Ticker

6/recent/ticker-posts

ராகு தசை பலன்கள் 18 வருடங்கள்


ராகு தசை பலன்கள் -Raghu Dhsai Palankal

Tamil Asttology-ஜோதிட பதில்

About Raghu 

ராகு தசை நடத்தும் காலம் 18 வருடங்கள்ஆகும் ராகு கேது எதிர்தசையில் பயணம் செய்யக்கூடிய கிரகம், ஜோதிடத்தில் மிகுந்த வலிமையான கிரகம் கேது அதற்கு அடுத்தாற்போல ராகு ஆகும். ராகுவை கருபாம்பு என்றும் ஜோதிடத்தில் அழைக்கபடுகிறது,  நவகிரகங்களில் ஏழுகிரகங்களுக்கும் சூரியன் முதல் சனி (Saturn) முடிய சொந்த வீடு ஆட்சி வீடு  உண்டு. ஆனால் ராகு கேதுகளுக்கு சொந்த வீடு கிடையாது. வாரத்தில் ஏழு நாட்கள் ஏழு கிரகங்களுக்கும், ராகு-கேதுகளுக்கு கிழமைகள் இல்லை, ஆனால் ஒவ்வோரு நாளும் (மூன்றே முக்கால் நாழிகை) ஒன்றரை மணி நேரம் ராகுவிற்கு பலம் உண்டு அந்த காலத்தை ராகு காலம் என்றும் கேதுவிற்கு பலம் பொருந்திய காலத்தை எமகண்டம் என்றும் ஒதுக்கபட்டுள்ளது. ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லை இவைகள் நிழலான கிரகங்கள் என்றும் சாயா கிரகங்கள் என்றும் அழைப்பார்கள். 

ராகு தசை நடக்கும் போது இனம்புரியாத ஒரு பயத்தை உண்டு செய்யும், ராகு தசை உன் கர்ம வினைகளுக்கேற்ப நன்மை தீமைகளை செய்யும். ஐயா குழப்பாமல் சொல்லி விடுங்கள் நன்மைகள் செய்யுமா? தீமைகள் செய்யுமா? கண்டிப்பாக இறுதியில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். நான் எழுதிய அனைத்து விதமான ராகு பற்றி பதிவுகளை தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.

பலன்கள் (Palankal) கோட்சார விளக்கங்களும்

ராகு கேதுக்களை வருட கிரகங்கள் என்று அழைக்கிறோம் கோட்சார பலன்களில்  ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கி பலன் கொடுப்பதுபோல ராகு கேதுக்கள் ஒவ்வோரு ராசியிலும் ஒன்றரை வருடம் தங்கி கர்ம வினைகளுக்கு ஏற்ப நற்பலன்களையோ கெடுபலன்களையோ தருவார்கள்.   ராகுதசையில் சிலர் மிகுந்த உயர்ந்த நினைத்து பார்க்க முடியாத செல்வத்தை கொடுத்துவிடும், அதே நேரத்தில் அந்த செல்வம் அறவழியில் இல்லை என்றால் குருதசை ஆரம்பத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து தெரிவில் விட்டு விடும் சிலசமயம் மரணத்தை கொடுத்து விடும்.

ராகு என்றாலே பிரமாண்டம்.

ஜோதிடம் -Astrology

ஒன்பது கிரகங்களும் பூமியின் மீது உள்ள மனிதர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகள் மீதும் உயிர் உள்ள உயிரற்ற பொருள்கள் மீதும் கிரகங்கள் தன் கதிர் வீச்சுகளால் கட்டுபடுத்தி சலனபடுத்தி வருகிறது. பூமியை (Earth) சுற்றி அதாவது மையபடுத்தி ஒன்பது கிரகங்களும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உயிர் ஜனனம் ஆகும்போது வான மன்டலித்தில் அப்போது உள்ள கிரக நிலைகளே ஜாதகம். அதன்பிறகு நடக்க இருக்கின்ற கிரக சலனங்களினால் ஏற்படுகின்ற மாற்றங்களை பூமியல் உள்ள உயிர்கள் அனுபவிக்கிறது.

