Tamil Astrology -ஜோதிட பதில்
அனுபவம் ஆகச்சிறந்த பல்களைகழக அறிவு
அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள் மாதா பிதா குரு தெய்வங்கள் மகான்கள் சித்தர்களின் திருவடிகளை வணங்கி இந்த பதிவை பதிவிடுகிறேன் அனுபவம் என்பது ஆகச்சிறந்த பல்கலைகழ அறிவு, ஒரு செயல் நிகழ அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் அரிசி வேகும்வரை காத்திருக்க வேண்டும், அவசரபட்டு வடித்துவிட்டால் அரைவேக்காடுதான்.
ஒரு தொழிலை கற்றுக்கொண்டு தன் அனுபவத்தால் கையாளுகின்ற விதம் மற்றவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும், அவர் தீர்க்கும் பிரச்சனைகள் மிக எளிதாக சிறப்பாக கையாண்டு விடுவார்கள்.
ஒரு மருத்துவர் முதல் அறுவை சிகிச்சை கிழிபடும் இடம் அளவுக்கு அதிமாக இருக்கும் நேரம் அதிகபடும் சமயத்தில் தவறாக கூட நடந்து விடும் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்வதால் எவ்வளவு கிழித்தாலும் ஒருகட்டத்தில் பழகி விடுகிறது.
சமையல் செய்பவரின் முதல் சமையல், அதுபோல இரண்டு நான்கு சக்கர வாகனங்களின் பழுது நீக்குபவர் முதல் அனுபவம் அவருக்கு புரியவில்லை என்றால் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்லுங்கள் பார்த்து தருகிறேன். எதைகழட்ட வேண்டும் என்பதை கூட தெரியாதவர்களிடம் சிக்கி கொண்ட வாகனம் என்னவாகும்.
அனுபவம் உள்ள ஆசிரியர் உதாரணமாக 5 அல்லது 10 ஆம் வகுப்பு ஆசிரியர் பல ஆண்டுகளாக அந்த ஒரே வகுப்பிற்கு பல வருடங்களாக பாடம் கற்பித்து பல அனுபவங்களையும் மாணவர்களை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்ற அனுபவங்களையும் மிகச்சிறப்பாக செயல் படுவார்கள். அதே புதிய அனுபவம் இல்லாத ஆசியர் மாணவர்களுக்கு எப்படி கற்பிக்கவேண்டும் எப்படி தேர்விற்கு தாயர்செய்ய வேண்டும் என்ற அனுபவம் இல்லாதவர்களிடம் சிக்கிக்கொண்ட மாணவர்களின் கல்வி அறிவு வளிர்ச்சி பெறாது.
ஜோதிடமும் அப்படித்தான் நன்றாக யோசனை செய்து முடிவு எடுங்கள் ஒரு ஜோதிடர் தரமானவாரக ஆகவேண்டும் என்றால் சதா ஜோதிடத்தை ஆரயந்து வந்தாலும், படிப்பதற்கம் கற்று கொள்வதற்கும் பல ஆண்டுகள் தேவை அதற்கும் நல்ல ஆசான்கள் தேவை பல ஆயிரம் ஜாதகங்களை பார்த்த அனுபவங்கள் வேண்டும்.
ஒருபாவத்தை ஆரயவேண்டும், ஒரு விதியை பல ஜாதகத்தில் பொருத்திபார்க்கவேண்டும் அல்லது ஒரு கிரக இணைவு என்ன செய்யும் அந்த இணைவில் வருடகிரக கோட்சார கிரகங்கள் நகரும்போது என்ன செய்யும் அந்த கிரகங்களின் தசாபுத்தி நடக்கும்போது என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்து இருக்க வேண்டும். பாவகிரகங்களின் இணைவு சுப கிரகங்களின் இனைவு என்ன செய்யும், என்பதை அனுபவத்தில் அறிந்து இருக்க வேண்டும்.
திருமணபொருத்தம் மிக மிக மிக கடினமான ஒன்று ஒரு நொடியில் பார்பது அல்ல 98 சதவிகிதம் மன பொருத்தத்திலும் பூர்வ ஜென்ம புண்ணியத்திலும் வாழ்க்கையை நடத்திகொண்டுவருகிறார்கள். ஜோதிடம் பார்த்து பலன் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு ஜோதிட நூலை புரட்டி பலன் கூறி மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது கர்மா உன்னை தொடரும் துரத்தும்.
ஜோதிடர் வாஸ்து நிபுணர் பெயரியல் மேதை எல்லாம் தெரிந்து இருந்தால் தன் வாழ்க்கையை நன்றாக அமைத்து திருத்தி கொள்ளலாமே, ஆகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாமே! கடன் வரும் என்று தெரிந்தாலே ஒதுங்கி வாழலாமே ! எங்கே முதலீடு செய்தால் வெற்றி பெறலாம் என்று தெரிந்து கொண்டு வெற்றி பெறலாமே! நல்லமுகூர்த்தத்தை தெரிந்து கொண்டு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாமே ! நோய் வருவதை தெரிந்து கொண்டு விளகி வாழலாமே.
ஒரு எம் எல் ஏ, ஒரு ஊர் பிரசிடண்ட், ஒரு கவுன்சிலர் ஒரு சேர்மேன் ஒரு வார்ட் மெம்பர் நல்ல முகூர்த்தத்தில் நாமிநேசன் செய்து வெற்றி பெறலாமே!
ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு ஐ ஏ எஸ் உருவாக்கலாம் தவிர, தான் ஆக முடியாது.
எல்லாவற்றிற்கும் நேரம் காலம் வரவேண்டும் அதுவரை நல்லவனாக காத்து இருக்க வேண்டும். காலம் கனியும் வரை காத்து இருக்கவேண்டும். சோறு வேண்டும் என்றால் உலை கொதித்த பிறகு அரசி கலைந்து போட்டு அரசி வேகும் வரை காத்திருந்து வடிக்கவேண்டும். அவசர பட்டு வடித்து விட்டால் அரைவேக்காடகத்தான இருக்கும் எதற்கும் உதவாது.
சில உறவும் நட்பும் அவர்களின் தேவைகளுக்காக
இந்த நிகழ்வு முடிவுரை
நீண்ட நாட்கள் பழகிய உறவு மற்றும் நண்பர்கள் உன்னை விட்டு விளகி செல்கிறார்கள் என்றால் உன்னிடம் உள்ள தேவை முடிந்து விடுகிறது என்று பொருள்.
உறவும் நட்பும் வெளியேறுகிறது என்று பொருள்.
சில உறவுகளும் நட்புகளும் அப்படித்தான் நம் வாழ்க்கையில்.
தேவைக்காக பணத்திற்காக அவர்களின் திட்டத்தை நம் மூலம் பரிசோதித்து பார்பதற்காக நம்மை பயன்படுத்தி பார்ப்பார்கள்.
இந்த நிகழ்வுகள் முகவுரை
இங்கேதான் விதி கர்மா செயல்பட ஆரம்பிக்கிறது ஏழரையும் ஒவ்வாத திசைகளும் கற்பனை வருமானங்களை கனவில் எண்ணவைக்கும் ராகுமகா தசைகள் சுக்கிரனுக்கு சுளுக்கெடுக்கும் சந்திரன் ராஜா தசை என்று சொல்லப்படும் குரு இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது தெரியாது. அடிவிழும்போதுதான் வளிகளும் வேதனைகளும் தெரியப்படுத்தும்.
ராகு சுகமாக தேடி அலையும் எல்லாம் சொர்க்கமாக தெரியும் கற்பனை வருமானங்களை கனவிலே எண்ணவைக்கும் ஏன் அர்ப சுகங்களை அள்ளி பருக வைக்கும் எல்லை மீறி போகும்போது நசுங்கி வெளியேவரும் யாரை பற்றியும் கவலை படாது எல்லாவற்றையும் விழுங்கிவிடும். மிகப்பெரிய கிரகம் அல்லவா! அவற்றின் சூழ்ச்சிக்கு அனைத்து கிரகங்களும் ஏன் அனைத்துராசிகளும் அடங்கி திவால் ஆகிவிடும்.
சில உறவும் நட்பும் தேவைகளுக்காக எச்சரிக்கை!
சக்கரவர்த்தி கலியபெருமாள்- ஜோதிட பதில்
0 Comments