கர்ம பிடியில் கடந்து வருகிறேன், நாட்கள் என்னை தின்று வருகிறது, என் கர்ம பாவம் என்னை விடவில்லை, வளர்சிதை மாற்றமாய் என் தேகம், சிதைந்து கொண்டு இருக்கிறது, என் கர்ம வினை காலத்திற்கு ஏற்ப, வேதனை பட்டு, கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு, நோய்வாய்பட்டு, நல்விணைக்கேற்ப புகழப்பட்டு, இந்த மாய வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நிற்கிறேன், இறைவா இந்த மாய பிறப்பை வேர் அறுத்து விடுவாய், இந்த அழுக்கு பிண்டத்திற்கு நற்கதி கொடுப்பாயக, நான் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்களையும், குற்றங்களையும் மண்ணித்து நற்கதி அடைய, இறைவா, உன் திருவடி வணங்கி வேண்டுகிறேன்.
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
வேண்டும் காலம் குருவை அறிந்திட
வேண்டும் ஞானம் குருவைப் புரிந்திட
வேண்டும் அறிவு குருவழி நடந்திட
வேண்டும் புண்ணியம் குருவை வேண்டிட
வேண்டும் பேறு குருவைக் கண்டிட
மாடு வாராது கன்று வாராது
மனைவி வரமாட்டாள் மகன் வரமாட்டான்
தேடிய செல்வம் வாராது
ஆடை ஆபரணம் வாராது
பற்றி தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே!!!
ஆகையால் நல்லதை செய்யுங்கள்
பாவம் செய்யாதிருங்கள்
அன்டமும் பின்டமும் பஞ்ச பூதத்தால் ஆனது பஞ்ச பூதங்களின் நிகழ்வுகள் அனைத்தும் நவக்கிரங்களின் கட்டுபாட்டில் இயங்குகிறது அன்டத்தில குறைபாடு வரும்போதும் பின்டத்தில் குறைபாடு வரும் போதும் தன்னை தானே சரி செய்து கொள்ளும். அன்டத்தில குறைபாடு வரும்போதும் தன்னை சரி செய்ய முயலும்போது அப்போதுதான் இயற்கை சீற்றங்கள் பஞ்ச பூதத்தால் ஏற்படுத்தி விடும்.
அது போன்று பின்டத்தில் குறைபாடு வரும் போது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் அப்போதும் பின்டத்திற்கு கர்ம வினைக்கேற்ப அழிவோ ஆக்கமோ ஏற்படும்.
அதற்கான கிரக அமைப்புகள் பற்றி வரும் பதிவுகளில் காணலாம்
( பின்டம் புலம்புகிறது)!!!
எனக்கு எப்போதுதான் விமோஷனம்?
குருவடிசரணம் திருவடிசரணம்
ஏழரைச்சனி, அட்டமச்சனி, கன்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, ஜென்மச் சனியும் விரயச்சனி எல்லாம் விலகிவிட்டது. அட்டமக்குரு, விரயகுரு, ஜென்மகுரு, எல்லாம் விலகிவிட்டது, அஸ்தமனமும் நீங்கிவிட்டது, நல்ல நேரம் வந்து விட்டது என்று எல்லா ஜோதிடரும், கூறிவிட்டார்கள். இன்னும் விமோசனம் எதுவும் தெரியவில்லையே என்று எல்லா ராசிக்காரர்களும் புலம்புகிறார்கள் ஒரு சிலருக்கு காசுக்குமேல் காசு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் புரளுகிறது. வேறு சிலருக்கு இப்போதுதான் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சிலருக்கு வந்த யோகத்தை விட்டுவிடாமல் கட்டிபோட என்ன வழி என்ற கவலை இப்படி ஒவ்வொருவிதமான பிரச்சனை,
12 ராசிதான் 9 கிரகம்தான் 27 நட்சத்திரம்தான் இதற்குள்தான் கோடானகோடிப் பேர் பிறக்கிறார்கள் ஆனால் எல்லோருக்கும் மாறுப்பட்ட பலன்கள் வித்தியாசமான யோகங்கள். ஏழரைச் சனி சிலருக்கு பொங்குசனியாகக் யோகத்தைப் பொழிகிறது. பலருக்கு மங்கு சனியாகக் கெடுக்கிறது பாதிப்பையும் கொடுக்கிறது இதற்க்கு என்ன காரணம் அங்கேதான் "ஜெனனி ஜென்ம சௌக்யானாம்வர்தனி குலசம்பதாம்பதவி பூர்வ புண்யானாம்" என்ற வாசகத்தின் சிறந்த தத்துவம் இயங்குகிறது.
பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் நற்குடிப் பிறப்பு செல்வம் (சம்பத்) பதவி எல்லாம் தானாகவே வந்து ஆட்கொள்ளும் பூர்வ புண்ணியம் நன்றாக அமைவதற்கு நற்பண்புகளை வளர்க்க வேண்டும் மனத்தூய்மை, நேர்மை, வாய்மை,ஒழுக்கம் ஆகியவற்றை லட்சியமாக்கி நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும் அதாவது மடியில் கனமில்லாதிருந்தால் வழியில் பயப்பட வேண்டாம் வாழு- வாழ விடு என்று வாழ்ந்தால், மங்குச்சனியும் பொங்குசனியாக மாறும் மரணச் சனியும் இனிய சனியாக அமையும்.
வினையால் விளைந்த வினைகள்
கிரகத்தினால் ஏற்படும் கோளாறால் மனம் பலவீனம் அடைந்து விடும் அதனால் உடல் சோர்வடைந்து எதையும் சிந்தனை செய்யாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். சில கிரகத்தன்டனை உயிர்சேதம் பொருட்சேதம் அவமானம் கெட்டபெயர் ஏற்படுத்தும், சிலருக்கு உடல் உபாதைகளை உண்டு பண்ணும் சிலர் செய்தொழில் நஷ்டம் ஏற்பட்டு கடனில் முழ்க ஆரம்பிப்பார்கள், சிலருக்கு குடும்ப நபர்களாலால் அவமானத்தை சந்திக்க நேரிடும், சிலருக்கு நல்ல யோக தசையானது குடும்ப நபர்களின் தசையால் பாதிக்கபட்டு வருமானத்தை இழந்து, தைரியத்தை இழந்து, குடும்பத்தை பிரிந்து மனநலம் பாதிக்க பட்டவர்களாய் திரிவார்கள்.
வியாதியின் வேதனையும் வலிகளும் வந்தவனுக்குத்தான் தெரியும், அவமானத்தின் ரனங்கள் அவமானபட்டவனுக்குத்தான் தெரியும். தசா சந்தி கோட்சார சந்தி ஒவ்வாத தசை தோஷ திருமணநாள் கூட்டு கிரக தசா சந்தி இவைகள் எல்லாம் வந்தவனுக்குத்தான் தெரியும் 16 வருட குரு தசை ஒவ்வாமால் ஆகிவிட்டால் நீ எந்த யோகத்தில் இருந்தாலும் உன்னை தரைமட்டம் ஆக்கி விடும் 6 வருட சூரிய தசை 10 வருட சந்திர தசை 18 வருட ராகு தசை சொல்லி மாலாத கஷ்டங்கள் பொருள் இழப்பு உயிர்சேதங்கள் உற்றார் உறவினர் பகை விவசாய நட்டம் அடுத்த பெண்டீர்மோகம், நல்ல சுகத்தை காட்டி கெடுத்து விடுவான். திருமணம் ஆகி 10 அல்லது 15 வருடங்கள் வாரிசுக்கும் வம்சத்திற்கும் ஏங்கி நிற்கும் தம்பதிகளின் வேதனை அவர் அவர்களுக்கு வந்தால்தான் தெரியும்.
ஆசைகாட்டி மோசம் செய்வது போல ஒருதசை கடைகூறில் யோகத்தை கொடுத்து அடுத்து வரும் யோக தசை ஒவ்வாத தசையாக மாற்றி மிகப்பெரிய கடனாலியாக ஓடி ஒளியவைக்கும் மனதின் கற்பனையிலேயே 40 அல்லது 45 வருடம் நிலையில்லாத வேலைகளை காட்டி வாழ்க்கை ஆதாரம் இல்லாமல் உட்காரவைத்திருக்கும், நிரந்த வேலை இல்லாமல் வாழ்க்கையை ஓட்டி இருப்பார்கள்.
நம் ஜோதிடம் மூலம் குழந்தைக்கு ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கும் 40 அல்லது 45 வயதை கடந்தும் ஒரு நிரந்தர வேலை இல்லாமல் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கும், நல்ல தசை என்று கூறி 16 வருடம் 18 வருடம் எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்களுக்கும், நன்றாக வெளிநாட்டில் வாழ்ந்து ஊருக்கு வந்து திருமணத்தை முடித்து செல்லலாம் என்ற ஆசை கனவில் வந்தவருக்கு பக்கத்து வீட்டு வேலித்தகறால் சிறைக்கு சென்றதும் எதிர்பாராத விபத்தால் கை கால்களை இழந்தும் சிலசமயம் உயிரை இழந்தவர்களுக்கும், திருமணம் ஆகி வாழ முடியாமல் விவாகரத்திற்கு கேட்டு நிற்பவர்களுக்கும் என்ன கூற போகிறீர்கள்?
