Ticker

6/recent/ticker-posts

ஜோதிடத்தில் யோகங்கள்

ஜோதிடத்தில் யோகங்கள் - ஜோதிட பதில்

சுப காரியங்கள் குறிப்பதற்கு தினசரி யோகங்களை பயன்படுத்த வேண்டும் நட்சத்திரங்கள் கிழமைகள் இணையும்போது உண்டாகும் யோகங்கள் தினசரி யோகம் ஆகும் அவை அமிர்தயோகம் சித்தயோகம் சுபயோகம், மரணயோகம் ஆகும்.

ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பது கிரங்களில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணைவு பெறுவது அல்லது சேர்க்கை அல்லது பார்வை  பெறுவது யோகம் ஆகும். மேலும் ஒன்றுக்கொண்று கேந்திரத்தில் இருந்தாலும் அல்லது திரிகோணத்தில் இருந்தாலும் சமசப்த பார்வையில் இருந்தாலும் அல்லது கிரகங்களின் பார்வைகளில் இருந்தாலும் சேர்க்கையின் வலிமைக்கேற்ப பலன்களின் அளவு மாறுபடும். அவை சுப யோகங்களாகவும் இருக்கலாம் அல்லது அசுப யோகங்களாகவும் இருக்கலாம். கோட்சார நிகழ்வின்போது ஏற்படும் இணைவுகளால் ஏற்படும் பலன்கள் குறைவாகவும் தசா புத்தி காலங்களில் ஏற்படும் பலன்கள் அதிகமாகவும் காணப்படும்.

சுபகர்த்தாரி யோகம் என்றால் என்ன?

ஒரு கிரகத்திற்கு இரண்டு புறங்களிலிலும் அல்லது ஒரு வீட்டிற்கு இரண்டு புறங்களிலும் சுபக்கிரங்கள் இருந்தாலோ அல்லது சம்பந்தம் ஏற்பட்டாலோ அந்த வீட்டிற்கு சுப பலன்களையோ அந்த கிரக காரகத்திற்கு சுப பலன்களையோ கொடுக்கும் இதற்கு சுபகர்த்தாரி யோகம் என்று பெயர்.

பாபகர்த்தாரி யோகம் என்றால் என்ன?

ஒரு கிரகத்திற்கு இரண்டு புறங்களிலிலும் அல்லது ஒரு வீட்டிற்கு இரண்டு புறங்களிலும் பாபக்கிரங்கள் இருந்தாலோ அல்லது பாப கிரகங்களின் சம்பந்தம் ஏற்பட்டாலோ அந்த வீட்டிற்கு பாப பலன்களையோ அந்த கிரக காரகத்திற்கு பாப பலன்களையோ கொடுக்கும் இதற்கு பாபகர்த்தாரி யோகம் என்று பெயர்

குருமங்கலயோகம் என்றால் என்ன?

குருவிற்கு செவ்வாய் கேந்திர ஸ்தானமான 1 4 7 10 ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலோ குருமங்கள யோக்தை உருவாக்கும்.

தர்ம கர்மாதிபதி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கனத்திற்கு ஒன்பதாம் இடத்திற்குரியவரும் தர்மஸ்தானாதிபதியும் 10ஆம் இடத்திற்குரியவர் கர்மஸ்தானாதிபதி இருவரும் ஒன்பதாம் இடத்திலோ பத்தாம் இடத்திலோ கேந்திர திரிகோணங்களில் இணைவு பெற்று இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இந்த யோக அமைப்பில் உள்ள ஜாதகர் சிறப்பாக வாழக்கூடியவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடக்கூடயவர்கள் வாழ்க்கையில் சறுக்கி விழுந்தாலும் உடனே எழுந்து ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பஞ்ச அனான யோகம்.

ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் ஐந்து வீடுகளில் அமையப்பெற்றால் அதற்கு பஞ்ச அனான யோகம் எனப்படும் இதன் பலன்கள் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, அடைந்தது வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள், மற்ற யோகங்களை பொருத்து இந்த யோகம் பலமடங்கு சிறப்பு பெருகிதரும்.

லக்னாதிபதி யோகம்

ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8 ஆம் இடங்களில் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் ஆகும். இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.

குருவடிசரணம், திருவடிசரணம்.

உன் கர்ம வினை கரைய என்ன செய்யவேண்டும்?

உன் மனம் இச்சைக்கேற்ப உன் மன ஓட்டத்திற்கேற்ப உன் மனம்போன போக்கிற்கு செயல்படமால் ஒரு குருவின் ஆசானின்மகானின் அறிவு சார்ந்த அனுபமிக்க நண்பர்களின் ஆலோசனை படி வாழ்ந்து வந்தால் உன் கர்ம வினையிலிருந்து காப்பாற்ற படுவாய். அறம் அறிவு சார்ந்த சூழலில் வளர்ந்து உன் வாழ்க்கை நல்வழி படும் உன் யோகங்கள் பங்கம் ஆகாமல் அனுபவிப்பாய்.

நல்லாரை காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

சக்கரவர்த்தி கலியபெருமாள்- ஜோதிட பதில்

You May Also Like 

Post a Comment

0 Comments