ஒரு முறை இந்த பதிவை படித்து விருப்பத்தை தெரிவித்து கடந்து செல்லவும் உங்களை பற்றிய ஒரு தெளிவை அடையலாம்!
யார் கர்மாபற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசை படுகிறார்களோ! ஏன் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம் என்று தெரிந்து கொள்ள! எப்படி அடிபட்டாலும் நாம் எவ்வாறு பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து நீங்கள் உணரலாம் கர்மாவிலிருந்து விலகி வாழலாம் விடுபட முடியாது கர்மாவை கழித்தால்தான் பிறப்பு அறுபடும்.
நம் மனதை கட்டுபடுத்தி வாழ்ந்து வரவேண்டும் மனம் ஆசைபடும் செயல் எல்லாம் செய்து பார்க்க கூடாது, நம் மனம் கர்ம படி செயல்பட வைக்கும் அதன் படி செயல்பட்டால் நாம் சிக்கி சிக்கலில் மாட்டி கொள்வோம், மனம் எல்லாவற்றையும் ஆசைபட வைக்கும், அதற்கு நம் வலிமை தெரியாது ஆசைக்கும் நம் வலிமை தெரியாது எல்லாவற்றிற்கும் ஆசைபட்டு சிக்கலில் மாட்டி கொள்வோம் இதை தான் நம் சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், புத்தர் ஆசைபடாதே ஆசையை குறைத்துக்கொள் என்று சொன்னார்கள். ஏன் சொன்னார்கள் என்று பார்ப்போம் மனம் என்ற சந்திரன் வெகு வேகமாக செல்லக்கூடிய சலனத்தை தரக்கூடிய ஆசையை தூண்டக்கூடிய கிரகம் கர்மபடியே நகர்வுகள் இருக்கும் உன் என்னத்தை பேச்சை கேட்காது இதை அடக்கி வாழ்பவன்தான் மற்ற கிரகங்கள் கொடுக்க கூடிய வலிகளை குறைத்து கொள்ள இயலும். இதைதான் வள்ளலார் அவர்கள் சன்மார்க்க சூழலில் வளர்ந்துவா! சன்மார்க்க சூழல் உன்னை வேறு கடுமையான தப்பான பாதைக்கு அழைத்து செல்லாது என்று கூறி உள்ளனர்.
உன்பிறப்பிற்கு பிறகு நீ வளரும் பாதை தாய் தந்தை ஆசான் குரு நல்ல ஆலோசனை தருபவர்களை அன்டி, என்ன விலை கொடுத்தாலும் நல்ல வெகுமதி தந்து அவர்களுடன் நல்ல மரியாதையுடன் அவர்களின் ஆலோசனையில் வாழ்ந்து வளர்ந்து வந்தால் கர்ம சிக்கலில் இருந்து தப்பித்து வாழலாம் நீ உன் எண்ணத்தில் வாழ மாட்டாய் உன் எண்ணம் என்பது கர்ம எண்ணம் பல பாவங்கள் நிறைந்தது.
ஜோதிடத்தில் கர்மா எப்படி செயல்படுகிறது நீ எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் பாவங்கள் புண்ணியங்கள் அடங்கியே இருக்கும் எந்த கர்ம பிண்டமும் (மனிதன்) ஒரு செயலை செய்யும் போது வெறும் புண்ணியங்கள் சார்ந்த செயல்களை மட்டும் செய்ய இலாது, அவன் செய்த செய்கின்ற செயலில் பாவம் மற்றும் புண்ணியங்கள் கலந்தே இருக்கும், அவனாக எதை செய்தாலும் தவறாகவே செய்ய ஆரம்பித்து பின் திருத்தி திருந்தி செய்து வாழ்வான் ஒரு ஆசான் துணை கொண்டு செய்தால் முதலில் அவனுக்கு அந்த செயல் வேண்டும் என்றால் மட்டுமே செய்ய சொல்வார்கள் தவறு இல்லாமல் வழிகாட்டுவார்கள் அந்த செயலில் பாவங்கள் அதிகாமாக இருக்காது. மனிதன் செய்கின்ற செயலில் உள்ள பாவ புண்ணியங்கள் ஏற்கனவே பிறப்பு கர்மாவை சேமித்து வைத்துள்ள சனி என்ற கிரகத்தில் பாவ புண்ணிய கர்மாவாக சேமிக்க படுகிறது. இவைகள் தகுந்த காலத்தில் இயற்கை சுபகிரகங்களுடனும் இயற்கை பாவ கிரகங்ளுடன் இணைந்து நமக்கு நல்ல தீய பலன்களை தருகிறது
எனவே நாம் குரு ஆசான் தாய் தந்தை நல்ல அறிவான நண்பர்கள் நல்ல அறிவுள்ள உறவுகள் அறிஞர்களின் ஆலோசனைகளுடன் வாழ்ந்து வளம்பெறுங்கள்.
பிதிவுகள் புரியவில்லை என்றால் திரும்ப திரும்ப படித்து தெளிவு பெறவும், மேலும் வேறு ஒரு நல்ல பதிவகளில் சந்திப்போம்
சக்கரவர்த்தி கலியபெருமாள்.
நான் -ஜோதிட பதில்- என்ற YouTube சேனலில் ஜோதிட பதிவுகளை -தினம் ஒரு ஜோதிட தகவல் -என்ற தலைப்பில் பதிவிட்டு வருகிறேன் அந்த சேனலை Subscribe செய்து எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!Disclaimer
ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், அது ஒரு கைகாட்டி போல, ஜோதிடம் மூலம் 60%முதல் 75% பலன்களை தெரிந்து கொள்ளலாம் தவிற 100 % பலன்களை அறிய இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.
பரிகாரம் என்பது கர்ம வினைகளால் நீ சிதைந்து நிற்கும்போது உன் மனதிற்கு திடம் அளிக்க செய்யப்படும் பயிற்சி வழிபாடே தவிற, உன் ஆசைகளை நிறைவேற்ற உன் கர்ம வினைகளை போக்க கூறப்படும் மந்திர மாய ஞாலங்கள் அல்ல!
0 Comments