சந்திரன் இழப்பு திருட்டு மனது
கேது ஞானம்
சனி தாமதம் பழசு அழுக்கு மூத்த சகோதரன்
ராகு அபகரித்தல் விழுங்குதல் காதுமடல்
ஏழரைச்சனி கன்டச்சனி அஸ்டமச்சனி நடக்கும்போது சந்திரன் சனி சம்பந்தம் ஏற்படும் இதனால் இழப்பு திருட்டு காணமல் போகுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்
அதுபோலவே ராகுதசை ராகுபுத்தி நடக்கும்போது பிரிதல் காணமல் போதல் திருட்டு போதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.
பிறப்பு ஜாதகத்தில் மேற்கண்ட இணைவு இருந்தால் நடைபெறும்.
திருமணம் செய்யலாம் ஆனால் சந்திர தசை அல்லது ராகுதசை நடந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
விபத்துகளையும் உயிர்ச்சேதத்தையோ பொருட்சேதத்தையோ அல்லது அவமானங்களையோ உண்டு பன்னும் வம்பு வழக்கு கேஸ் உடல்நலம் குன்றுதல் மருத்துவத்திற்கு புலனாகாத வியாதிகளை உண்டு பண்னும்.
செய்தொழிலை நஸ்டபடுத்திவிடும் கவனமாக செயல்படவேண்டும்.
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் தசையின் கடைசி புத்தி ராகு செவ்வாய் பலமாக இருந்தால் நிலபுலன்கள் சேர்க்கை உண்டாகும் மாறாக பலவீனமாக இருந்தால் வாகனவிபத்து சொத்து தகராறு கட்டபஞ்சாய்த்து அடிதடி கோர்ட் கேஸ் போலீஸ் டேசன் கைகால் முறிவு உண்டு செய்யும்.
பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை
வடக்கு பார்த்த அம்மன் அல்லது காளிக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
கடக ராசி கடக லக்கனம்
கடக ராசி கடக லக்கனம் கடகம் நண்டின் குணங்களை கொண்டு வாழ்வார்கள் கடகம் எந்தவழியிலும் செல்லும் தகுதி உடையது முன்னோக்கி நகரும் பின்னோக்கி நகரும் பக்கவாட்டில் நகரும் குறுக்கு மற்றும் நெடுக்கில் நகரும் எனவே எந்த சூழ்நிலையையும் சந்தித்து அதற்கு தகுந்தாற்போல தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வார்கள், மற்றவர்களின் மனதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல தன்நடவடிக்கைகளை மாற்றும் தகுதி கொண்டவர் அதனால் தான் இருக்கும் இடத்தில் முதன்மை பெறுவார்கள்.
மிகுந்த பாசம் உள்ளவர்கள் பாசம் என்பதை அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் தனிமையில் அழக்கூடியவர்கள், ஒரு குடும்பத்தில் இந்த ராசிக்கர்ர்கள் இருந்துவிட்டால் அந்த குடும்பத்தை கன்னியமாக கட்டி காப்பார்கள் தாய்மை உள்ளம் கொண்டவர்கள் தனிமையில் அழக்கூடியவர்கள் எப்போதும் சுதாரிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். மற்றவர்களை வசீகரித்து தன்பக்கம் ஈர்க்கும் தன்மை கொண்டவர்.
குரு சனி புதன் தன்மைகள் அடங்கிய கடகம் சந்திரனின் சலனம் துரிதமானது மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்கள் ஆயக்கலைகள் 64 யும் ருசிக்க நினைப்பார்கள், எந்த துறையாக இருந்தாலும் முதன்மை பெற தகுதி உடையவராக இருப்பார்கள், இவர்களின் பேச்சு நிர்வாகத்திறன் ஆளுமை உடையதாக இருக்கும்
இவைகள் எல்லாம் பொதுபலன்களே மற்ற பலன்களை அறிய தனிநபர் ஜாதகம் பாரத்து தெரிந்துகொள்ளுங்கள், நண்பர்கள் அனைவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சுக்கிர தசை எவ்வாறு இருந்தது அனுபவத்தை பதிவிடுங்கள்
தொடர்ச்சி அடுத்த பதிவில்
வேத நாடி ஜோதிடக்கலை 🦅
ஒரு கிரகம் தான் நின்ற இடத்தில் இருந்து 2 12 1 5 9 3 7 11 இடங்களில் இருக்கின்ற கிரகங்களோடு தொடர்பு கொள்ளும் சேர்க்கை பெறும்.
