Ticker

6/recent/ticker-posts

திரிகோணம் என்றால் என்ன?

திரிகோணம் என்றால் என்ன?

திரிகோணம் என்பது 1-5-9  ஆம் இடங்களை குறிப்பது ஆகும், நாம் செய்த பாவ புண்ணிய பலன்களை நவகிரகங்கள் மூலம் அனுபவித்து வருகிறோம், அதிக சுப தன்மைகள் நிறைந்த சுபஸ்தானங்கள் 1-5-9 ஆம் இடங்கள் ஆகும், அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக்கூடிய ஸ்தானம்  இந்த இடத்து அதிபதிகள் நடத்தும் தசைகள் மிகுந்த நற்பலன்களை அளிக்கிறது. எனவே வாழும் காலங்களில் 1-5-9 ஆம் இடத்து அதிபதிகள் தசை நடப்பவர்கள் மிகுந்த புண்ணியங்கள் செய்தர்வளாக இருப்பார்கள், திரிகோணம் பலம் பெற்றிருந்தால் உழைப்பு குறைவு அதிர்ஷ்டம் அதிகம் வாய்ப்புகள் நம்மை தேடிவரும். புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே திரிகோணம் செயல்படும் திரிகோணாதிபதி தசை அவன் வாழும் காலத்திலேயே வந்து போகும்.

புண்ணியங்களை பொருத்தே 5 - 9 ஆம் இடங்கள் அதில் நிற்கும் கிரகங்கள் அதன் அதிபதிகள் அமைவார்கள். நாம் நம் கர்மா சேர்த்து வைத்த புண்ணியங்கள்தான் குழந்தை பாக்கியம்.

5ஆம் பாவம் நம் கர்மா செய்த பாவ புண்ணியங்கள் 9 ஆம் பாவம் நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள்.

திரிகோணஸ்தான காரகங்கள்

1 ஆம் இடம், லக்கனம், முதல் பாவம், உதயம், உயிர், தலை, தேகம், புகழ், கீர்த்தி சுயமுயற்சி, விழிப்பு, ஜாதகர், உடல் நலம் பலம், மூளை, உடல்வாகு அழகு.

5 ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் குழந்தை பாக்கியம், கல்வி அறிவு, புத்திசாலிதனம், மந்திர உபதேசம், தயவு. நாம் செய்த பாவ புண்ணயங்கள், புத்தி, நம் கர்மா செய்த பாவ புண்ணியங்கள்.

9 ஆம் இடம் தந்தை ஸ்தானம், நாம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள், பாக்கியஸ்தானம், புனித யாத்திரை, நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள், உயர் கல்வி, தர்மம், குரு.

நீ செய்த வினைகள் 

உன் கர்மவினை உறவுகளாலும் நட்புகளாலும் வறுமைகளாலும் வேதனைகளாலும் துக்கங்களாலும் துயரங்களாலும் இழப்புகளாலும் உயிர் சேதங்களாலும் தோல்விகளாலும் கரைக்கப்படும்.
உண்மையாக வாழ்வோம் உறவுகளுக்கு உண்மையை கற்றுக்கொடுப்போம் 
உன் உறவுகளாலும் நட்புகளாலும் நீ வேதனை அடைகிறீர்கள் என்றால் நீ செய்த புண்ணியங்கள் உன்னை பாதுகாக்கும் அப்போது வேண்டும் என்றால் உன் மனம் வேதனை அடையலாம் ஆனால் உண்மை என்ற மகா புண்ணியம்.
உனக்கு பாதகம் செய்த பிண்டங்களை தக்க சமயத்தில் பதம்பார்த்துவிடும் 
உண்மையாக வாழ்வோம்.

உன்னைத் தேவையில்லை என்று முடிவு கட்டிவிட்டவர்களுக்கு நீ எதை செய்தாலும் தப்பாகவே தெரியும்.

கர்ம வினை  பலன்கள் 🦅 

கிரகங்கள் கர்ம வினைக்கேற்ப அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் ஒன்றாக ஒளிவு மறைவு இல்லாமல் கொடுத்து விடும் 
சனி சந்திரன் 
சந்திரன் சுக்கிரன் 
சந்திரன் சுக்கிரன் ராகு 
சந்திரன் சுக்கிரன் ராகு புதன் 
கோட்சாரமும் தசையும் சம்பந்தப்பட்டால் உயிர் சேதம் 
பொருட்சேதம் 
அவமாணங்கள் 
கெட்ட பெயர் 
ஏற்படுத்தியே தீரும் 
சனி சந்திரன் இணைவில் கணிதம் தோற்றுவிடும்
கணக்கு புரிகிறதா அனுபவ ஜோதிடம் பார்க்கலாம் வினையின் அளவு சேர்த்த புண்ணியங்கள் கவசமாய் வருகிறதா இல்லையா என்று 
செய்வினை அல்ல செய்த வினை கர்ம வினை ✍

Disclaimer 

ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், அது ஒரு கைகாட்டி போல, ஜோதிடம் மூலம் 60%முதல் 75% பலன்களை தெரிந்து கொள்ளலாம் தவிற 100 % பலன்களை அறிய இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.

பரிகாரம் என்பது கர்ம வினைகளால் நீ சிதைந்து நிற்கும்போது உன் மனதிற்கு திடம் அளிக்க செய்யப்படும் பயிற்சி வழிபாடே தவிற, உன் ஆசைகளை நிறைவேற்ற உன் கர்ம  வினைகளை போக்க கூறப்படும் மந்திர மாய ஞாலங்கள் அல்ல!

சக்கரவர்த்தி கலியபெருமாள்
Jothida Pathil 
You May Also Like 
கேந்திரம் என்றால் என்ன?

Post a Comment

0 Comments