தமிழ் Astrology
யோகம் தரும் கோட்சார காலங்கள்
உங்கள் சுய ஜாதகத்தில் யோகங்கள் இல்லாவிட்டாலும் உங்களை ஆயுள் வரை அழைத்துச்செல்லும் கோட்சார யோகங்கள் உங்களை வாழ வைக்கும், உங்கள் ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் வருகின்ற கோட்சார அவ யோகங்கள் உங்களை நசுக்கிவிடும், சமயத்தில் கோட்சாரமே கொன்று விடும். இவைகள் எல்லாம் கர்ம வினைகளை பொருத்து சுகமும் வலியும் வேதனைகளும் மாறுபடும்.
உங்களை கர்ம வினைகளை கரைக்கும் தன்மை சித்தர்களுக்கும் மகான்களுக்கு மட்டும்தான் உண்டு, சித்தர்களின் ஜீவசாமதிக்கு சென்று சரனடையுங்கள்.
பாக்கியம் நன்றாக இருந்தால்தான் அனைத்தும் தடை இல்லாமல் கிட்டும், பாக்கியம் பலம் இல்லாதவன் எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆகிறான், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது, உழைப்பு அதிகம் பலன்கள் குறைவு, பேருக்கு வாழந்து வருவான், இருந்தும் இல்லாத நிலை, வாழ்க்கை கற்பனையில் முடிந்து விடும், அதிஷ்டம் இல்லாதவன் ஆகிறான், பாக்கியத்தை வலுப்படுத்தி கொள்ளுங்கள்.
பாக்கியம் என்பது ஒன்பதாம் இடம்
(ஐந்து ஒன்பதுக்குரியவர் பாபர் அசுபர் ஆயின் மிஞ்சும் சுப பலனே, லக்னாதிபதி, பாக்கியாதிபதி, பஞ்சமாதிபதி யோகம் செய்வார் பாதகம் செய்மாட்டார்.)
ஒரு ஜாதகத்தில் யோகமான கிரக சேர்க்கைகள் இருந்தால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் எந்த குறையில்லாமல் வாழ முடியும், தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை மனைவி மூலம் விருத்தி, குழந்தைகள் மூலம் செல்வ சேர்க்கை, பணி ஆட்கள் மூலம் நன்மைகள் வாங்கிய சொத்தின் மூலம் மதிப்புகள் படித்த கல்வியின் மூலம் சிறப்பு ஏற்படும்.
அப்படி இல்லை என்றால் கோட்சரத்தில் உங்களுக்கு எப்போது எல்லாம் கிரக இணைவு ஏற்படுகிறதோ அப்போது மட்டும் சொற்ப யோகங்களை மட்டுமே அனுபவிக்க முடியும் நீ எத்தனை முறை யாரிடம் ஜோதிடம் பார்த்தாலும் உன் பலன்கள் மாறாது மாறாக மகான்கள் சித்தர்களை உண்மையாக சரன் அடையுங்கள் உங்கள் பூட்டை திறந்து விடுவார்கள் நம்பிக்கையோடு.
சில சமயம் கோட்சரம் சித்தம் பேதளித்து வீட்டை விட்டு துரத்தி யாசகம் எடுக்க வைக்கும் சில சமயம் விஷம் விபத்து வெடி விபத்து ஆயுத மரணத்தை உண்டு பண்ணும் சில சமயம் தகாத உறவு கொள்ள தூண்டி உறவு முறை பாராமல் பெண்கள் மேல் சபலம் கொள்ள வைத்து அவமானபடுத்தி தெருவில் நிற்க வைக்கும்.
வினையால் விளைந்த வினைகள்
கிரகத்தினால் ஏற்படும் கோளாறால் மனம் பலவீனம் அடைந்து விடும் அதனால் உடல் சோர்வடைந்து எதையும் சிந்தனை செய்யாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். சில கிரகத்தன்டனை உயிர்சேதம் பொருட்சேதம் அவமானம் கெட்டபெயர் ஏற்படுத்தும், சிலருக்கு உடல் உபாதைகளை உண்டு பண்ணும் சிலர் செய்தொழில் நஷ்டம் ஏற்பட்டு கடனில் முழ்க ஆரம்பிப்பார்கள், சிலருக்கு குடும்ப நபர்களாலால் அவமானத்தை சந்திக்க நேரிடும், சிலருக்கு நல்ல யோக தசையானது குடும்ப நபர்களின் தசையால் பாதிக்கபட்டு வருமானத்தை இழந்து, தைரியத்தை இழந்து, குடும்பத்தை பிரிந்து மனநலம் பாதிக்க பட்டவர்களாய் திரிவார்கள்.
