Ticker

6/recent/ticker-posts

மனதை அடக்கி நீ வாழவிட்டால் மீண்டும் கர்ம வினைகளுக்கு ஆளாவீர்கள். R

மனம் மதிகெட்டு அலையும் கர்ம வினைகளால்

பூர்வஜென்ம புன்னிய ஸ்தான (5 9 ஆம் இடம்) கர்ம பதிவுகள் உன் சந்ததிகள் சேர்த்து வைத்த நல்வினை தீவினைகள் ஒவ்வொரு பிண்டத்திற்கும் மாறுபடும்
நவகிரகங்கள் கர்மா பதிவுகளுடன் பிறப்பை ஏற்படுத்தி பஞ்ச பூத பிண்டமாக பிறக்குறது கர்ம பதிவுகள் முடிவாகும்போதே சுப பாவ வினைக்கேற்ப அதிபதிகளை நிர்ணயம் செய்து நேரத்தை ( லக்கனத்தை) நிர்ணயம் செய்து பிறப்பு ஏற்படுகிறது, மிக முக்கியமான ஒன்றை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் உடல் மனம் என்னும் அதிவேக சந்திரன் சலனத்துடன் (ராசியிலிருந்து)ஆரம்ப பதிவுகளுடன் சுற்ற ஆரம்பிக்கின்றான் முதல் சுற்றில் அனைத்து கிரகங்களின் கர்ம பதிவுகளை சந்திரன் தன்னிடத்தே பதிவு செய்து கொண்டு மனதையும் பஞ்ச பூத உடலையும் கர்ம பதிவுகளின் குனத்திற்கு ஏற்ற சலனத்துடன் நகர்கிறது உலும் வளர்ந்து வருகிறது சந்திரன் ஓடுபாதை 27 நட்சத்திரங்களின் பாதங்களின் பாதையே இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
சந்திரன் மனம் நிலை பாதிக்க பட்டவன் சலனத்துடன் பயத்துடன் சுற்றி வருவான் அவனை ஒருநிலை படுத்தி தியானம் செய்து அதன் (விதி) போக்கிற்கு விட்டு விடமால் ஆசைகளை அடக்கி நியாமான கோரிக்கைகளை நினைவில் கொண்டு கடந்து வந்தால் கர்ம பிடியில் அகப்பட மாட்டோம்.
மனம் மதி கெட்டு போகும் பல கற்பனையான உல்லாசமான நடக்காத திட்டங்களை மனதளவில் வாழ்ந்து வாழ ஆசைபடும் இது மற்ற கிரகங்களின் பதிவுகளை தாங்கி பயனிப்பதால் மனம் மதிகெட்டு அலைந்து கொண்டே இருக்கும் அதனால் அதன்போக்கை வளர்பிறை தேய்பிறை அமாவசை பௌர்னமியாக பிரிந்து அலைகிறது இதனை விரிவாக பார்க்கலாம்
பிறக்கும்போது தோன்றிய சந்திரன் (உடல் மனம்) நின்ற நட்சத்திர தசை கர்பத்தில் சென்றது போக நின்ற இருப்பின் தசைகளுடன் கர்மா நகர்கிறது இது நிரந்தரமான சுப அசுப பலன்களை தருகிறது.
அதே சமயம் அனைத்து கிரகங்களும் சலனத்துடன் நட்சத்திர பாதங்களின் வழியாக கோட்சார சஞ்சாரங்களை நிகழ்த்துகிறது இந்த நிகழ்வுகள் சுப அசுப தற்காலிக பலன்களை அளிக்கிறது.
குறிப்பு -சிலசமயம் கோட்சார நிகழ்வுகளும் தசா நிகழ்வுகளும் இணையும்போது உயிர்சேதம் பொருட்சேதம் அவமானம் கெட்ட பெயர் போன்ற கடுமையான நிகழ்வுகளை கர்ம வினைபடி தருகிறது இவற்றை தெளிவாக அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
மனதை அடக்கி நீ வாழவிட்டால் மீண்டும் கர்ம வினைகளுக்கு ஆளாவீர்கள்.

