச உணர்வு துக்கமும் ஏற்படும் இதை சாதுரியமாக பணி இடப்பெயர்ச்சி வெளிநாட்டு வேலை வெளிமாநில வேலைகளை அமைத்து கொண்டால் வெற்றி அடைந்து விடலாம்.

குருபெயர்ச்சி பலன்கள் பொது பலன்களே அதற்காக இந்த பலன்கள் எல்லாம் நடந்துவிடுமா என்றால் நடக்கும் அவர் அவர் கர்ம் வினைகளை பொருத்து பலன்களின் வலிமைகள் மாறுபடும்.

**********************************************************

இவை எல்லாம் பொது பலன்களே எந்த ஒரு முடிவிற்கும் பிறப்பு ஜாதகத்தை பார்த்து முடிவெடுத்து கொள்ளுங்கள்.

சிம்மம் 

(மகம், பூரம் உத்திரம் -1 வரை )

ஆங்கில புத்தாண்டு சிம்ம ராசிக்கு இரண்டாவது லக்னத்தில் பிறந்து உள்ளது ராசி நாதன் சூரியன் 5 ல் 2 11 க்குடைய புதனுடன் இணைவு பெற்று இருக்கிறது  4 ல் சுக்கிரன் கேது 6 ல் 5 8 க்குடைய குருவுடன் இணைவு பெற்று உள்ளது. 4 ல் கேது சுக்கிரன் 10 ல் ராகு.

ராசிநாதன் 5 ல் இருப்பதால் எண்ணங்கள் திட்டங்கள் நிறைவேறும் 4 ல் கேது சுக்கிரன் இருப்பதால் பழய பொருட்களை பயன்படுத்தி புதிய வீடு கட்டுதல் பழைய வீட்டை பழுது பார்த்தல் பழய வன்டி வாகனங்கள் சேர்க்கை உண்டாகும். 10

ல் ராகு அந்த இடத்தை ராகு பார்பதால் தொழிலில் விருத்தி பழய தொழிலை விரிவு படுத்துதல் பல இடங்களில் கிளைகளை உருவாக்குவது. குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட தொழிலை செய்ய கூடிய நிலை ஏற்படும். விட்ட தொழிலை வேறு இடத்தில் தொடங்குவார்கள். வருமானம் எல்லாம் பழய கடனை அடைக்க வழிசெய்யும். 

கடந்த வருடத்தில் பிறப்புச் ஜாதகத்தில் தனுசு மற்றும் மேசத்தில்  செவ்வாய் இருந்தவர்களுக்கு மிகு‌ந்த கடனையும் தொழில்நஷ்டத்தையும் ஏற்படுத்தி இருக்கும் கணவர் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும் விட்டு கொடுத்து வாழுங்கள்.

சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்

****************************************

இவை எல்லாம் பொது பலன்களே எந்த ஒரு முடிவிற்கும் பிறப்பு ஜாதகத்தை பார்த்து முடிவெடுத்து கொள்ளுங்கள்.

கன்னி ராசி

(உத்திரம் 2 ஹஸ்தம் சித்திரை 2 ஆம் பாதம் வரை)

ஆங்கில புது வருடம் கன்னியா லக்கனத்தில்தான் பிறந்து உள்ளது ராசி அதிபதி புதன் 4 இல் இருக்கிறார் ஏற்கனவே 4 ல் இருந்த சனி ஐந்தில் ஆட்சி ஆகிறார் அத்துடன் 4 ற்குடைய குரு ஐந்தில் நீசபங்க ராஜயோகம் பெற்று ராசியை பார்கிறார்கள். 9பதில் ராகு மூன்றில் கேது. நான்கில் சனி கேது இருந்தபோது தாய்நலம் தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விளகும், தன்நலம் வீட்டில் பிரச்சனைகள் விளகும், கட்டியவீட்டை கட்டமுடியமால் பல காரணங்களால் தடைபட்ட நின்ற வீட்டை இப்போது தடையில்லாமல் கட்டிவிடுவீர்கள்.

பிறப்பு ஜாதகம் யோகமாக இருந்தால் இந்த வருடம் உங்களுக்கு யோகமான வருடமாக அமையும் அர்த்தாஸ்டம நிவர்த்தி ஆகி உள்ளது ராசியை குரு பார்பது திருமணதடைவிளகி திருமணத்தை உண்டாக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாரிசு பிரச்சனை விளகும், சமுதாயத்தில் மரியாதை உண்டாகும் குல தெய்வ  வழிபாடு தடை நீங்கி வழிபாடு செய்வார்கள். ஆன்மீகம் கோவில் திருப்பணி செய்தல் தீரத்தயாத்திரை செல்லுதல் தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். ஐந்து ஒன்பதுக்குரிய தசா புத்தி நடப்பவர்களுக்கு மிகுந்த யோகத்தை உண்டு பன்னும் சமூகத்தில் பதிவி மரியாதையுடன் புகழ் பெறுவார்கள். வாரிசு யோகம் உண்டாகும்.

ஐந்து ஒன்பதுக்குரிய தசா புத்தி நடப்பவர்களுக்கு எதிர்பாரத யோகங்கள் அதிஷ்டங்கள் பதவிகள் மதிப்பு மரியாதை கூடி வரும் தேடிவரும்

ராகு தசை நடக்க கூடியவர்கள் தாங்கள் தனிபட்ட ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி பலன் தெரிந்து கொள்ளுங்கள்.

லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள் (நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ,சிங்கனபுரி லட்சுமி நரசிம்மர்)

***************************************************

Post a Comment

0 Comments