உலகத்தில் பிறந்த அனைத்து ஜீவன்களுக்கு (குரு) உயிர் மேல் அவ்வளவு ஆசை!
நன்றாக வாழ வேண்டும் சுகத்தோடு வாழ வேண்டும் நல்ல அழகான மனைவியோடு வாழ வேண்டும் நல்ல அறிவுள்ள அழகான குழைந்த வேண்டும் நல்ல வசதியான வீடு வேண்டும் வாகனம் வேண்டும் நல்ல வேலை அல்லது தொழில் வேண்டும்.
அதிக மிக அதிக என்றால் ராகு
இது எல்லாவற்றுக்கும் தடை கேது
செவ்வாய் கனவன் போலீஸ் ராணுவம் கூர்மையான ஆயுதம் ரத்தம்
சனி தொழில் பொதுமக்கள்
புதன் வனிகம் வியாபாரம் கல்வி பேச்சு காதலன்
சூரியன் குழந்தை மகன் உயர்வு அதிகாரம் அரசாங்கம்
ராகு சந்திரன் இணைவு கிரகணம்
சனி சுக்கிரன் இணைவு பணக்காரன் குரு சுக்கிரன் இணைவு ஆயுள் விருத்தி
குரு சனி சுக்கிரன் இணைவு நன்றாக செல்வோத்தோடு வாழ்வான்
இப்படி பட்ட இணைவுகள் இயற்கையாக ஜாதகத்தில் அமைந்து விட்டால் அவன் யோகக்காரன்
புன்னியம் செய்தவன் அப்படி இணைவு இல்லாத ஜாதகத்திற்கு செயற்கை இணைவுகளை கொடுக்கவேண்டும்
இதற்கு பெயர்தான் பரிகாரம் என்று கூறிவந்தார்கள்.
செயற்கை இணைவு என்பது பல வழிகள் உள்ளது பூர்வ ஜென்மம் புண்ணியம் இருந்தால் இவ்வாறு இணைவு உள்ள மனைவி மகன் மகள் கிடைப்பார்கள் அப்படி இல்லை என்றால் சரியான தெய்வ வழிபாடு நட்சத்திர வழிபாடு ஜீவசமாதி வழிபாடு இப்படி உள்ளன.
எதைச்செய்தாலும் தவறில்லை இந்த பாவத்தை பணத்தால், பதவியால், பரிகாரத்தால், தான தர்மத்தால் தீர்த்து கொள்ளலாம் என எண்ணி வாழ்ந்தால் செய்த பாவங்கள் வளர்ந்து தன்னையும், தன் வம்சத்தையும் பாதித்துவிடும், நல்வழியில் நடந்து முன் வினைகளை தீர்த்துக்கொண்டால் வம்சம் நன்றாக வாழும்.
நீ சேர்த்த கோடிகள் உன் மரணத்தை மாற்றாது உன் நோய்களுக்கு மருந்தாக இருக்காது.
மைக்கல் ஜாக்சன் ஒரு மருத்துவ படைகளோடு பல்லாயிரம் டாலர்கள் சம்பளம் கொடுத்து தான் நீன்ட ஆயுலோடு வாழ்ந்துவிடவேண்டும் என்று வாழ்ந்து வாழ்ந்தான் இறுதியில் மரணம் அவனை சீக்கிரம் வென்றது.
அவன் சேர்த்த பணம் என்ன செய்ய முடிந்தது!
மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் மரணத்தை பணம் வெல்ல முடியவில்லை!
யார் வென்றார்கள்!
நோய் இல்லாத வாழ்க்கைதான் கோடீஸ்வரன் வாழ்க்கை
அடுத்த பதிவில் பார்ப்போம்
இரண்டு கிரகங்கள் ஒருவர் வீட்டில் மற்றொருவர் மாறி நிற்பதால் ஏற்படும் யோகம் ஆகும்.
பரிவர்த்தனை யோகம் எப்போது செயல்படும்- ஜோதிட ஆசான்களை அனுகி தெரிந்து கொள்ளுங்கள்.
பரிவர்த்தனை நடப்பில் வரும்போது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உச்ச நிலையில் இருப்பவர்கள் எதிர்பாராத விதமாக கிழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள், ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் எதிர்பாரத விதமாக கவிழ்க்கபடுவார்கள் எதிர்பாரத விதமாக ஆட்சி பாடத்திற்கு கொண்டுவரப்படுவார்கள், உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் திடிரென வீழ்த்படுவார்கள், தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு எட்டிவிடுவார்கள், ஆன்மீக அவதியடைய இருப்பவர்கள் திடிரென பெண்களால் அவப்பெயர்கள் ஏற்பட்டு அசிங்கப்படுத்தபடுவார்கள். சிலர் தன்வாழ்க்கையில் பாதி நாள் குடும்ப வாழ்க்கையும் மீதான நாள் காவி உடுத்தி ஆன்மிகத்தில் ஐயக்கியம் ஆவதும். வாழ்க்கையின் முற்பகுதியில் தகாது உறவுகள் களவாடுதல் துரோக செயல்களில் ஈடுபடுதல் பிற்பகுதியில் திருந்தி வாழ்க்கை பாதைகளையும் சீர்செய்து கொள்ளுதல் இதற்கெல்லாம் காரணம் பரிவர்த்தனை யோகங்களால் செயல்படும்.
புதன் சந்திரன் குரு இணைவு எங்கெல்லாம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் முறைகேடுகள் ஒழுக்ககுறைபாடு காதல் திருமணம் முறைமாறிய உறவுகள் ஏற்படும்.
இதுமட்டும் காரணம் அல்ல அதிசூட்சமங்களும் உண்டு ஜோதிட ஆசான்கள் நீங்கள் ஜோதிடம் பயிலும்போது தொட்டுகாட்டுவார்கள்.
அதிசூட்சமங்கள் என்றால் சிலருக்கு தெரிந்த விசயங்கள் அது உங்களுக்கு தெரியாத செய்திகள்.
வேறு ஒருபதிவில்.
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅
0 Comments