Ticker

6/recent/ticker-posts

ஜாதகத்தில் கிரகங்கள் எவ்வாறு இயங்குகிறது -பலன்களை தருகிறது? (ஜோதிடம்- 500) R

தமிழஜோதிடம் - ஜோதிட பதில்

இந்த பதிவு பல பிரிவுகளாக எழுத வேண்டும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் இருந்தாலும் இந்த பதிவில் சில செய்திகளை பார்ப்போம். ஒரு கிரகங்கள் இயங்கவேண்டும் என்றால் தன்னைத்தானே இயங்காது ஒரு கிரகத்திற்கு மற்றொருகிரக இணைவு ஏற்பட்டால்தான் பலன்களை கொடுக்கும் அது சுப பலனாகவோ அல்லது அசு பலன்களாகவோ இருக்கும் இது அவர் அவர் வழங்கிவந்தது வரம் அல்லது கர்ம பலன் ஆகும்.

எப்படி எல்லாம் கிரகங்கள் இணைவு ஏற்படும்? எப்போது எல்லாம் இணைவு ஏற்படும்? ஒவ்வொன்றாக பார்ப்போம்
நிரந்தர இணைவு (பிறப்பு ஜாதகத்தில் உள்ளது)
தற்காலிக இணைவு (கோட்சாரம்)
தசா இணைவுகள்
குடும்பத்தில் ஏற்படும் ஒவ்வாத தசைகள்
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குமேல் ஏழரைச்சனி ஏற்பட்டால் என்ன பலன்கள் ஏற்படும்( சனி சந்திரன் இணைவு சந்திரனுக்கு 12 1 2 ல் சனி வருங்காலம்)
ஏழரைச்சனி நடக்கும்போது சனிதசை நடந்தால் என்னபலன்? சந்திரதசை நடந்தால் என்னபலன்? ராகுதசை நடந்தால் என்ன பலன்?
மனம் -சந்திரன்
ஜீவன் ஜாதகன் -குரு
மனக்காரகன் சந்திரன் மிக முக்கியமாணவன் கர்மா தன் செயல்களை சந்திரனிடம் ஒப்படைத்துவிடும் மனதை அடக்கினால் கர்மவினை பாதிப்பில் இருந்து பாதுகாத்திகொள்ளலாம். சந்திரனின் சலனமே பிரசன்னம்.
மனம் கர்மபடி அலையத் தொடங்கும் ஒரு உதாரணமாக கோட்சார சந்திரன் நட்பு கிரகத்தின் மீது பயணம் செய்யும்போது நல்பலன்களையும் பகைகிரகத்தின்மீது பயணிக்கும்போது கெடுபலன்களயும் தரும்
இதற்கு கிரகங்களின் பகை நட்புகிரகங்கள் என்னன்ன என்பது பற்றியும் காரகத்துவங்கள பற்றியும் தெரிந்து இருக்கவேண்டும்.
பதிவுகளை தொடர்ந்துவாருங்ள் விளக்கமாக பார்க்கலாம்

தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும் இறையுள்ளம் கொண்ட அன்பர்களே அனைவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் இந்த பதிவின் மூலம் எனக்கு தெரிந்த சில கருத்துக்களை தாங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் ஜோதிட கேள்வி பதில் குழுமத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்தது, ஆனால் கார் விபத்தில் குடும்பத்தோடு மரணம் அடைந்து விட்டார்கள் என்றும் இதில் எங்கு தவறு நடந்து உள்ளது என்றும் ஜோதிடத்தின் மீதும் ஜோதிடர்கள் மீதும் நம்பிக்கை இழந்தது போன்ற பதிவாக இருந்தது. முதலில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்,

