Ticker

6/recent/ticker-posts

கேந்திரம் என்றால் என்ன?

கேந்திரம் 1-4-7-10 ஆம் இடங்கள்

ஒருவருடைய ஜாதக ராசிகட்டத்தில் பிறந்த லக்கனம் முதலாக 1-4-7-10 ஆம் இடங்களை கேந்திரஸ்தானம். என்று ஜோதிடத்தில் அழைக்கபடுகறது, இதை விஷ்னுஸ்தானம் என்றும் அழைக்கிறார்கள். கேந்திரஸ்தானங்கள் அதிர்ஷ்டத்தை தராத எல்லாவற்றையும் உழைத்துதான் பெற வேண்டும். கேந்திரத்தில் நின்ற கிரகங்கள் உங்களை இயக்கி உழைக்க வைக்கும், தொழில் செய்து பிழைக்க வைக்கும். நீங்கள் ஒவ்வொன்றையும் தேடி உழைத்து பிராயசபட்டு பெறுவது கேந்திரஸ்தானம்.

லக்கனம் 4 ஆம் இடம் 7 ஆம் இடம் 10 ஆம்  இடம் போன்ற கேந்திர ஸ்தானங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று காணப்பட்டால் இதை பஞ்ச மஹா புருஷயோகங்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றது.

கேந்திர ஆதிபத்திய தோஷம் என்றால் என்ன?

கேந்திரத்தில் அமரக்கூடிய சுபக்கிரகங்கள் குரு சுக்கிரன் புதன் சந்திரன் தன் தசை நடக்கும் காலங்களில் கேந்திர ஆதிபத்திய தோஷங்களை அதிகம் கொடுத்து தான் தரக்கூடிய கொடுக்க கூடிய யோகங்களை தடை செய்கிறது. வாழும் காலங்களிலும் ஸ்தான காரகங்களையும் பாதிப்பு அடையச் செய்கிறது. சுப பலன்களை தரக்கூடிய சுப கிரகங்கள் கேந்தர ஸ்தானங்களில் அமர்ந்து ஆட்சி உச்சம் பெறும்போது நற்பலன்களை கொடுப்பதற்கு பதிலாக கேந்திர ஆதிபத்திய தோஷங்களை ஏற்படுத்தி கெடுபலன்களை அளிக்கிறது.

கேந்திர ஆதிபத்திய தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள்

4ஆம் இடத்தில் சுபகிரகங்கள் அமர்ந்து தசை நடந்தாலும் சில பொதுபலன்களும் தாயால் அவமானம் பாசமின்மை சன்டை ச்ச்ரவுகள், வாகனம் வீடு அமைவதில் சிக்கல், சுகம் கெடும், காதல் திருமணம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவது.

7ஆம் இடத்தில் சுபகிரங்கள் அமர்ந்து தோஷத்தை அளித்தால் திருமணத்தில் சிக்கல் முறிவு திருமணம் நடக்காமல் போதல் முறைமாறிய உறவு திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்துதல், தசை நடக்கும்போது ஏற்கனவே நடந்த திருமணம் முறிவு ஏற்பட்டு விடும், கூட்டாலிகளால் தீராத அவமானம் கெட்டபெயர்களை ஏற்படுத்திவிடும்.

10 ஆம் இடத்தில் சுபகிரகங்கள் அமரந்து தோஷத்தை ஏற்படுத்தினால் தொழில் வியபாரம் உத்யோகத்தில் பாதிப்பு ஏற்படும்.

கேந்திர காரகங்கள்

1 ஆம் இடம், லக்கனம், முதல் பாவம், உதயம், உயிர், தலை, தேகம், புகழ், கீர்த்தி சுயமுயற்சி, விழிப்பு, ஜாதகர், உடல் நலம் பலம், மூளை, உடல்வாகு அழகு

4 ஆம் இடம் மாத்ரு ஸ்தானம், தாய், சுகம், வன்டி, வாகணம், கல்வி, சுகஸ்தானம், பூமி, நிலம், வீடு, தோட்டம். பண்ணை வீடுகள், அசையாத சொத்துக்கள்.

7 ஆம் இடம் அஸ்தமனம், காமஸ்தானம், இரவு, இருட்டு, களத்திரபாவம், மனைவி, கணவன், திருமணம் செய்யும் இடம், களத்திரபாவம், கூட்டாளி, கூட்டுத்தொழில்.

10 ஆம் இடம் தொழில், கர்மஸ்தானம், ஜீவனம், உத்யோகம், வியாபாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Disclaimer 

ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், அது ஒரு கைகாட்டி போல, ஜோதிடம் மூலம் 60%முதல் 75% பலன்களை தெரிந்து கொள்ளலாம் தவிற 100 % பலன்களை அறிய இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.

பரிகாரம் என்பது கர்ம வினைகளால் நீ சிதைந்து நிற்கும்போது உன் மனதிற்கு திடம் அளிக்க செய்யப்படும் பயிற்சி வழிபாடே தவிற, உன் ஆசைகளை நிறைவேற்ற உன் கர்ம  வினைகளை போக்க கூறப்படும் மந்திர மாய ஞாலங்கள் அல்ல!

சக்கரவர்த்தி கலியபெருமாள்
Jothida Pathil 
You May Also Like 
திரிகோணம் என்றால் என்ன?

Post a Comment

0 Comments