வியாதியின் வேதனையும் வலிகளும் வந்தவனுக்குத்தான் தெரியும், அவமானத்தின் ரனங்கள் அவமானபட்டவனுக்குத்தான் தெரியும். தசா சந்தி கோட்சார சந்தி ஒவ்வாத தசை தோஷ திருமணநாள் கூட்டு கிரக தசா சந்தி இவைகள் எல்லாம் வந்தவனுக்குத்தான் தெரியும் 16 வருட குரு தசை ஒவ்வாமால் ஆகிவிட்டால் நீ எந்த யோகத்தில் இருந்தாலும் உன்னை தரைமட்டம் ஆக்கி விடும் 6 வருட சூரிய தசை 10 வருட சந்திர தசை 19 வருட ராகு தசை சொல்லி மாலாத கஷ்டங்கள் பொருள் இழப்பு உயிர்சேதங்கள் உற்றார் உறவினர் பகை விவசாய நட்டம் அடுத்த பெண்டீர்மோகம், நல்ல சுகத்தை காட்டி கெடுத்து விடுவான். திருமணம் ஆகி 10 அல்லது 15 வருடங்கள் வாரிசுக்கும் வம்சத்திற்கும் ஏங்கி நிற்கும் தம்பதிகளின் வேதனை அவர் அவர்களுக்கு வந்தால்தான் தெரியும்.
ஆசைகாட்டி மோசம் செய்வது போல ஒருதசை கடைகூறில் யோகத்தை கொடுத்து அடுத்து வரும் யோக தசை ஒவ்வாத தசையாக மாற்றி மிகப்பெரிய கடனாலியாக ஓடி ஒளியவைக்கும் மனதின் கற்பனையிலேயே 40 அல்லது 45 வருடம் நிலையில்லாத வேலைகளை காட்டி வாழ்க்கை ஆதாரம் இல்லாமல் உட்காரவைத்திருக்கும், நிரந்த வேலை இல்லாமல் வாழ்க்கையை ஓட்டி இருப்பார்கள்.
நம் ஜோதிடம் மூலம் குழந்தைக்கு ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கும் 40 அல்லது 45 வயதை கடந்தும் ஒரு நிரந்தர வேலை இல்லாமல் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கும், நல்ல தசை என்று கூறி 16 வருடம் 18 வருடம் எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்களுக்கும், நன்றாக வெளிநாட்டில் வாழ்ந்து ஊருக்கு வந்து திருமணத்தை முடித்து செல்லலாம் என்ற ஆசை கனவில் வந்தவருக்கு பக்கத்து வீட்டு வேலித்தகறால் சிறைக்கு சென்றதும் எதிர்பாராத விபத்தால் கை கால்களை இழந்தும் சிலசமயம் உயிரை இழந்தவர்களுக்கும், திருமணம் ஆகி வாழ முடியாமல் விவாகரத்திற்கு கேட்டு நிற்பவர்களுக்கும் என்ன கூற போகிறீர்கள்?
இவைகள் எல்லாம் கிரகங்களின் வேலை கிடையாது அவர் அவர்களின் இயலாத கரணம்தான் கிரகங்கள் எப்போதும் யோகம் செய்து கொண்டுதான் இருக்கும் கெடுக்காது என்று கூறப்போகிறீர்களா!
"வாழ்க்கையில் கிரக வேதனையில் இருப்பவர்களுக்கு திடீர் யோகம் எல்லாம் வராது பட்டினி இல்லாமல் சாப்பிட்டால் போதும்"
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும்
(திருமண நாள் அன்றே திருமண முறிவு அடிதடி போலீஸ் வழக்கு ஒரு ஜாதகம் பிரபலமனமான குழுமத்தில் ஆராயப்பட்டது, நமது உறுப்பிணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர் எனக்கு மெயில் மூலமாக கிடைத்த தகவல்) இந்த பதிவில் உள்ள காரணங்கள் அடங்கும்.
குறிப்பு அந்த பெண் காதலணோடு பிரச்சனை செய்து சென்று விட்டார் என்று பதிவில் இருந்தது காதலனுடனும் வாழ முடியாது மீண்டும் பிரச்சனைகளுடன வீடு வருவார்.
இறையுள்ளம் கொண்ட அன்பர்களே அனைவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் இந்த பதிவின் மூலம் எனக்கு தெரிந்த சில கருத்துக்களை தாங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் ஜோதிட கேள்வி பதில் குழுமத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்தது, ஆனால் கார் விபத்தில் குடும்பத்தோடு மரணம் அடைந்து விட்டார்கள் என்றும் இதில் எங்கு தவறு நடந்து உள்ளது என்றும் ஜோதிடத்தின் மீதும் ஜோதிடர்கள் மீதும் நம்பிக்கை இழந்தது போன்ற பதிவாக இருந்தது. முதலில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்,
நான் அடிக்கடி எழுதிவருவேன், அதிர்ஷடமும் மரணமும் கண்ணுக்கு தெரியாதவை, தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும், ஜோதிடர்களின் கணிதம் கூட பொய்த்துவிடும், கண்ணை மறைத்துவிடும். குருவருள் திருவருள் குலதெய்வ அருள் தாய் தந்தைகளின் பூரண ஆசிர்வாதங்கள் ஜோதிடருக்கும் ஜோதிடம் பார்க்க வருபவருக்கும் வேண்டும், இது அனுபவ உண்மை இந்த அவசர காலத்தில் பெண் பருவ வயது அடைந்தவுடன் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் தாங்கள் கடமை முடிந்துவிடும் என்ற பெற்றோர்களின் கடமை உணர்வு. மேலும் திருமண மண்டபத்திற்காக திருமணத்தேதி முகூர்த்தம் குறித்தல் இது போன்று பல காரணத்திற்காக தவறான முகூர்த்த திருமணத்தேதி. இதன் விளைவுகள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரும், அதுபோல சில ஒவ்வாத தசாசந்தியில் திருமணம் நடத்த தேதி குறித்தல் இதன் விளைவு குடும்ப பிரச்ச்சனை வெடித்து சிதருதல் அகால விபத்துக்களுக்கும் வழிவகுத்துவிடும், மேலும் தோஷமான ஜாதகங்களை அவசரகதியில் திருமண நடத்தி வைத்து வேதனைகளை விலை கொடுத்து வாங்கி அனுபவிப்பது, இப்படி இருக்க ஜோதிடரை, ஜோதிடத்தை குறைகூறுவதா? இல்லை இதுதான் விதி என்று விட்டு விடுவதா?
சில தோஷ ஜாதகங்களை பெண்ணாக இருந்தால் 27 வயதுக்கு மேல் ஆணாக இருந்தால் 30 வயதுக்கு மேல் கட்டாயாம் காத்திருந்து திருமணம் செய்ய வேண்டும், அது போன்று உங்கள் வசதிக்காக தோஷமான நாட்களில் திருமணமண்டபத்திற்காக திருமணத்தேதி குறிக்க கூடாது. மிக மிக முக்கியாமானது ஜாதாகருக்கு ஒவ்வாத தசா சந்தியில் எந்த காரணத்திற்காகவும் சோர்த்து வைக்க கூடாது, தசா சந்தி, தோஷ திருமணநாள், தோஷ ஜாதக திருமண வயது இதை கட்டாயம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், ஜோதிடம் எங்கு தொட்டாலும் வழுக்கும், வாக்கு பலிதமும் வேண்டும். அனுபவ அறிஞர்களை நாடி குரு கணிக்கை செலுத்தி தேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள். நல்ல குருவை அடைய தினமும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.
மேற்கூறியவைகளை கடைபிடக்காமல் செய்தால் பின்வரும் விளைவுகளை சந்திக்க நேரும், அவைகள் குடும்பத்தில் ஒற்றுமை இன்மையை உண்டு செய்யும், தாமத குழந்தை பாக்கியம், நிரந்தரபிரிவு, நிச்சயத்திற்கு பின் மணமகன் அல்லது மணமகள் அகால மரணம், திருமணநாளிலே பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிதல், கோரவிபத்துகளில் குடும்பமே மரணம் அடைதல், ஒரு குழந்தை பெற்ற பிறகு நிரந்தர பிரிவு அடைதல்.
தொடரும்
சக்கரவர்த்தி கலியபெருமாள்-ஜோதிட பதில்
0 Comments