இவைகள் எல்லாம் கிரகங்களின் வேலை கிடையாது அவர் அவர்களின் இயலாத கரணம்தான் கிரகங்கள் எப்போதும் யோகம் செய்து கொண்டுதான் இருக்கும் கெடுக்காது என்று கூறப்போகிறீர்களா
"வாழ்க்கையில் கிரக வேதனையில் இருப்பவர்களுக்கு திடீர் யோகம் எல்லாம் வராது பட்டினி இல்லாமல் சாப்பிட்டால் போதும்.
குருவேசரணம் ( கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு)
"ஓம் ஆம் ஹரீம் க்ரோம்
ஏஹி தத்தாத்ரேயர் நமஹ"
விதி முந்திக்கொள்ளும் நம்மை இறைவழிபாடுக்கூட செய்ய விடாது.
இந்த பதிவை பிறகு எழுதலாம் என்று எண்ணி இருந்தேன் ஆனால் ஏதோ ஒரு செயல் எண்ணை தூண்டுகிறது.
மிக நீளமான பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல தகவல்கள் இந்த பதிவில் இருக்கும் விருப்பம் இருந்தால் தொடருங்கள்.
நான் அடிக்கடி எழுதுவேன் இயற்கை தன்னை புதுப்பித்து கொள்ளும்போது அதாவது தன் பழய நிலைக்கு மாறும்போது பல பேர்அழிவுகளை ஏற்படுத்தி கொள்ளும். அன்டமும் பின்டமும் பஞ்ச பூதத்தால் ஆனது.
நான் ஏன் ஜோதிடத்தை கற்றுக்கொண்டேன் என்று பல தடவை நினைத்து கொண்டு வேதனை பட்டுக்கொண்டு இருக்கிறேன்
என்ன பலன்கள் நடக்கும் என்பதை ஜோதிடம் மூலம் தெரிந்து கொள்ளலாம் ஆனால் நம்மால் தடுக்க இயலாது ஆனால் நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் பிழைத்து கொள்ளலாம் ஆனால் விதி முந்தி கொள்ளும் விதி வேதாந்தம் பேச சொல்லும் நம்மை கட்டுபட வைக்காது.
ராகுவிற்கு மருத்துவம் பார்ப்பது மிக கொடுரமாக இருக்கும் பல உதாரணங்கள் கூறலாம். இப்போது என்ன நடக்கிறது என்பதை உலகமே பார்த்து நடுங்கிபோய் உள்ளது. மரணபயத்தில் மிரண்டு போகி உள்ளது.
மிருத்யுஞ்சய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷய மாம்ருதாத் ஓம்
நெய்தீபம் ஏற்றி பாரயானம் செய்யுங்கள் அல்லது ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கச்செய்யுங்கள்.
நம் முன்னோர்கள் சித்தர்கள் ஞானிகள் யோகிகள் கூறியதை கடைபிடித்து வழிநடப்போம்
கண்டிப்பாக அறிவியல் வளர்ச்சி புதுமை எல்லாம் ஒருகட்டத்தில் நின்றுவிடும்.
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ"
ஆராஜகம் அநீதி செய்த கொடுமைகள் யாரும் தண்டிக்கமாட்டார்கள் என்ற அகங்காரம் காலம் அடக்கிவிடும்.
காலம் மிகச்சிறந்த மருந்து (நானும் மகா பாவம் செய்த மாமிச பிண்டம்தான்)
இங்கே கூறியுள்ள மிக எளிமையான மந்திரங்களை நெய்தீபம் ஏற்றி பாராயணம் செய்யுங்கள்
உரு ஏற திரு ஏறும் திரு ஏற தீரும் வினை.
நம்பிக்கையுடன் தினமும் பாரயணம் செய்யுங்கள் மிக மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள் எளிமையானது மிகவிரைவில் விடுபடுவோம்.
தென்னாடுடைய சிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
இறைவன் துணை இருந்தால் இந்த பதிவு தொடரும்.
பலருக்கும் தெரிந்த மந்திரம்தான் இருந்தாலும் பரவாயில்லை இது என்ன செய்து விடும் என்று நினைப்பதை விட்டு விட்டு சேர்செய்து எல்லோரையும் பாரயாணம் செய்யசொல்லுங்கள் அதன் மகத்துவத்தை உணரலாம்
குருவடிசரணம் திருவடிசரணம்
சக்கரவர்த்தி கலியபெருமாள்✍
0 Comments