எனக்கு எப்போதுதான் நல்ல காலம் பிறக்கும், நான் வேண்டாத தெய்வம் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை,
( பின்டம் புலம்புகிறது)!!!
எனக்கு எப்போதுதான் விமோஷனம்?
குருவடிசரணம் திருவடிசரணம்
ஏழரைச்சனி, அட்டமச்சனி, கன்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, ஜென்மச் சனியும் விரயச்சனி எல்லாம் விலகிவிட்டது. அட்டமக்குரு, விரயகுரு, ஜென்மகுரு, எல்லாம் விலகிவிட்டது, அஸ்தமனமும் நீங்கிவிட்டது, நல்ல நேரம் வந்து விட்டது என்று எல்லா ஜோதிடரும், கூறிவிட்டார்கள். இன்னும் விமோசனம் எதுவும் தெரியவில்லையே என்று எல்லா ராசிக்காரர்களும் புலம்புகிறார்கள் ஒரு சிலருக்கு காசுக்குமேல் காசு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் புரளுகிறது. வேறு சிலருக்கு இப்போதுதான் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சிலருக்கு வந்த யோகத்தை விட்டுவிடாமல் கட்டிபோட என்ன வழி என்ற கவலை இப்படி ஒவ்வொருவிதமான பிரச்சனை,
12 ராசிதான் 9 கிரகம்தான் 27 நட்சத்திரம்தான் இதற்குள்தான் கோடானகோடிப் பேர் பிறக்கிறார்கள் ஆனால் எல்லோருக்கும் மாறுப்பட்ட பலன்கள் வித்தியாசமான யோகங்கள். ஏழரைச் சனி சிலருக்கு பொங்குசனியாகக் யோகத்தைப் பொழிகிறது. பலருக்கு மங்கு சனியாகக் கெடுக்கிறது பாதிப்பையும் கொடுக்கிறது இதற்க்கு என்ன காரணம் அங்கேதான் "ஜெனனி ஜென்ம சௌக்யானாம்வர்தனி குலசம்பதாம்பதவி பூர்வ புண்யானாம்" என்ற வாசகத்தின் சிறந்த தத்துவம் இயங்குகிறது.
பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் நற்குடிப் பிறப்பு செல்வம் (சம்பத்) பதவி எல்லாம் தானாகவே வந்து ஆட்கொள்ளும் பூர்வ புண்ணியம் நன்றாக அமைவதற்கு நற்பண்புகளை வளர்க்க வேண்டும் மனத்தூய்மை, நேர்மை, வாய்மை,ஒழுக்கம் ஆகியவற்றை லட்சியமாக்கி நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும் அதாவது மடியில் கனமில்லாதிருந்தால் வழியில் பயப்பட வேண்டாம் வாழு- வாழ விடு என்று வாழ்ந்தால், மங்குச்சனியும் பொங்குசனியாக மாறும் மரணச் சனியும் இனிய சனியாக அமையும்.
நீங்கள் செய்த புண்ணியங்கள் உங்கள் கஷ்ட கலங்களில் கவசமாக வந்து காக்கும்
பரிகாரம் என்பது பிரச்சனைகள் வந்தவுடன் செய்வது அல்ல, அது கண்டிப்பாக செயல்படாது நீங்கள் உங்கள் கணக்கில் புண்ணியத்தை தேடிக் கொண்டே, சேர்த்துக்கொண்டே இருங்கள் உங்களுக்கு கஷ்டமான காலங்களில் கவசமாக வந்து காக்கும் நம் பிறப்பு விதியை அனுபவிக்க நாம் பிறந்துள்ளோம் நாம் எப்போதோ செய்த வினைக்காக இந்த பிறப்பு எடுத்து உள்ளோம் அப்படி இருக்க, இப்போது செய்யும் புண்ணியம் உங்களுக்கு எந்த பிறப்பிற்கு உதவும்? கண்டிப்பாக உதவும் உங்களை சேர்ந்தவர்களாலும் உங்களுகளின் சந்ததி மூலமாகவும், உங்கள் மனைவி மூலமாகவும், உங்கள் உறவு மூலமாகவும் ஒவ்வாத தசையில் சிக்கி நசுங்கமால் காப்பாற்றபடுவீர்கள்.
பஞ்ச பூதத்தால் ஆனது தான் அண்டமும் பிண்டமும் இவற்றை இயங்க வைப்பது நவகிரகங்களின் வேலைகள்
ஒன்பது கிரகங்களுக்கும் காரகங்கள் உண்டு இனங்கள் உண்டு
ஆண் பெண் அலி பாகுபாடு உண்டு அது போல ஜாதிகளும் உண்டு
என்க்கு ஆண் பெண் கிரகங்கள் மட்டும் போதும் அலி கிரகங்கள் தேவை இல்லை என்று புதனை ஒதுக்கி வைத்து விட்டு வாழ இயலுமா புதன் இல்லை என்றால் பேச்சு இல்லை கல்வி இல்லை கலை இல்லை கவிஞர் இல்லை கலைஞர் இல்லை நீ முட்டாள் ஆகி விடுவாய்.
அதுபோல அனைத்து கிரகங்களும் நம்மை செயல் பட வழிவகுக்கும்
நமக்கு வேண்டாத ஜாதி கிரகம் இது வேண்டாம் என்று உன்னால் கடந்து செல்ல முடியுமா?
ஒரு காலும் முடியாது விரிவாக தேவை இல்லை என்று நினைக்கிறேன்✍
சிவ சி சிவாயநம (பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள்)🦅
வெற்றி பெற வேண்டுமென்றால் பல சோதனைகளை கடந்து வரவேண்டும்
சந்திரன்- தாய் பயணம் சலனம் தடுமாற்றம் இழப்பு உணவு கெமிக்கல் பெயிண்ட்
கேது -ஞானம் ஞானக்காரகன் மோட்சகாரகன் ஆன்மிகம் தடை
சனி- தொழில் மூத்த அண்ணன்
குரு- மூக்கு ஜாதகன் கல்லீரல் தொட
மிகச்சிறந்த மருத்துவராக இருப்பார் அவர் மகன் மதுவிற்கும் போதை மாத்திரைக்கும் அடிமையாக இருப்பான் ஒரு சில மருத்துவருக்கு அங்கம் குறைபாடு உள்ள குழைந்தகளாக பிறப்பார்கள், ஒரு சில ஆசிரியர்களின் மகன் கொத்தனார்களாகவும் கூலி வேலை செய்பவராகவும் இருப்பார்கள். ஜோசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிட்ட வழிக்கு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் ஜோசியர் நினைத்தாலும் மனைவியையோ மகனையோ அல்லது அண்ணன் தம்பிகளை திருத்த இயலாது.
விதி கர்மா மிக மிக வலிமையானது உலக உறுப்பினர்கள் (மாமிச பிண்டங்கள்) 12 ராசிகளில் ஒன்றாகவும் ஒன்பது கிரகங்களை கொண்டும் 27 நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தில் அவதரித்து ஒன்பது நட்சத்திரத்திற்கு குறைவான சாரம் பெற்று பிறப்பு எடுத்து இருப்பார்கள். இதற்கு அப்பால் எந்த கிரகங்களும் கிடையாது. ஆனால் கணக்கில் அடங்காத சோதனைகள் வேதனைகள் நன்மைகள் என எல்லா பிறப்புகளும் அடைந்து மடிகிறது.
அப்படி என்றால் ஜோதிடத்தால் நாம் அடைந்த அடையபோகும் அனுபவித்த பலன்களை எடுக்க முடியாதா? முடியும் என்றால் எப்படி? ஒரு கிரகத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு பல காரகங்கள் உண்டு காரகம் என்பது காரணமானவர் அதில் உயிர்காரகங்கள் உயிரற்ற காரகம்( பொருள் காரகம்)
உதாரணமாக (சந்திரன் கேது) தாய் ஆன்மீக ஈடுபாடு உண்டு தாய் நோயால் அவதி அடைவாள் தர்ம சிந்தனை உடையவள் தானும் ஆன்மீகத்தில் ஈடுபடுவான்.
(சனி கேது) சிறு வயதில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிகத்தை தொட்டு நடந்துவந்திருப்பார் மனதில் ஒருவித விரக்தியோடும் ஏதோ ஒன்றை பறிகொடுத்ததுபோன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும், உத்தியோகம் வேலை பணி நிரந்தரம் உறுதி அல்ல. வெறுப்பான வாழ்க்கை மோட்சத்தை தேடும் நோக்கில் செயல்கள் இருக்கும்.
இப்படி ஒவ்வொரு காரகமாக கிரகங்களை இணைத்து பலன்களை கூறினால் பலன்கள் பழுது இல்லாமல் கிடைக்கும்.
என்ன பிராப்த்தமோ அதை தொழிலாக்கி கொள்ளுங்கள் அதை தான்டி செல்லும்போது தோல்வியில் முடிகிறது.
சிவ சிவ சிவாய நம
சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅
0 Comments