தரும்துயரம்

எவ்வளவு கொண்டுவந்தாயோ அவ்வளவும் அனுபவிக்கவேண்டும்
நான் இதுநாள் நாள் வரை கண்ட படித்த உணர்ந்த உணர்த்தபட்டவைகளை எழுதி வருகிறேன், எழுத போகிறேன் என் ஜாதகமோ பிறர் ஜாதகமோ சரியான நேரத்தை குறித்து கணிக்கபட்டதாக நான் நினைக்கவில்லை. சிலருக்கு சரியாக இருக்கலாம் பலருக்கு தவறாக இருக்கலாம் உடனே நான் கூறியதை தங்கள் ஜாதகத்துடன் ஒத்துபார்த்து முடிவுக்கு வரவேண்டாம்.
ஜோதிட விதிகள் அனைத்தும் நடந்துவிடாது பல விதிவிலக்குகள் உண்டு.
முதலில் அனைவரும் நம் ஜாதகம் யோகம் இல்லை பாவ ஜாதகம் இன்னும் ஒரு நல்லது கூட நடக்கவில்லை திருமணம் ஆகவில்லை வீடுகட்ட முடியவில்லை எனக்கு குழந்தை பிறக்கவில்லை ஆண் குழந்தை பிறக்கவில்லை பெண் குழந்தை இல்லை வண்டி வாகனம் இல்லை பிள்ளைகள் சொல்புத்திகேட்கவில்லை படிக்கவில்லை இன்னும்வேலை கிடைக்கவில்லை மனைவி பிரிந்துவிட்டால் என்று கவலைபடவேண்டாம்.
முதலில் நீ யோகவனாக மாற கற்றுக்கொள் உன்சந்ததிகளுக்கு கற்றுக்கொடு உண்மையாக இரு முடிந்தவரை பாவம் செய்யாதே தயவுடன் நடந்துவா கருணையாக இருக்கபழகு தயவு கருணை புண்ணியம் செய்யும் சூழிலில் இருக்க கற்றுக்கொள் வாழ்ந்து வா வளர்ந்து வா.
சித்தர்மகான்களை பற்றிக்கொள் உன் பாவங்கள் சிறுக சிறுக குறைந்து யோகங்கள் நடைபெற ஆரம்பிக்கும்.
ஆன்மீகம் உண்மை ஆகச்சிறந்த அருமருந்து சதா சிவனை நினைந்துவா அல்லது சீவனை நினைந்துவா! சிவன் சீவனில் வாழ்கிறான்.
குருவடி சரணம் திருவடிசரணம்
மகான்களை சித்தர்களை ஞானிகளை குருவை நினைத்தாலும் அவர்களின் பார்வை பட்டாலும் அவர்களின் நாமங்களை உச்சரித்தாலும் நம் பாவங்கள் போக்கபடும்.
உங்களுக்கு சாதகமான நட்சதிரத்தின் குருவை மகான்களை ஞானிகளை தரிசிப்பது மிகுந்த பாக்கியம்
உங்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கர்ம வினைகளை போக்குவதற்கும் துணையாக இருப்பார்கள்.

உண்மை கணக்கு ஏழரை, அட்டமம், அர்த்தாஷ்டம், கன்டச்சனி கால நிகழ்வுகளை கூட்டி கழித்துபார் உன் கர்ம வினை கணக்கு புரியும். உன் கஷ்ட காலத்தில் நீ புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே எல்லாம் கவசமாக வரும் நீ காப்பாற்ற படுவாய் இல்லை என்றால் உன்னை சேர்ந்தவர்கள் உன்னிடம் வந்து சேருபவர்கள் கூட நல்லவர்களாக இருப்பார்கள் இல்லை என்றால் நீ சத்தியமாக ஏமாற்ற படுவாய் நீ புண்ணியவணாக இருந்தால் ஒரு யோகவான் உனக்கு வழி காட்டுவான். இல்லை என்றால் நீ அலைந்து திரிந்து அலை கழிக்கபடுவாய் இந்த கணக்கும் கடைகூறில்தான் புரியவரும் அது வரை உன் கண்கள் கர்ம வினை திரையால் கட்டி மறைக்கப்படும். இனம் இனத்தோடு சேரும் குனம் குனத்தோடு சேரும் இனம் கூட கடைசியில் தான் புரியவரும்

You May Also Like

Post a Comment

0 Comments