Ticker

6/recent/ticker-posts

ஜீவசமாதிகள்

சித்தர் காப்பு

குருவடிசரணம் திருவடிசரணம்

காப்பான கருவூரார் போகநாதர், கருணையுள்ள அகத்தீசர், சட்டைநாதர் மூப்பான கொங்கணரும், பிரம்மசித்தர் 
முக்கியமாய் மச்சமுனி, நந்திதேவர், கோப்பான கோரக்கர் ,  
பதஞ்சலியார்,  கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர் 
வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி 
காப்புதானே.

1. புனர்பூசம் குருவின் நட்சத்திரம் 16 ஆண்டுகள்

புனர்பூசம் 1 2 3 மிதுன ராசி
புனர்பூசம் 4 கடக ராசி
புனர்பூசம்  நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர் தன்வந்தரி ஆவார், ஜீவசமாதி வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது.
குண்டலினி சக்திகளை தன்னுள் கொண்டு ஜீவஜோதியான சித்தர்களின் ஜீவசாதியை சென்று வழிபடுங்கள் உங்கள் கர்ம வினைகள் தீரும்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்

***********************************************************

2. ஓத சுவாமிகள்- ஜீவசமாதி

ஓத சுவாமிகள்ஜீவசமாதி
கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் (திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவர் 
குருவடிசரணம் திருவடிசரணம்
திண்டுக்கள்மலைக்கோட்டை பின்புறம் (பைபாஸ் சாலையின் அருகில்சுப்பையா சுவாமிகள் (ஓத சுவாமிகள்ஜீவசமாதி இருக்கிறதுலெளகீகம்-ஆன்மிகம் இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தெளிவு பெற முடியாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால் வழி கிடைக்கும் அமாவாசை பூஜையன்று அன்னதானம் நடக்கிறதுதிருவண்ணாமலை ரமணருக்கு ஆன்மிக வழி காட்டியவர்சுப்ரமணிய சிவாவுக்கு அரசியல் வழி காட்டியவர்
கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவர் ஓத சுவாமிகள்காசியில் வாழும் விஸ்வநாதரின் ஆசியோடும்அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஓதசுவாமிகள்.
ஓத சுவாமிகள் 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேத சித்தி ஆனார்அன்று திருவாதிரை நட்சத்திரம்சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
குருவடிசரணம் திருவடிசரணம்

*********************************************************************

3. சாது சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதி

பரிகாரங்கள்
குருவடிசரணம் திருவடிசரணம்
திருநேல்வேலி, பாளையங்கோட்டை அருகில் வல்லநாடு என்ற கிராமத்தில் சாது சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது வள்ளலாரின் கொள்கைப்படி நித்தமும் அன்னதானம் நடக்கிறது. மனிதப் பிரயத் தனங்கள் வெற்றி பெறாமல் தோல்வியை சந்திக்கிறவர்கள் இங்கு சென்று தியானம் செய்யும்போது வினைப்பயன் தோஷங்கள் விலகும்.
குருவடிசரணம் திருவடிசரணம்

************************************************

4. திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி

திருவாரூர் தெப்பக்குளம் அருகே மடப்புரம் என்னும் பகுதியில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது அற்புதம் சித்திக்குள் அருள் தன்னை நம்பியவர்களுக்கு வாழ்வு தந்த மகான். ஆவனி மதம் குருபூஜை நடைபெறும் அன்று ஆயிர கணக்கில் அன்னதானம் பிரசாதம் வழங்கப்படும்
குருவே சரணம்

*******************************************************************************

5. ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில் (கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம்)

அழுக்குச்சித்தர்
ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது.
அழுக்குச்சித்தர் என்று அழைக்கப்படும் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள் அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார். இவ்விரு ஸ்தலங்களும், புதுவையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் பலமுறை வந்து வழிபட்டுக்கொண்டிருக்கும் கோவில்கள் ஆகும்.

******************************************************************************

6)ஸ்ரீ ஜோதி மௌன குரு ஸ்வாமிகள் -கசவனம்பட்டி சித்தர்

ஓம் ஸ்ரீ ஜோதி மௌன குரு ஸ்வாமி திருவடிகள் போற்றி
பரிகாரங்கள்
குருவடிசரணம் திருவடிசரணம்
நம் நாடு ஒரு புண்ணிய பூமி என்பதில் ஐயமில்லை. எண்ணற்ற சித்தர்கள் அவதரித்த, நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தர்கள் நிறைந்த பூமி. அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தினை நிறைவேற்றி, மக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்து பிறகு, பரம்பொருளுடன் ஐக்கியமாகின்றனர்.
அப்படி வந்த மகாந்தான் கசவனம்பட்டி சித்தர். இவர் எப்பொழுது பிறந்தார், எங்கிருந்து வந்தார் என ஒருவரும் அறியார். நிர்வாணமாக பதினோரு வயது சிறுவனாக கசவனம்பட்டி கிராம மக்களால் அறியப்பட்டுப்பின் அங்கேயே தங்கிவிட்டவர். இறுதி வரை இயற்கை அன்னை அவரை வடித்த உருவிலே ஆடை எதுவுமின்றி வாழ்ந்து சமாதியடைந்தவர்.
சுவாமிகள் பேசி ஒருவரும் கேட்டதில்லை. ஆனால் அவர் பார்வை ஒன்றேபோதும் பக்தர்களின் துயர் துடைக்க. அவரை மனதில் நினைத்து நம் துன்பங்களைக் கூறினால் போதும். நம் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார்
குருவடிசரணம் திருவடிசரணம்
சக்கரவர்த்தி கலியபெருமாள்

*****************************************************************************

7. புலிப்பானி சித்தர்

சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர் புலிப்பாணி ஆவார், ஜீவசமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. ரோகிணி நட்சத்திரத்திரத்தில் அவதரித்தவர் மச்சமுனி சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. பரணி நட்சத்திரத்திரத்தில் அவதரித்தவர் போகர் சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி பழனி முருகன் சன்னிதியில் உள்ளது. சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்

***********************************************************************************

8. வக்ரக்காளியம்மன் (குண்டலினி முனிவர் ஜீவசமாதி)

ஓம் குண்டலினி முனிவர் திருவடிகள் போற்றி குருவடிசரணம் திருவடிசரணம் ஒருமுறை குடும்பத்துடன் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி போகும் பாதையில் மயிலம் தாண்டி திருவக்கரைக்கு பாதை பிரியும் அங்கு வக்ரக்காளி, சந்திர மௌலீஸ்வரர் , அம்பாள், பெருமாள் சந்நிதிகளோடு குண்டலினி முனிவர் ஜீவசமாதியம் சிறப்பாக விளங்குகிறது. அங்கு உங்கள் குறைகளை முறையிட்டு பிரார்த்தனை செய்து கொண்டால் வேண்டுவது நிறைவேறும். குண்டலினி முனிவர் ஜீவசமாதியில் 18 நெய் விளக்கேற்றி வழிபடவேண்டும் குருவடிசரணம் திருவடிசரணம்

Post a Comment

0 Comments