ஆனி மாத பலன்கள்
கும்பராசி (அவிட்டம் 3 மற்றும் 4 ஆம் பாதங்கள், சதயம் நான்கு பாதங்களும் பூரட்டாதி 1 , 2, மற்றும் 3 ஆம் பாதங்கள் மட்டும்)
பொதுவாக கும்ப ராசி கும்ப லக்கனக்காரர்கள் என் அனுபவத்தில் எல்லாம் இருந்தும் அதிஷ்டம் இல்லாதவர்கள் யோகம் இல்லாதவர்கள் பாவ பட்டவர்கள் என்றே கூறுவேன். கிரக நிலைகளும் கோட்சாரங்களும் யோகம் இல்லாமலே தொடர்ந்து வரும். (உடனே என்னிடம் சன்டைக்கு வரவேண்டாம்) காதல் திருணமாக இருந்தாலும் நிச்சயத்த திருமணமாக இருந்தாலும் பெரும்பாளன திருமண பொருத்தங்கள் விசித்திரமாண பொருத்தமில்லாத திருமண்மே நடந்து விடும். சில சமயம் பிரிந்து விடுவார்கள் சிலர் ஊருக்காகவும் உறவுக்காகவும் வாழ்க்கையை நகர்த்தி விட்டு கொடுத்து வாழ்ந்து வருவார்கள்.
மாத பலனுக்கு செல்வோம் இரண்டு 11 க்குடைய குரு இரண்டில் ஆட்சி அத்துடன் செவ்வாய் மூன்றில் ராகு 4 ல் சுக்கிரன் புதன் 5 ல் சூரியன் 9 ல் கேது ராசி அதிபதி சனி 12 ல் மறைவு ஆட்சி பெறுகிறார் இதன் பலன்கள் என்ன?
உங்கள் விரயத்திற்காக கடனுக்காக பழைய கடனை அடைக்க எதிர்பாராத உங்களுக்கு வரவேண்டிய பண வரவு வரும் இது இந்த ஒரு வருடத்திற்குள் நடக்கும். ஐந்தில் சூரியன் இந்த இடம் மிகவும் கஸ்டமான பலன்களை தரக்கூடிய இடம், ஐந்தாம் இடம் என்பது எண்ணம், திட்டம், மகிழ்ச்சி, பிள்ளைகள், தாய்மான், பாட்டனார், புண்ணியஸ்தானம் ஆகும். இதில் சூரியன் இருப்பதும் இதற்கு ஐந்தில் 9ல் கேது இருப்பது நல்லது அல்ல கிரகணம் பிடித்தது போல இருக்கும். 9ஆம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம், பாக்கியஸ்தானம், தெய்வனுகூலஸ்தானம் ஆகும் எந்த ஒரு ஜாதகம் ஆனாலும் 9 ஆம் இடம் 9 க்குடையவர் சுப நிலை பெற வேண்டும்.
அப்படி இல்லை என்றால் பலன்கள் சுமாரகத்தான் அமையும். இதனால் என்ன பலன் எந்த சுபகாரியமும் ஈடேர முடியாமல் சிக்கலில் தவிக்கும். ஒன்பதில் பாவகிரகங்கள் இருப்பது பிதுர்தோஷத்தை உண்டாக்கும் காரியத்தடை காரிய நஷ்டத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கும் காலகாலத்தில் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்க முடியாமல் தள்ளிச்செல்லும் தடங்களை உண்டாக்கும். சிலருக்கு வாரிசு கிடைப்பதில் தடை தாமதத்தை ஏற்படுத்தும் சிலருக்கு உவாகிய கரு கலையக்கூடும்.
சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் வரும் சுற்றுலா சென்று வருவார்கள், பலநாள் வேண்டுதல் நிறைவேரும், ஆன்மீகத்தை நல்ல குருவின் துணைகொண்டு ஈடுபட்டு வரலாம் நல்ல ஆசான் கிடைக்க வில்லை என்றால் கபட சன்னியாசி சாமியாரக மாறக்கூடும். 12 ல் செவ்வாய் விரயச்சனி என்று கூறுவார் ராசியாதிபதி என்பதால் அத்தியாசி தேவைகளுக்கு உதவுவார்கள் ஆசைகளுக்கு உதவமாட்டார், ஆடம்பர தேவைகளுக்கும் உதவமாட்டார் பற்றாக்குறையுடன் வாழ்க்கை நகரும். சிலருக்கு வருமான குறைவு தொழில் முடக்கம் சிலர் பாரத்த வேலையை கூட இழக்க நேரிடும், மேலும் சக்தி்க்கு மீறிய செலவுகள் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும், வீணான வெகுதூரப்பயணங்கள் ஏற்படக்கூடும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஹோட்டலில் உங்கள் பசிக்கு உணவருந்த செல்கிறீர்கள் அங்கு எதிர்பாரதவிதமாக நீங்கள் வேறு ஒருவருக்கு பில் கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிடும், 4 ல் சுக்கிரன் புதன் இந்த இரண்டு கிரகங்கள் உங்களை தற்காளிக பணக்காரக வாழவைக்கும் சிலமயம் தேவைக்கு மிகுதியாய் பணவரவு கிடைக்கும். இந்த காலத்தில் ராகுதசை சந்திர தசை நடப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அவமானம் பொருட்சேதம் கெட்டபெயர் ஏற்படும் சிலருக்கு கண்டங்களை ஏற்படுத்தும்.
முன்னோர்கள் சாப தோசம் நீங்க தஞ்சை ஒரத்தநாடு அருகே பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வரை வழிப்ட்டுவரலாம். பிதுர்தோசம் உள்ளவர்கள் அமாவசை அன்று மயிலாடுதுறை அருகே பூந்தோட்டம் அருகே திலதர்பணபுரி சென்று சாபதோச பரிகாரமும் தர்பணமும் செய்து வரலாம்.
சித்தர்களை மகான்களை இருகப்பிடித்து கொள்ளுங்கள் இது பொதுபலன்களே உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தும் குடும்ப உறுப்பிணர்களின் ஜாதகத்தை பார்த்து பலன்களை தெரிந்து கொண்டு வாழ்வில் எல்லா வளங்களும் பெற இறைவணை பிராத்தனை செய்வோம்.
இங்கே கோட்சாரத்தை இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம் நான் ராசிபலன் எழுதி புகழ்பெறுவதற்கு அல்ல கோட்சாரம் அடிப்படை கிரக நகர்வுகள் பார்வை பலன்களை தெரியாமல் ஜோதிடம் கற்க இயலாது இந்த ராசிபலன்கள் மூலம் உங்களுக்கு அடிப்படை ஜோதிட அறிவு கிடைத்து விடும் யாரெல்லாம் கிரகத்தை விவரித்து பலன்கள் எழுதிகிறார்களோ ஜோதிட பயிற்சியாளர்கள் ஒரு வருட காலம் திரும்ப திரும்ப ராசிபலன களை படித்து வாருங்கள் இரண்டாவது வருடத்தில் ஜோதிடத்தில் உங்களுக்கு நல்ல அறிவு கிடைத்துவிடும் என்பது உறுதி.
சக்கரவர்த்தி கலியபெருமாள் - ஜோதிட பலன்
You May Also Like
0 Comments