இதில் 2 12 1 5 7 9 இடங்கள் மிக சிறப்பான இணைவு ஆகும்.
மறைவு ஸ்தானங்கள் 4 6 8 10 இடங்கள் ஆகும்.
இதன் அறிவியல் பூர்வமான விளக்கங்கள் பின்னால் விளக்கப்படும்.
இரண்டு கிரகங்கள் இணைவு ஏற்படும் போது ஜாதகத்தில் யோகங்கள் ஏற்பட தயாராக இருக்கிறது என்று பொருள் அவைகள் கர்ம வினைகளுக்கு ஏற்ப சுப அல்லது அசுப நிகழ்வுகளாக இருக்கலாம்.
கிரகங்கள் இணைவு ஏற்பட்ட உடனே பலன்கள் நடந்து விடாது, நிகழ்வுகள் ஏற்பட தயாராக இருக்கிறது என்று பொருள், அங்கே சம்பவம் நடக்கும் காலம் நிகழ ஜாதகனாகிய ஜீவனுக்கும் கர்மாவாகிய சனிக்கும் தொடர்பு ஏற்படவேண்டும். அவ்வாறு இருக்கின்ற காலத்தில் கர்ம வினைக்க ஏற்ப பலன்கள் ஏற்பட தொடங்கும்.
இதன் கால அளவுகள் சம்பவம் நடக்கும் காலம் இவைகளை பற்றி பின்னால் தெளிவாக பார்க்கலாம்.
இந்த பதிவை திரும்ப திரும்ப படியுங்கள் பல சூட்சமங்கள் புரியும் (தெரிந்தவருக்கு இல்லை தெரியாதவருக்கு மட்டும்தான்)
கர்மாவை கின்டல் செய்யும் அதி புத்திசாலிகளே உன(ங்களு)க்கு கர்ம தொடர்பு இருப்பதால் தான் இந்த மோட்ச ஞானம் ( ஜோதிடம்) குழுவில் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறீர்கள். இனம் இனத்தோடு சேரும் குனம் குனத்தோடு சேரும்.
மோட்ச ஞானம் (கேது) மனோக்கரகன்( சந்திரன்) தொடர்பு அதோடு புந்தியின் தொடர்பு நீ இதில் காசு பார்க்க வேண்டும் என்றால் உன் கர்மக்காரகன் தொடர்பு ஏற்பட வேண்டும். இந்த இணைவுதான் ஜோதிடர் அல்லது ஜோதிடன், நீ வாழ வேண்டும் என்றாலும், சாவ வேண்டும் என்றாலும், நீ அழிய வேண்டும் என்றாலும், நீ எது செய்ய வேண்டும் என்றாலும் உன் கர்மா (சனியின்) தொடர்பு இல்லாமல் அதாவது கர்மா இல்லாமல் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கர்மாவில் இல்லாமல் உன்னால் ஒரு தூசியை கூட நகர்த்த முடியாது.
உன் கர்மக்காரகன் மனதோடு அலையும்போது இழப்பையும் மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும், தேகத்தோடு அலையும்போது எதிர்பு போராட்டம் மாற்றம், ஏமாற்றம், இழப்பை கொடுக்கும். ஆனால் கர்மா ஜீவனோடும் அலையும்போது சுகமாக அலையும்.
கர்மக்காரன் சனி
தேகம் சொவ்வாய்
ஆன்மா சூரியன்
மனோக்காரகன் சந்திரன்
மோட்சகாரகன் கேது
ஜீவன் குரு
நீங்கள் எல்லாம் ஏன் இந்த குழுவிற்கு வந்தீர்கள் என்பதற்கு என்னிடம் உங்கள் ஜாதக ரீதியான ஜோதிட ரீதியான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை மேலே சுட்டி காட்டி விட்டேன். உங்களுக்கு நிருபிக்கவேண்டும் என்றால் நான் தயார்.
ஒரே சொல் உங்கள் கர்மாதான் என்னால் நிரூபிக்க முடியவில்லை என்றால் இந்த ஜோதிடத்தை விட்டு விட்டு சென்று விடுகிறேன் இனி திரும்பி கூட வரமாட்டேன். நான் நிருபத்துவிட்டால் யார் கர்மா இல்லை என்று மறுக்குகிறாரோ அவர்கள் இனி ஜோதிடத்தை தொடக்கூடாது.
வேத நாடி ஜோதிடக்கலை குழுவில். பல தகவல்கள் பதிவிடப்படுகிறது இணைந்து பயன் பெருங்கள்சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments