கிரகங்களால் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
குருவே சரணம் குருவடிசரணம் திருவடிசரணம்
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
சொத்து சுகம், தொழில் யோகம், சம்பாத்தியம், பதவி யோகம் வருமானம் இவைகளை யோக காலங்களில் கொடுத்து, சொந்த மனைவி மக்களுக்கு அல்லது பெற்றோர்களுக்கு உயிரிழப்பு, கண்டம் போன்ற சேதங்களை ஏற்படுத்தும் ஆரோக்கியத்தைக் கெடுத்து வைத்தியச் செலவுகளைக் கொடுத்து மதிபீடையினால் நிம்மதி இழந்து மற்றவர்கிளின் விமர்சனத்துக்கு ஆளாகி கோர்ட் கேஸ் என்று அலைய வைத்து உற்றார்-உறவினர்களையும் நண்பர்களையும் பகைவராக்கி தானும் அனுபவிக்காமல் போன நிலையாக்கிவிடும்.
இரண்டாவது வகை மனைவி, மக்கள் குடும்ப ஒற்றுமை, பாச உணர்வு இவற்றைத் தந்து பணக்கஷ்டம், தொழில் கஷ்டம், செய்தொழில் நஷ்டம், கௌரவப் போராட்டாம், வீண் விரயம், கடன்தொல்லை, எதிரிகளின் தொல்லை, பங்காளிப் பகை இவற்றை தந்து தேக சுகத்தையும் கெடுத்தது.வைத்தியச் செலவுகலையும் கொடுத்தது காலா காலத்தில் நடக்க வேண்டிய எந்த நல்ல காரியத்தையும் நடத்த முடியாமல் நலிய வைத்தது.சுருக்கமாக சொன்னால் நடைபிணமாய் நடமாடும் ஜடமாய் வதைத்துவிடும்.
மூன்றாவது வகை உயிர் சேதம், போருள்சேதம், வறுமை, தரித்தரம், கடன் தொல்லை, உற்றார்- உறவினர், பெற்றோர், உடன்பிறப்பு எல்லோரும் பகையாகிப் பிரிவுகளைச் சந்தித்து ஊர் விட்டு ஊர் தேடிப் பிழப்பை நாடிப் போன நிலை வாக்கு நாணயத்தை காப்பற்ற முடியாத சோதனை, தேவையற்ற வீண் விவகாரம், தர்க்கம், நல்லது சொன்னாலும் பொல்லாப்பு ஆவுதல், சொத்து கிரய-விக்கிரய வகைலும் ஏமாற்றம், இழப்பு, குடும்ப வழ்கையுளும் நிம்மதி குறைவு, குழப்பம், கருத்து வேறுபாடு, உள்பூசல், கௌரவபிரச்சனை இவைகள் எல்லாம் ஒரு பிரிவு.
தெய்வம்கூட கிரகத்திற்கு பயந்து உங்கள் கஷ்டகாலத்தில் கண்மூடிக்கொண்டு நிற்கும் உங்கள் நல்ல காலத்தில் மட்டுமே தெய்வம் உங்கள் கோரிக்கைகளை நிரைவேற்றும் இது அனுபவபூர்வமான உண்மை
பொதுவாக நல்ல கிரகமோ கெட்ட கிரகமோ பெயர்ச்சி ஆகும்போது ஒரு சில கால அளவிற்கு முன்னாலோ அல்லது நடந்து கொண்டிருக்கும்போது கண்டிப்பாக ஒரு சலனத்தை ஏற்படுத்தும் ஆதாவது ஒரு குட்டையில் அதிகமாக தண்ணீர் இருந்தால் புது தண்ணீர் வரும்போது குழம்பித்தான் தெளியும், அதுபோல அந்த குட்டையில் தண்ணி இல்லாவிட்டாலும் புது தண்ணீர் வந்து விழும்போது குழம்பித்தான் தெளியும் அதுபோல இந்த ராகு கேது பெயர்ச்சிகள் பொதுவாக எல்லோருடைய குடும்பத்தையும் ஒரு குழப்ப குழுப்பி இருக்கும். குறிப்பாக தனுசு குரு கும்ப குரு மிதுன குரு துலா குரு பெண்ணாக இருந்தால் தனுசு கும்ப மிதுன துலா சுக்கிரன் உயிர் காரகத்தை பயமுறுத்தும் அச்சுறுத்தும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை உண்டு செய்யும் அல்லது செய்திருக்கும் குறிப்பாக பங்காளி சண்டைகளை தூண்டி இருக்கும்.
