Ticker

6/recent/ticker-posts

கிரக சேர்க்கை பலன்கள்

கிரக சேர்க்கை - யோகம் ( கிரக இணைவு)

எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளையும் குருவடிகளையும் வணங்கி இந்த பதிவை பதிவிடுகிறேன்.

எந்த ஒரு கிரகமும் தானக பலன் தர இயலாது ஏதாவது ஒரு கிரக சேர்க்கை பெற்றவுடன் அந்த இரண்டு கிரக காரகத்திற்கு ஏற்றவாறு கிரக வரிசை முறைப்படி பலன்களை அளிக்கும். இந்த கிரக சேர்க்கையும் விதிப்படிதான் அமையும்.

ஏதாவது ஒரு கிரக சேர்க்கை என்பது முதலில் வினைப்படி ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்களோடு தொடர்பு கொள்ளும், அது போல கோட்சாரத்தில் கிரகங்கள் இணைவு பெறும் போது கிரக வரிசைப்படி பலன்களை அளிக்கும். அதாவது கிரகங்கள் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5  9  2 12  3 7 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே பலன்களை கொடுக்கும்.

இங்கே சனி கர்மா
குரு சுக்கிரன் ஜீவன்
சூரியன் ஆத்மா
தேகம் செவ்வாய்
அறிவு புதன்
மனம் சந்திரன்
ராகு கேது கர்மாவின் எல்லை.

ஜீவன் பிறப்பு பெற்ற பிறகு மனமாகிய சந்திரன் கர்ம வினைக்கேற்ப வரிசைப்படுத்தப்பட்ட கிரகங்களுடன் நகர்ந்து, இணைந்து ஒவ்வோரு கிரகத்தின் தன்மைகளை பதிவுபடுத்திக்கொள்ளும், அந்த பதிவிற்கு ஏற்றவாறு ஜீவன் வாழும் வரை அலைந்து திரியும். 

ஒவ்வொரு கிரகங்களும் எவ்வாறு இணைவுபெறும் அப்படி இணைவு பெறும்போது கிரகங்கள் எவ்வாறு எத்தகைய பலன்களை கொடுக்கும், எப்போது பலன்களை கொடுக்கும்? யார் யார் எந்த எந்த பலன்களை கொடுப்பார்கள்? அதை யார் தடுப்பார்கள்? பிறப்பு எப்போது ஏற்படும்? கரு எப்போது உருவாகும்?  யாருக்கு குழந்தை பேறு உண்டு யாருக்கு பாக்கியம் இல்லை? திருமணம் எப்போது நடக்கும்? என்ன படிப்பார்கள்? எப்போது பணம் வரும் காலம்? எப்போது வேலை அமையும்? யார் பொறியாளர் ஆவார்கள்? யாருக்கு அரசு வேலை அமையும்? யார் அரசியலில் வெற்றி பெறுவார்கள்? யார் தொழில் செய்வார்கள்? யாருக்கு காதல் திருமணம் ஏற்படும்? யாருக்கு மணமுறிவு ஏற்படும்? எந்த கிரக அமைப்பு வழக்கறிஞர் ஆவார்? யாருக்கு கல்வி வராது? எப்போது தொழிலில் நஷ்டம் ஏற்படும்? அது எப்போது ஏற்படும்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு ஜோதிடத்தில் விடைகாணலாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

அடிப்படை தெரிந்தால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பழுது இல்லாமல் வரும்.

சக்கரவர்த்தி கலியபெருமாள்

ஒருவருடைய யோகம் குடும்பத்தில் உள்ள ஜாதகருக்கு கர்ம வினைக்கு ஏற்ப யோகத்தை அளிக்கும் அல்லது யோகத்தை கெடுக்கும் தடுக்கும் வேறருக்கும் அழிவை தரும் எனேவ ஜோதிடம் பார்க்கும்போது குடும்ப நபர்களின் ஜாதகத்தையும் சேர்த்து பார்த்து பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments