சிம்ம ராசி பலன்கள் (மகம்-நான்கு பாதங்கள், பூரம் நான்கு பாதங்கள், உத்திரம் முதல்பாதம் மட்டும்)
ஆனி மாத பலன்கள்
ராசியாதிபதி சூரியன் 11 ல் இருக்கிறார் மிக சிறப்பான யோத்தை தரக்கூடிய காலம் பொதுவாக தோஷமில்லாத லக்கனம் அமைக்கவேண்டும் என்றால் 11 ல் சூரியன் உள்ள லக்கனத்தை அமைத்து கொடுக்கலாம், பணத்திற்காக கஷ்ட பட்டு கொண்டவர்களுக்கு இந்த மாதம் லாட்டரி அடித்ததுபோல அமையும் பல வகைகளில் பணம் வந்து சேரும் நீண்ட நாட்களாக நிலவி வந்த சங்கம் நீங்கி தெளிவு பெறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சன்டை சச்ரவுகள் நீங்கி நிம்மதி அடைவார்கள். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள், தன தான்ய விருத்தி உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஒரு திருப்பத்தை அடைவார்கள்.
7 ல் குரு இருந்தபோது அடைய வேண்டிய நன்மைகளை கிடைக்காமல் போனதை 8 ல் குரு வருங்காலம் கெடுபலன்கள் அதிகமானாலும் 5 க்கும் 8 க்கும் உரியவர் 8 ஆட்சி பெறுகிறார் அதோடு 12 ஆம் இடம், 2 ஆம் இடம் நான்கம் இடங்களை பார்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தன வரவு வீட்டில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் பிரச்சனைகளை சாமாளிக்ககூடிய பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிரிகள் உருவானாலும் சன்டை சச்ரவுகள் உண்டானாலும் சூமூகமான தீர்வு கிடைக்க பெறுவார்கள். 3 ல் உள்ள கேது 6 ல் உள்ள சனி எதிரிகளை உருவாக்கி வெற்றிபெற செய்யும். பிறரிடம் ஏற்படக்கூடிய மோதல் பூசல் எல்லாம் வெற்றி உண்டாகும் ஒரு நாள் எதி்ர்த்த எதிரகளை உங்களால் காப்பற்ற படுவார்கள்.
ஜாதகத்தில் யோகமே இல்லாவிட்டாலும் 6 ல் உள்ள சனி இருக்கும் காலம் வரை யோகமாக அமையும், இதுவரை கொடுத்த வாக்குரிதிகளை காப்பாற்ற முடியாமல் போய அதனால் ஏற்பட்ட அவமானம் சங்டங்களை வாக்குரிதிகளை இப்போது 3 ல் உள்ள கேது ஒவ்வொன்றாக நிறைவேற்றும், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும் சிலருக்கு வாரிசு இருந்து ஆண் குழந்தை வேண்டும் என்பவர்களுக்கும் ஆண் வாரிசு கிடைக்கும்.நோய் மனதில் ஏற்பட்ட காயங்கள் பகைவர்களை வென்று வாழக்கூடிய காலம்.
9 ல் உள்ள ராகு நிறைய கெடுபன்களை கொடுக்கும் கூடா நட்பால் பல சங்கடங்களை அடையக்கூடும் சொத்து விசயத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும், பெரியோர்களின் ஆலோசனை செய்து சிக்கல்களை தீர்த்து கொள்ளுங்கள், புண்ணியங்கள் செய்து சித்தர்கள் மகான்களை வழிபாடு செய்து வாருங்கள்.
வாரிசு இல்லாதவர்கள் கும்பகோணம் குடவாசல் தத்தகுடியில் உள்ள தத்தாத்ரேயர்கோவிலு்க்கு சென்று வழிபட்டுவாருங்கள் கண்டிப்பாக வாரிசு யோகம் உண்டாகும்.
சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments