Ticker

6/recent/ticker-posts

கர்மாவை நீ கழிக்கும் வரை உன்னை கர்மா தொடரும்-R

கர்மா -தொடரும்

ஜோதிடம் என்பது கர்ம பலன்கள்தான் இதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது, கர்ம பலன் என்பது செய்த வினைக்கு ஏற்ப பலன்களை அனுபவிப்பதுதான். ஒவ்வொருவரும் தான் செய்த வினைக்கேற்ப கிரகங்களை அமைத்து பிறப்பு ஏற்படுகிறது.

கர்மா உண்டா? இல்லையா?

கர்மா என்ற ஒன்று இல்லை என்றால் எல்லா பிறப்புகளும் நல்ல பிறப்புகளாக அல்லது பிறப்பு இல்லாமல் அமைந்துவிடும். அப்படி கர்மா இருப்பதால்தான் வினைக்கு ஏற்ப பிறப்பு வியாதிகள் வருமை செல்வம் வசதி கல்வி அறிவு உள்ளவன் இல்லாதவன் என பல பாகுபாடுடன் பிறப்பு ஏற்படுகிறது.
கர்மா என்பது இல்லை என்றால் எல்லா பிறப்புகளும் ஏக பிறப்புகளாக அமைந்து ஒரே அமைப்பில் பிறப்பு ஏற்பட்டு இருக்கும். கர்மா எப்படி எல்லாம் படுத்துகிறது ஒருவனுக்கு அதிகமான செல்வத்தை வழங்குகிறது சிலரைத் வருமையில் வாட்டுகிறது சிலர் நன்றாக படிக்கிறார்கள் சிலருக்கு உடனே வேலை கடனாளியாக வாழவைக்கிறது பொய்சொல்ல வைக்கிறது ஏமாற்ற வைக்கிறது வஞ்சிக்க வைக்கிறது திருட வைக்கிறது, குழந்தைபாக்கியம் இல்லாமலே செய்கிறது இப்படி பல ஏற்றத்தாழ்வுகளை வைத்துதான் பிறப்பு நிகழ்த்துகிறது.
சிலருக்கு சீக்கிரத்தில் திருமணம் சிலருக்கு திருமணத்திற்காக ஏங்க வைக்கிறது சிலருக்கு திருமணத்தை நடத்தி பிரித்துவிடுகிறது.

கர்மா-ராகு கேது

இதற்கு எல்லாம் ஒரே காரணம் கர்மாதான் இந்த பொறுப்பை ராகுவும் கேதுவும்தான் செயல்படவுக்கிறது. நீ செய்த பாவங்கள் கொலை கொள்ளை கொடுமை படுத்தியது பெண்களை சீரழித்தது எல்லாம் பாவங்களாக மாறி மரணம் மரணத்திற்கு ஒப்பான கண்டம் மரணபயம் மருத்துவத்திற்கு புலப்படாத நோய்களை ராகுபகவான்தான் காரணகர்த்தா இதை மிக அற்புதமாக தந்துவிடுவார்.
நீ முன்பு தடுத்த தடையாக இருந்த காரியங்கள் குடும்பத்தை கெடுத்தவைகள் எல்லாம் இப்பிறப்பிறப்பில் சாபங்களாக மாறி உணக்கு நடக்கவேண்டிய நற்காரியங்கள் எல்லாவற்றிர்க்கும் ஏங்கவைப்பார் கேது பகவான்.
இதையாரால் உனக்கு யாரால் தெளிவுபடுத்தமுடியும், யாரால் உனக்கு உதவி கிடைக்கும் ஐந்தாம் இடம் ஒன்பதாம் இடம் வலுத்தது நபர்களால் மட்டுமே உனக்கு தீர்வுகொடுக்கமுடியும்.
பூர்வஜென்ம புன்னிய ஸ்தானங்கள் யாருக்கொள்ளலாம் வலுத்து உள்ளதோ அவர்களை நாடி கர்மவினைகளை கழித்துகொள்ளுங்கள்.
நீ செய்த வினைக்கு நீனேதான் பரிகாரம் - எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் அவன் செய்த செயல்
கர்மாத்தொடரும்.

கர்மா நீ தீ்ர்க்கும் வரை அது உன்னை தொடரும்

கர்மா வாழ்க்கையை தீர்மானித்து இயக்குகிறது, விதி என்பது நீங்கள் செய்த வினையால் நீங்களே உருவாக்கியது, விதி என்பது செய்த வினை (செய்வினை அல்ல).
கர்மா சனி
ஜீவன் குரு
கர்ம வினைகளை அனுபவிக்க நவகோள்கள் உதவியுடன் பிறப்பு எடுத்து வாழ்கிறோம். நம் கண்ணுக்கு தெரியாத நாம் செய்த வினைகளையும் அதன்பலன்களையும் நிழல்கிரகமான ராகு கேதுக்களில் சீல்ட் செய்து மற்ற ஏழு கிரகங்கள் மூலம் கர்ப்பம் முதல் இறப்பு வரை அனுபவிக்க பூமியில் பிறப்பு ஏற்படுகிறது.
கர்ம வினையை உடனே கழித்துவிடவேண்டும் என்று என்னுகிறார்கள் அது தவறு கர்மாவை கழித்துவிட்டால் இறந்துவிடுவோம், கர்மாவை விதிப்படித்தான் கழிக்க முடியும்.
கர்ப்பம் முதல் இறப்பு வரை கருவறை முதல் இறப்பு வரை கர்மா தொடரும் அப்படி என்றால் இறைவன் 

மகான்கள் சித்தர்கள் வழிபாடுகள் ஜீவசமாதிகள் எதற்க்காக?

