Ticker

6/recent/ticker-posts

திருமணம் மற்றும் விவகாரத்து Wedding and Divorce ஜோதிட ஆய்வுகள் R

திருமணம்  -ஜோதிட பதில் -Wedding 

திருமணம் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகிறது! ஆம் என்றால் யாருக்கு நிச்சயக்கபடுகிறது பிரிவு முறிவு இல்லாமல் விட்டு கொடுத்து கடைசி வரை வாழ்கின்ற தம்பதிகளுக்குதான். திருமணத்திற்கு பிறகு அனைவரும் சந்தோஷம் வாழ்வது கிடையாது, சிலர் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விடுகிறார்கள் சிலர் கணவன் அல்லது மனைவி சொத்திற்கு ஆசைப்பட்டு கருத்து வேறுபாடுகள் உடன் வாழ்ந்து வருவார்கள், ஒரு சிலர் கவுரமான குடும்பத்தில் வாழ்க்கை பட்டு கணவனின் தகாத நடவடிக்கைகளை வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் குடும்ப கவுரவத்திற்காக பெயருக்கு பிள்ளையை பெற்றுக்கொண்டு மனதளவில் பிரிந்து ஊருக்காகவும் உறவுக்காகவும் சிலர் வாழ்ந்து வருகிறார்கள்.

உயர்வான அந்தஸ்த்தான குடும்பத்தில் குழந்தைகளுடன் வாழ்ந்து கொணடிருக்கும்போது குடும்ப கவுரவத்தை காற்றில் பறக்க விட்டு யாருடனாவது மனைவி ஓடிவிடுவது. ஒருசிலர் மனதளவில் பிரிந்தாலும் குழந்தைகளுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களால் ஒரே  வீட்டில் வாழ்ந்து வருவார்கள்.

மேற்கண்ட காரணங்களுக்கு ஜோதிட ரீதியான விளக்கம் என்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம். 

திருமண நாள் எப்படி அமைக்கவேண்டும்? Wedding Day 

திருமண நாள் மிக முக்கியமான ஒன்று ஆகும் நம் சௌகயர்த்திற்காகவும் மண்டபத்திற்காகவும் தேதி குறிக்க கூடாது, திருமணம் நடைபெறும் காலம்  கோட்சார குரு கர்ம காரகன் சனி மற்றும் செவ்வாய் மற்றும் சுக்கிரனை ஏக காலத்தில் பார்க்கும்போது திருமணம் நடைபெற்று விடும். எதையும் ஜீவனிடம் இருந்து பிரிக்க கூடிய கிரகம் ராகு மற்றும் கேது ஆகும். ஆண் என்றால் சுக்கிரன் பெண் என்றால் செவ்வாய்க்கு 1 5 9 2 6 10 ல் கேது இருந்தால்  கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் பிரிவினைகளை உருவாக்க வழி வகுக்கும்.

பரிவர்த்தனை ஜாதகங்கள் -Horoscope திருமண உறவை என்ன செய்யும்?

மேலும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றாலே ஆபத்து இருக்கிறது  என்று பொருள் ஏதாவது ஒரு வழியில் சிக்கலை ஏற்படுத்தும்.    பரிவர்த்தனைக்கு பிறகு ஜீவனைத்தவிர வேறு ஒரு ஆண் கிரக தொடர்பு ஏற்படுமானால் அதாவது தொடர்பு என்பது 1 5 9 3 7 11 2 12  ஆம் இடங்களில் இணைவது ஆகும். இவ்வாறு அமைய பெற்றால் ஜாதகர் மனைவியை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஏற்பட வழி வகுத்து விடும்.

 ஜோதிட குறிப்புகள்🌼

🦅காலதாமத திருமணத்தால் ஏற்படும் நன்மைகள்!  யாருக்கு காலதாமத திருமணம் செய்யவேண்டும்

சிவ சிவ சிவாயநம ஓம்

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சனியோ ராகு கேதுவோ ஜென்மராசி 7 8 2 12 ஆம் இடங்களை பார்த்தாலும் இருந்தாலும் காலதாமதமாக திருமணம் நடந்தால்தான் மண வாழ்க்கை மணம்நிறைந்த வாழ்க்கையாக அமையும் இல்லாவிட்டால் மனமுறிவுகளும் குடும்ப பிரிவுகளும் ஏற்படுத்திவிடும்.

சட்ட ரீதியான திருமணம் கள்ளத்தொடர்பு தற்காலிக தொடர்பு திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்வது, திடீர் பிரிவு முறிவு ஒவ்வாத தசைகளில் பிரிந்து விடுவது தற்கொலை தூண்டுவது இதற்கான கிரக அமைவுகள் பற்றி பின்னர் பார்க்கலாம்.

திருமணம் திருமண தடை பிரிவு முறிவு

திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது ஆண் (குரு) பெண் (சுக்கிரன்
கணவன்- செவ்வாய்
மனைவி- சுக்கிரன்
சனி -கர்மா
குரு -ஜீவன் ஆண்
ஒருவருக்கு திருமணம் என்பது செவ்வாய் சுக்கிரன் இணைவு ஏற்படும் போது திருமணம் நடைபெறும், அதற்கு கர்மா தொடர்பு ஜீவனாகிய குருவின் தொடர்பு கட்டாயம் வேண்டும்.

திருமணத்தடை 

செவ்வாய் சுக்கிரன் இவர்களுக்கு பிறப்பு ஜாதகத்தில் ராகு கேதுக்கள் 1 5 9 ல் இருந்தாலோ அல்லது ராகு கேதுகளுக்கு மையத்தில் இருந்தாலோ திருமணத்தில் தடையேற்படுத்தும் காலதாமதத்தை உண்டு பண்ணும்.
செவ்வாய் சுக்கிரன் அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்தாலும் திருமணத்தில் பிரச்சனைகள் உண்டு.
வேறு சில காரணங்களும் உண்டு அடுத்த பதிவில் விட்டதை பார்க்கலாம்.
திருமணத்தில் ஏற்படும் பிரிவுகள் முறிவுகள் எற்படும் காலங்கள் அதற்கு உண்டான காலங்கள் அடுத்த பதிவில்.

சுக்கிரன் கேது இணைவு என்ன மாதிரியான பலன்கள் நடக்கும்?

சுக்கிரன் சுகம் ஆசை பணம், பெண் 
கேது ஆன்மீகம் தடை சுருங்குதல்
குடும்ப வாழ்வில் கண்டிப்பாக சிக்கலை உண்டு செய்யும் பிரிவினையை ஏற்படுத்தும் சுகத்தை குறைத்து ஞானத்தை தேடி அலைய வைக்கும்.
வீடு வாகன தடை திருமணத்தடை தாமதம் உண்டு செய்யும் வாரிசு தடை செய்யும

சக்கரவர்த்தி கலியபெருமாள் ✍

Post a Comment

0 Comments