ராகு காரகங்கள்- Raghu Karakangal

பிரமாண்டம், வட்டி, ரசாயணம், மாந்திரீகம், நிழல் துறை (Cinema) சினிமா, போட்டோ ஸ்டுடியோ, வெளிநாடு, அந்நியமொழி, மின்சாரம், சிறைச்சாலை, உடல் சுவாசம், நோய், அலர்ஜி, தடிப்பு, அகன்ற பாத்திரங்கள், நீண்ட குடல், ஏற்றுமதி, வெளிநாட்டு வர்த்தகம், எதையும் மிகைப்படுத்தி சித்தரித்தல், தகப்பன் வழி பாட்டன்கள், ஜோதிடம், துர்க்கை, கோமேதகம், பொட்ரோலியம், முஸ்லிம், நீசத்தோழில், அடிமை தொழில், கள்ளக்கடத்தல், ஏமாற்றி பிழைத்தல், ஏவல், பில்லி, சூனியம், வாகனம் ஓட்டுதல், புலனாய்வுத்துறை, உளவுத்துறை, புதையல், ரொம்ப பழசு, அசுத்தமான, திக்குவாய், காற்று, உருது, ரசாயனம், மருந்து பொருட்கள், திரைப்படத்துறை, ஆண் கிரகம், பெரிய குழாய், மூங்கில், சட்டத்திற்கு புறம்பான செயல், மயக்கம், மது.

யாருக்கு எப்போது ராகு தசை வரும்? Astrology ஜோதிட பதில்

திருவாதிரை, சுவாதி, சதயம் இவை மூன்றும் ராகுவின் நட்சத்திரங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை ஆரமம்ப காலத்திலேயே முதலாவது திசையாக வந்து சென்றுவிடும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவைகள் மூன்றும் செவ்வாயின் (Mars) நடத்திரங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரமம்ப தசையாக செவ்வாய் தசையை கடந்து இரண்டாவது திசையாக ராகுதசை வரும்.
ரோகினி, ஹஸ்தம், திருவோணம் இவைகள் மூன்றும் சந்திரனின் (Moon) நடசத்திரங்கள் இந்த நடசத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப தசையாக சந்திரதசை செவ்வய்தசைகளை கடந்து மூன்றாவது தசையாக ராகு தசை வரும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இவைகள் மூன்றும் சூரியனின் (Sun) நட்சத்திரங்கள் இந்த நடசத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப தசையாக சூரியதசை, சந்திரதசை, செவ்வாய் தசைகளை கடந்து நான்காவது தசையாக ராகு தசை வரும். Tamil Astrology

அந்த ராகுபகவான் கேதுபகவான் நடக்கும் தசைகாலத்தில் சிலர் மிகப்பெரிய இழப்புகள், அவமானங்கள் பொருட்சேதங்கள், போலீஸ் கேஸ், விஷ பயங்கள் தற்கொலை முயற்சி உயிர்சேதங்கள், பெண்கள் விஷயத்தில் அவமானங்கள் தகாத உறவுகள் அடிதடி பஞ்சயாத்துகள், மதுவின் உச்சத்திற்கு சென்று நீசபடுத்தும், மூலைநரம்பில் பிரச்சனைகள் உள் குடலை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நட்பும், கடன் தீராத பயம் செய்வினை தோஷங்கள் என வந்து மிரட்டிச்செல்லும். பிறக்கும் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை 
 
பிறசவம்பார்க்கும் மருத்துவரைச் மிரட்டும் தொடர் ரத்தப்போக்கு உயிரை பிரிக்கும் போராட்டம்.

யாருக்கு ராகு தசை வாழும் காலத்தில் வராது?

You May Also like -ஜோதிட பதில்
ராகுதசை பலன்கள்-தொடர்
தொடர்ச்சி அடுத்த பதிவில் -ஜோதிட பதில்

Post a Comment

0 Comments