திருமணதேதி என்பது மிக மிக முக்குயத்துவம் வாய்ந்தது எதற்காக?
நான் அடிக்கடி எழுதிவருவேன், அதிர்ஷடமும் மரணமும் கண்ணுக்கு தெரியாதவை, தசா சந்தியில் பிரச்சனைகள் வெடித்து சிதறும், யோகதிசையும் பங்கமாகி விடும், ஜோதிடர்களின் கணிதம் கூட பொய்த்துவிடும், கண்ணை மறைத்துவிடும். குருவருள் திருவருள் குலதெய்வ அருள் தாய் தந்தைகளின் பூரண ஆசிர்வாதங்கள் ஜோதிடருக்கும் ஜோதிடம் பார்க்க வருபவருக்கும் வேண்டும், இது அனுபவ உண்மை இந்த அவசர காலத்தில் பெண் பருவ வயது அடைந்தவுடன் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் தாங்கள் கடமை முடிந்துவிடும் என்ற பெற்றோர்களின் கடமை உணர்வு. மேலும் திருமண மண்டபத்திற்காக திருமணத்தேதி முகூர்த்தம் குறித்தல் இது போன்று பல காரணத்திற்காக தவறான முகூர்த்த திருமணத்தேதி. இதன் விளைவுகள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரும், அதுபோல சில ஒவ்வாத தசாசந்தியில் திருமணம் நடத்த தேதி குறித்தல் இதன் விளைவு குடும்ப பிரச்ச்சனை வெடித்து சிதருதல் அகால விபத்துக்களுக்கும் வழிவகுத்துவிடும், மேலும் தோஷமான ஜாதகங்களை அவசரகதியில் திருமண நடத்தி வைத்து வேதனைகளை விலை கொடுத்து வாங்கி அனுபவிப்பது, இப்படி இருக்க ஜோதிடரை, ஜோதிடத்தை குறைகூறுவதா? இல்லை இதுதான் விதி என்று விட்டு விடுவதா?

தோஷமுள்ள ஜாதகர்களின் திருமணத்தை ஏன் காலம் தாழ்த்தி நடத்த வேண்டும்?

சில தோஷ ஜாதகங்களை பெண்ணாக இருந்தால் 27 வயதுக்கு மேல் ஆணாக இருந்தால் 30 வயதுக்கு மேல் கட்டாயாம் காத்திருந்து திருமணம் செய்ய வேண்டும், அது போன்று உங்கள் வசதிக்காக தோஷமான நாட்களில் திருமணமண்டபத்திற்காக திருமணத்தேதி குறிக்க கூடாது. மிக மிக முக்கியாமானது ஜாதாகருக்கு ஒவ்வாத தசா சந்தியில் எந்த காரணத்திற்காகவும் சோர்த்து வைக்க கூடாது, தசா சந்தி, தோஷ திருமணநாள், தோஷ ஜாதக திருமண வயது இதை கட்டாயம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும், ஜோதிடம் எங்கு தொட்டாலும் வழுக்கும், வாக்கு பலிதமும் வேண்டும். அனுபவ அறிஞர்களை நாடி குரு கணிக்கை செலுத்தி தேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள். நல்ல குருவை அடைய தினமும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.
மேற்கூறியவைகளை கடைபிடக்காமல் செய்தால் பின்வரும் விளைவுகளை சந்திக்க நேரும், அவைகள் குடும்பத்தில் ஒற்றுமை இன்மையை உண்டு செய்யும், தாமத குழந்தை பாக்கியம், நிரந்தரபிரிவு, நிச்சயத்திற்கு பின் மணமகன் அல்லது மணமகள் அகால மரணம், திருமணநாளிலே பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிதல், கோரவிபத்துகளில் குடும்பமே மரணம் அடைதல், ஒரு குழந்தை பெற்ற பிறகு நிரந்தர பிரிவு அடைதல்.

சில குடும்பத்தில் ஒருவரின் தசைகள் கோட்சாரம் கிரகங்கள் ஒருவருக்கு ஒத்துபோகும் வேறுநபருக்கு மிகுந்த வேதனைகளை கொடுக்கும் 

ஓம் இடைக்காடர் சித்தர் திருவடிகள் போற்றி! அறிஞர்களே அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள், என்பதிவில் ஏதோ இருக்கிறது என்று நம்பி தொடர்ந்து வரும் அன்பர்களுக்கு தாங்களின் நம்பிக்கைக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் என் அனுபவ கருத்துக்களை எழுதி வருகிறேன். முழுக்க அனுபவ விதிகள் படிக்க படிக்க தெளிவு பெறலாம் எந்த காலத்திலும் மாறாது உத்தரவாதம் உண்டு. தோஷங்கள்- யோகங்கள்- சோகங்கள் களஸ்த்திர தோஷம் இவற்றை களஸ்த்திரத்தால் ஏற்படும் தோஷங்கள் என்ன? யோகங்கள் என்ன? சோகங்கள் என்ன? என்பதை உணர்த்துவதுதான். அதுபோல புத்திர தோஷம் புத்திர யோகங்கள் புத்திர சோகங்கள் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். மீண்டும் கிரகங்களுக்கு செல்வோம் தோஷம் செய்யும் கிரகங்கள், யோகம் செய்யும் கிரகங்கள், சோகம் செய்யும் கிரகங்கள் என்று பூர்வமான ஜென்ம புன்னியத்திற்கு ஏற்ப ஜாதகர் ஜனனம் ஆவார். கனவன் அல்லது மனைவி கிடைக்கும் காலம் தாமதம் ஆவது இந்த செயலை தடுக்கும் கிரகங்கள் தன் வேலையை செய்து வரும், யோகம் செய்யும் கிரகங்கள் கனவன் அல்லது மனைவி வந்த பிறகு அந்த வேலைகளை செவ்வனே செய்து வரும் அதுபோல சோகத்தை செய்யும் கிரகங்கள் கனவன் அல்லது மனைவி வந்த பிறகு தீராத வியாதி வந்து பரிதவித்தல் கிட்டினி பெயிலியர், தீவிபத்து, உடல் அங்கம் பழுதுபடுதல், மனவியிடம் சன்டையிட்டு மனவியின் மரணத்திற்கு காரணமாகுதல் அதுபோல கற்புநெறி மாறும்போது கணவனோ மனைவியோ தற்கொலை அல்லது கொலைக்கு காரணமாகுதல் இவைகள் எல்லாம் சோக கணக்கு. அதுபோலத்தான் புத்திரர்களால் ஏற்படும் தோஷங்கள்- யோகங்கள்- சோகங்கள் ஆகும. புத்திர சோகம் என்பது வேறு புத்திர தோஷம் என்பது வேறு, குழந்தையே இல்லை என்பது புத்திர தோஷம் பிறந்த குழந்தை மரிப்பதோ அல்லது அதனால் வேதனையடுவதோ புத்திர சோகம் ஆகும். பிள்ளைகளின் எதிர்கால கனவுகள் ஏமாற்றமடைவதும் அல்லது அவர்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்காமல் இருப்பது புத்திர தோஷம் ஆகும். அதுபோல புத்திரர்களால் ஏற்படும் நன்மைகள் உயர்வுகள், முன்னேற்றங்கள் இவைகள் எல்லாம் புத்திர யோகங்கள் ஆகும். ஜாதகத்தில் உள்ள சில கிரகங்கள் கருவை அழித்துக்கொண்டே இருக்கும், கரு உருவாகி கலைந்து அல்லது சிதைந்து போகும், சில கிரகங்கள் தடுத்துக்கொண்டே இருக்கும், கரு உருவாகும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. இந்த ஆராய்ச்சியில் யார் தடுப்பார்? யார் கெடுப்பார்? யார் கொடுப்பார் என்பதை ஆராயந்து கூறியதுதான் தோஷகிரகங்கள் யோககிரகங்கள் இந்த ஆய்வை அனுபவ ரீதியாக ஆராய்ந்து பலன் கூறினால் தோஷகாலம் யோக்காலம் சோககாலத்தை துல்லியமாக கூற முடியும். நன்றி

Post a Comment

0 Comments