Tamil Astrology
நட்சத்திரங்கள் மொத்தம் 27 ராசிகள் 12 கிரகங்கள் மொத்தம் 9
12 ராசி கட்டத்தை ராசி மண்டலம் என்று கூறலாம் இந்த ராசி மண்டலத்தில் 27 நடசத்திரங்கள் ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாக பிரிந்து கொண்டு 9 கிரகங்கள் சுற்றி வருவதற்கு ஓடு பாதை 108 பாதங்களால் அமைத்து கொண்டு இருக்கிறது.
27 நட்சத்திரங்கள் மேசராசி முதல் மீன ராசிவரை 108 பாதங்களாக பிரிந்து இருக்கிறது, ஒரு நடசத்திரம் முழுமையாக ஒரு ராசிகட்டத்தில் அமைந்து இருந்தால் அது முழுமையான நட்த்திரம் மீத முல்ல நடத்திரங்கள் உடைபட்ட நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும். உடைபட்ட நட்சத்திரங்களை உடலற்ற நட்சத்திரம், காலற்ற நட்சத்திரம், நட்சத்திரம் தலையற்ற நட்சத்திரம் என்று அழைப்பது உண்டு.
ஒரு ராசி கட்டத்தில் நட்த்திரங்கள் ஒன்பது பாதங்களாக பிரிந்து 12 ராசிகட்டத்திலும் 108 பாதங்களாக 27 நட்சத்திரங்கள் பரவி இருக்கிறது.
உடைந்த நடசத்திரங்கள் சூரியனின் நட்சத்திரம் கிருத்திகை உத்திரம் உத்திராடம் செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் குருவின் நட்த்திரம புனர்பூசம் விசாகம் பூரட்டாதி.
ஒரு மண்டலம் என்றால் என்ன?
ஒருமண்டலம் என்பது 48 நாட்கள் இந்த ராசி மண்டலத்தில் 12 ராசிகள் 27 நடத்திரங்கள் 9 கிரகங்கள் உள்ளன இவைகளின் கூட்டு தொகை 48 ஆகும்.
குருவே சரணம் குருவடிசரணம் திருவடிசரணம்
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்றாக இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் நேர் பார்வையில் இருந்தாலும் லக்கினாதிபதி விரைய ஸ்தானம் எனப்படும் 12ல் அமர்ந்தாலும், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது, அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படும்.
இது இறுதி நிலை
இந்த பதிவு பொது பலன்களே உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், கீழ்கண்ட கண்ட ஆய்வுகளை செய்து பாரத்துக்கொள்ளுங்கள்
பாவக கிரகவலிமை பற்றி ஆராய்ம்போதும் பாவத்தில் நிற்கும் கிரகம், பாவத்தை பார்க்கும் கிரகத்தின் நிலை, பாவதிபதி, பாவதிபதிக்கு வீடு கொடுத்த கிரகம், வீடு கொடுத்த கிரகத்தின் சாரம், பாவதிபதியின் சாரம் பாவத்தில் நிற்கும் கிரகத்தின் சாரம் சுபரா பாபரா, அவர் கேந்திரதிபதியா அல்லது திரிகோணதிபதியா, பாதகாதிபதியா என்று பல்வேறு சூட்சமத்தில சோதித்துப் பார்த்து பலன்கூறவேண்டும்
மிகப்பெரிய சூட்சமம் (நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தை)
கரு உயிரால் உருவாகிறது தாயின் கருவறையில், உயிர் என்றால் லக்கனம் கருவறை ஐந்தாம் இடம். பிறக்கூடிய நேரம் அப்போதே தீர்மானிக்கப்படுகிறது. இந்த கருவிற்கு ஜென்மம் கொடுத்தவர் ஒன்பதாம் இடத்துக்குரியவர். இவர்களை வைத்துதான் மற்ற கிரகங்கள் உன் பிறப்பின் போது தீர்மானிக்கப்பட்டு பிறக்கிறாய். இப்போது புரிகிறதா நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தை. 1 5 9 க்கிற்கு பிறகுதான் எல்லா இடங்களும்.
புரியும் வரை படியுங்கள். (இதில்தான் மிகப்பெரிய தத்துவம் சூட்சமம் உங்கள்யோகம் சாபம் தோஷம் நோய் மரணம் எல்லாம் அடங்கி உள்ளது)
இந்த பதிவிற்கு பிறகு உங்கள் ஜோதிடத்தை இந்த வழியிலும் ஆராய்ந்து பலன் அடையுங்கள் இது தொடக்கம் மட்டுமான் இன்னும் ஏராலாம் உள்ளது.
பாவம் பொடிபட சுப ஸ்தானங்கள் தொடரச்சி- 6 🦅
இயற்கை சுபர் குரு பகவான் பார்க்கும் இடங்கள் 5,7,9 ஆகும் இதில் 7 ஆம் பார்வை எல்லா கிரகத்திற்கும் உள்ள பொதுபார்வை ஆகும், குரு பகவானுக்கு 5 ஆம் இடம் 9 ஆம் இடங்கள் சிறப்பு பார்வைகள் ஆகும். அதுபோல கோட்சார பெயர்ச்சியில் 2 ,5,7,9,11 இடங்களுக்கு பெயர்ச்சி ஆகும்போது மிகுந்த சுப பலன்களையே தருவார்,
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
நல்லவர்களோடு சேர்ந்திருப்பது சாலச்சிறந்து, ஆதாவது நல்லோர்கள் என்பது தேன் போன்றவர்கள் ஆவார், தேன் ஆனது தானும் கெடாது, தன்னோடு சேர்ந்த பொருள்களையும் கெட விடாது, குரு பகவான் தேன் போன்றவர், பொதுவாக குருபகவான் இயற்கை சுபர் பார்க்கும் இடங்களின் பலன்களை பல மடங்கு விருத்தி செய்வார்கள், குரு பகவான் பார்க்கும் இடங்களில் மிக முக்கியமானது 5 மற்றும் 9 ஆம் இடங்கள் பூர்வ ஜென்ம புன்னிய ஸ்தானங்கள் ஆகும் இந்த இடங்கள் சூட்சமத்தன்மைகள் நிறைந்தவை 5க்கு 5 ஆம் இடம் 9 ஆம் இடம் வரும், 9க்கு 9 ஆம் இடம் 5 ஆம் இடம் வரும், 9 க்கு 5 ஆம் இடம் ஜென்ம் அல்லது லக்னம் வரும். இதில் எந்த இடத்தில் குரு அமர்ந்தாலும் அந்த மூன்று இடங்களுக்கும் பார்வை உண்டு, இதானால் அந்த இடங்கள் சிறப்பு பலன் பெரும்.
புன்னிய ஸ்தானங்கள் 1 5 9 ஆம் இடங்கள் மூலம் நம் பிறப்புகளின், ஜென்மங்களின், நம் முன்னோர்களின் தன்மைகளை ஆராயலாம், இந்த இடங்களில் அமரும் குருபகவான் மிகுந்த சுப பலன்களை குறை இல்லாமல் தருவார்கள், இங்கு குருபகவான் அமர்ந்து விட்டால் அவர் இருக்கும் இடத்தில் தெய்வம் குடிகொன்றிருக்கும், அவர்களை எந்த குறையும் இல்லாமல் முன்னோர்கள் வழிநடத்துவார்கள், எந்த கிரகங்களையும் நாம் ஆய்வு செய்யும்போது அதன் திரிகோண ஸ்தானங்களையும் பாரத்து பலன் கூற வேண்டும் எப்படி பார்க்க வேண்டும் எந்த எந்த திசைகள் பலன் கொடுக்கும் என்பதை பின் வரும் பதிவுகளில் ஆராய்ச்சி செய்வோம்.
குருவே சரணம் குருவடிசரணம் திருவடிசரணம்
You May Also Like
0 Comments