தேவை இல்லாமல் சன்டை போடச்செய்யும்
அதுபோல தனுசில் சனி துலாம் சனி சிம்ம சனி அதுபோல தனுசில் செவ்வாய் மேச செவ்வாய் மிதுன செவ்வாய் சிம்ம செவ்வாய் துலாத்தில் செவ்வாய் கும்ப செவ்வாய் உள்ளவர்கள் குடும்பத்தில் கலகம் தகராறு ரத்த சொந்தத்தில் பகை வாய்தகறாறு கலவரத்தில் முடியும். தயவு செய்து அடக்கி வாசிக்கவும.
குறிப்பாக ராகுதசை செவ்வாய்தசை நடப்பவர்கள் இவர்களுக்கு ஏழரை அட்டமம் அர்த்தாஷ்டம்ம் கன்டச்சனி நடந்தாலும் கவனமாக இருக்கவும். சிலரை பீஸ் பிடிங்கி இருக்கும் சிலர் பீஸ் போயிருக்கும்.
பணி செய்யும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை காணமல் போதல் பரிதவித்தல் அவமானம் கெட்டபெயர் வேலை இழப்பு போன்ற நிகழ்வுகளை செய்து காட்டும். உங்களுக்கு தெரியாமல் தொழிலை இழக்கும் தருவாய்க்கு அழைத்து செல்லும்.
சில அதி புத்திசாலிகள் இந்த பலன் பொதுபலன் எல்லாருக்கும் நிகழும் என்று கூறுவார்கள் அவர்களுக்கு வலிவந்தால்தான் தெரியும் வலியின் வேதனை.
நாடி- பாரம்பரியம் ஒரு அலசல்
ஒரு உதாரண கிரக அமைவு மூலம் பார்க்கலாம் நாடி- பாரம்பரியம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.
சந்திரனுடன் சனி இணைவு ஏற்பட்டால் அங்கே பெரிய இழப்பு ஏற்பட போகிறது, பெரிய நஷ்டம் ஏற்பட போகிறது என்று பொருள், அதே சனிக்கும் பிறப்பு ஜாதக சுக்கிரனுக்கும் சம காலத்தில் தொடர்பு ஏற்பட போகிறது என்றால் சம்பாதித்து இழக்கபோகிறான் என்று பொருள், அல்லது எந்த அளவுக்கு லாபம் ஏற்படுகிறதோ அதே அளவிற்கு நஷ்டம் ஆகி விடும், இந்த கோட்சார சனிக்கு சுக்கிரன் தொடர்பு இல்லை என்றால் இருப்பதையும் கடன் வங்கியும் சேர்ந்து இழப்பான்.
சனி சந்திரன் இணைவு என்றால் என்ன என்று பார்ப்போம் நாடி முறையில் கிரக இணைவு என்பது 2, 1, 12, அடுத்து 5, 7, 9, 3, 11 இதில் 2, 1, 12 இணைவு காலம்தான் பாரம்பரியத்தில் ஏழரை சனி காலம், இந்த இணைவில் 7 ஆம் இடம் சனி வரும் காலம் கண்டச்சனி என்று பாரம்பரியத்தில் அழைக்கப்படுகிறது.
இதில் பிறப்பு ஜாதகத்தில் யாருக்கு சனிக்கும் சுக்கிரனுக்கும் இணைவு இருக்கிறதோ காசு பணத்திற்கு கவலை இல்லை ஏதாவது ஒரு வழியில் பணம் கிடைத்துக்கொண்டே இருக்கும், அதே சனி சுக்கிரன் இணைவுடன் புதன், ராகு, சூரியன் என ஏதாவது ஒரு கூட்டனி ஏற்பட்டு விட்டால் சொல்லவே வேண்டாம் வியபாரம், வட்டி, தரகு, ரகசிய வருமாணம், அரசு அல்லது தந்தையின் வருமானம் என தடங்கள் இல்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும். இப்படி பட்டவர்களுக்கு ஏழரைச்சனி வந்தால் தத்தவும் பேசுவார்கள் ஏழைரையாவது எட்டரை யாரவது ஒன்பதைரையாவது என்று.
மேற்கண்ட எல்லா இணைவிற்கும் சந்திரன் கேது தொடர்பு ஏற்பட்டால் கொண்ட வழியில் வடிந்து விடும்.
அடுத்த பதிவில் உங்களின் ஜாதகத்துடனோ அல்லது உதாரண ஜாதகத்துடனோ இதே விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்
சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments