தோஷம் இல்லாத ஜாதகம்? தோஷம் உள்ள ஜாதகம் என்பவைகள் எல்லாம் ஜோதிடத்தில் உண்டா? இல்லையா?
நான் பதில் தர போவதில்லை இந்த பூமியில் பிறவி எடுத்து பிறந்துள்ள அத்துனை அன்பர்களுகம் பதில் தாருங்கள் விருப்பம் இருந்தால்!
இந்த உலகில் உள்ள அனைத்து உயிரனங்களும் அச்சில் வார்ர்த்தது போல பிறக்க வில்லை ஏதாவது ஒரு ஊனத்தோடும் குறைகளோடும் ஏழையாக பாவியாக வசதி உள்ளவனாக அறிவாலியாக முட்டலாக இப்படி ஒவ்வோரு பிறப்பிற்க்கும் ஏன் மாறுபாட்டை கொடுத்தான்? ஒரு சிலருக்கு பால்ய வயதில் திருமணம் நடைபெற்று குழைந்து பாக்கியத்தை பெருகிறார்கள் ஒரு சிலர் திருமணம் நடைபெற்று குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கி நிற்கிறார்கள்? ஒரு சிலர் திருமணம் அடுத்த வருடம். நடந்து விடும் ஆறு மாத்தில் நடந்து விடும் என்று வாழ்க்கையின் 60 சதவிகித நாட்களை கடந்து விட்டு ஏக்கத்தில் நிற்கிறார்கள் ஏன்?
திருமணம் ஆகி ஆறு மாதத்தில் டைவர்ஸ் நடக்கிறது இரண்டு குழந்தை பிறந்த பிறகு காரணம் இல்லாத காரணத்திற்காக பிரச்சனைகள் வெடித்து சிதறி பிரிந்து நிற்கிறார்கள் இதற்கு காரணம் என்ன?
புத்திர பாக்கியத்தை பெற்று புத்திரனை பறிகொடுத்தது நிற்கிரார்களே அதற்கு காரணம் என்ன? அண்ணன் தம்பிகள் அறிவால் எடுத்துக்கொண்டு உறவே இல்லை என்றும் உன் வாழ்விற்கும் சாவிறகும் என் காலடி உன் வீட்டில் படாது என்று கோரங்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே அதற்கு காரணம் என்ன?
நல்ல வேலை இல்லை வீடு இல்லை நல்ல வாழ்க்கை அடுத்தவருடம் கிடைத்துவிடும் ஐந்தாறு வருடத்தில் கிடைத்து விடும் என்று தன் காலத்தை கழித்து கொண்டு இருக்கிறார்களே அதற்கு காரணம் என்ன?
நன்றாக தாய்வீட்டீல் வளர்ந்த பின் திருமணம் ஆன சில மாதங்களில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாலே அதற்கு காரணம் என்ன? புது மனைவி வந்த பிறகு நன்றாக வாழலாம் என்ற கனவில் இருந்தவன் தன் உயிரை கொடுரூமான முறையில் மாய்த்துக்கொள்கிறானே அதற்கு காரணம் என்ன?
இதற்கு எல்லாம் காரணம் என்ன? 12 ராசிகள் ஒன்பது கிரகங்கள் 27 நட்சத்திரங்கள் எல்லாம் நல்லவைகள்தான் ஏதும் செய்யாது என்றால் எல்லாத்தடை தடங்கள்களுக்கும் யார் பொருப்பு அதற்கு எல்லாம் என்ன பெயர்கள் இவைகள் எல்லாம் யோகங்களா?
பிறப்பின் பதிவுகள் 🦅
ஒவ்வொரு பிண்டமும் கர்ம வினை பதிவோடு பிறக்கும் அந்த பிண்டம் நல்வினையாவதும் தீவினையாவதும் கர்ம வினை பதிவை பொறுத்தே கர்ம வினை பதிவுகளை மனக்காரகனே முதலில் பதிவு செய்து விடுவான். அவன் சலனமே முதல் சலனம்.
மனதை அடக்கு மார்க்கம் உண்டு.
அன்பர்களே நீங்கள் யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் உங்களுகளுக்கு நேரடியாக உதவமாட்டார்கள், நீங்கள் வணங்கும் இறைவனும்தான் எந்த தெய்வத்தை வணங்கினாலும் யாருக்கும் நேரடியாக வந்து உதவமாட்டார்கள், மாறாக உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உதவி அளிக்கப்படும், உங்களுக்கு வேண்டிய சொத்து, விரும்பிய சொத்து நேசித்த உறவு உங்களை விட்டு பிரியும்.
கால சோதனை கிரகங்களின் பலன்கள், உங்களுக்கு ஒவ்வாத சொத்து வேறு ஒருவருக்கு மாளிகைக்கு உதவும், யாரோ ஒருவரின் உதவி உங்களின் இந்த வாழ்க்கைக்கு துணையாக அமைந்து இருக்கும், அவர் சேர்த்த சொத்திற்கு ஆதாரமாக அமைந்திருக்கும்.
ஓவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கு பின்னால் ஒருவரின் உதவி மறைந்து வாழும் அதுதான் இறைவன், நீங்கள் செய்யும் ஒவ்வொரு புன்னியமும் யாரோ ஒரு ரூபத்தில் உங்களையோ உங்கள் குடும்பத்தாரையோ வாழ வைக்கும்.
கிரக சோதனைக்காலத்திலும் தசா சந்தி காலத்திலும் கிரக சந்தி காலத்திலும் கோட்சார சந்திகாலத்திலும் பாதிப்பும் பங்கமும் செலவும் சேதமும் விரயமும் நடக்ககூடும்.
ஒவ்வோரு ஜாதகத்திலும் 1 ஆம் இடம் 5 ஆம் இடம் 9 ஆம் இடம் வலுப்பெறவேண்டும் அதற்கு அவப்பொழுதும் தவப்பொழுது என்ற மாதிரி இடைவிடாத பிராத்தனை, உங்கள் குலதெய்வமும் நீங்கள் வழிபடும் இஷ்ட தெய்வமும் வழிபாடுகளும், நீங்கள் செய்கின்ற புண்ணியங்களும், ஜீவன்களுக்கிடத்து காட்டும் இறக்கங்களும் உங்களை அறியாமல் மேற்சொன்ன மூன்று இடங்களும், வலு அடையும், உங்களுக்கு துணையாக நின்று வழிநடத்தும். அதிஷ்டங்களை அள்ளித்தரும்.
கிரக சோதனைக்காலத்தில் ஆண்டவன் அத்தியாவசிய தேவைகளுக்கு படி அளப்பான் யோக காலத்தில் ஆசைகளை நிறைவேற்றுவான்.
*என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் ஈசன் செயல்*
சுக்கிரன் +கேது - மாலை, பூ மாலை
புதன்+சந்திரன் சேர்க்கை-வதந்தி
தொடரும்
நன்றி
0 Comments