சரணாகதி 
பிறப்பு முதல் இறப்பு வரை கர்மபடி வாழ்ந்து மடிதல் வழிபாடுகள் மந்திர ஜப பாராயாணம் எல்லாம் உணர்ந்து பார்த்தால் புரியும்.
உணரும்வரை ஒன்றும் தெரியாது .
குரு சனி இணைவு நன்றாக இருந்தால் அவன் கர்ம படி நடப்பான் வக்கிரம் பெற்றுவிட்டால் துளிகூட இறைஉணர்வு இருக்காது வியக்கியானம் பேசுவான் கர்மாவிற்கும் ஜீவனுக்கும் எதிரானாவன் நாத்திகன் ஆவான்.
கர்மாத்தொடரும்
செய்த பாவங்களை கழிப்பதற்குதான் இந்த பிறப்பு மீண்டும் பாவங்களை செய்து உன் சேமிப்பை தொடங்காதே -அது எங்கே சேமித்து வைக்கும் தெரியுமா?
ஐந்தாம் இடத்திலும் ஒன்பதாம் இடத்திலும்தான் பூர்வீக ஜென்ம புன்னியஸ்தானத்தில்தான்.
உங்கள் சந்ததிகள் சிறப்பாக வாழவேண்டும் என்றால் புண்ணியம் செய்யுங்கள் உங்கள் எழு பிறப்பிக்கும் கவசமாக இருந்து உங்களை பாதுகாக்கும்.
திருமணத்தடை
வருமாணத்தடை
குழந்தைபாக்கியம்
சொல்பேச்சுகேலாமை
மரணபயம்
மருத்துவத்திற்கு புலப்படாத வியாதிகள்
புன்னிய பிறப்பிற்கு உண்டாகாது. வருங்கால சந்ததிக்கு புண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.

மனம் கர்மா ஜீவன் மனதோடு கர்மா அலையும்போது அவனை கர்மாவிற்கு ஏற்ப கசக்கி பிழிந்து விடும் இங்கே மனதை அடக்கினால் வலியும் வேதனையும் குறையும்மனதோடு அலையும் கர்மா வேதனையை கொடுக்கும் சலனத்தை கொடுக்கும்ஏமாற்றத்தை கொடுக்கும்இடப்பெயர்ச்சியை கொடுக்கும்இழப்பை கொடுக்கும்
(சனி+சந்திரன்)ஜீவனோடு அலையும் கர்மா சுகத்தை கொடுக்கும் சுகபோகத்தை அனுபவிக்க வழிவகுக்கும் கவுரவத்தை கொடுக்கும் பதவியை கொடுக்கும்புதிய உறவுகளை உருவாக்கும்ஜீவனுக்கு தேவையான செல்வத்தை கொடுக்கும்கர்மாவில் என்ன இருக்கிறதோ அதை தவிர வேறு எந்த சிந்தனையையும் ஜீவனுக்கு தராது
(குரு +சனி)மனம் -சந்திரன்
ஜீவன் -குரு
கர்மா -சனி

கர்மா

மனித இனம் கர்ம வினை காரணமாக கிரகங்கள் மூலம் வினைக்கு ஏத்தார்போல மாமிச பிண்டத்தை ஆட்டம் போட வைக்கிறது வினைக்கேற்ப நாமும் ஆடிக்கொண்டு இருக்கிறோம் வினைக்கேற்ப தான்டவம் ஆடுகிறோம்     வினையின் ஆட்டம அவன் நட்சத்திரத்திற்கு ஏற்றாற்போல் கூட்டம் அமைத்து ஆடுவான் ஆட்டிவைப்பான் முடிந்தவுடன் கர்ம வினையால் அவன் மூலம் மாட்டிவைப்பான்

ஒரு வினை எந்த வினையுடன் சேர்ந்து  ஆட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தே வினைதோன்றும் வினைகாலம் முடிந்தவுடன்  ஆளை கழட்டிவிட்டு வேறு வினையுடன் ஆடத்தொடங்கும் கண்டிப்பாக இனம் இனத்தோடு சேர்த்துத்தான் ஆடும் 

மனம்போகும் போக்கே வினைபோகும்போக்கு வினைக்கு ஏற்றாற்போல்  ஆடாமல் மனதை அடக்கி வினையை குறைத்துக்கொள்

குருதி சூடாக சுன்டாதவரை பாவம் கர்மம் எல்லாம் கண்ணிற்கு தெரியாது

-ஜோதிட பதில்


Post a Comment

0 Comments