Ticker

6/recent/ticker-posts

தொழில் -வேலை -முதலீடு

தொழில் -வேலை Business &Job

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவன் கெட்டான் எனவே ஒரு தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த தொழிலை பற்றி நன்றாக தெரிந்து கொண்டோ அல்லது அந்த தொழில் செய்பவரிடம் சில காலம் வேலை பார்த்து அந்த தொழிலை பற்றி நன்றாக தெரிந்து கொண்ட பிறகே தொடங்க வேண்டும்.

பொதுவாக தொழில் என்றாலே கண்டிப்பாக ஒரு முறையோ பல முறையோ நஷ்டத்தை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை மனதில் நினைத்து கொண்டுதான் முதலீடு செய்யவேண்டும். தொழில் என்றாலே நஷ்டம் உண்டு அதில் இருந்து தப்பிக்க நல்ல அனுபவம் தேவை. உதாரணாமாக உணவு தொழில் செய்கிறார் என்றால் ஒரு நாள் தெரிவில் நிப்போம் என்ற எண்ணத்தில் அதற்கு தகுந்த பாதுகாப்போடு தொழிலை நடத்தி வரவேண்டும். உணவு தொழிலில் வேலை பார்ப்பவரும் ஒரே இடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய மாட்டார். உணவு என்றாலே சந்திரன் (Moon) சந்திரன் என்றாலே சலனம் நஷ்டம் எனவே கண்டிப்பாக யரையும் விட்டு வைக்காது அதுபோல யாரெல்லாம் வியாபாரியாக இருக்கிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் சனி சந்திரன் இணைவு பார்வை சனிக்கு திரகோண கேந்திரங்களில் சந்திரன் இருக்கும். ஆனால் இவர்களுக்கு கண்டிப்பாக நஷ்டத்தையும் லாபத்தையும் மனசஞ்சலத்தையும் கலந்து கொடுத்து கொண்டே இருக்கும்.

எப்போது புதிய தொழிலை தொடங்க கூடாது?

ஏழரைச்சனி அட்டமச்சனி காலங்களில் சந்திர தசை ராகு தசை நடக்கும் காலங்களில் புதிய தொழிலை கண்டிப்பாக தொடங்க கூடாது, சனிக்கு திரிகோணங்களில் கோட்ராசார ராகு கேது செல்லும்போதும் சனி மீது கோட்சார ராகு கேது செல்லும்போதும் புதிய தொழிலை செய்யக்கூடாது, செய்யும் தொழிலில் மிகுந்த கவனம் தேவை தொழிலையும் விரிவு படுத்த கூடாது. லக்கனாதிபதி 6 8 12 ல் மறைந்து விட்டால் சொந்த ஊரை விட்டு சென்றால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் சொந்த ஊரில் இருந்தால் ஊரில் மல்லுக்ட்டிகொண்டு கடனோடு வாழ்க்கை நடத்த கூடும்.

சந்திரன் அல்லது குருவிற்கு திரிகோணத்தில் ராகு பயணம் செய்யும்போது பயம் பதட்டம் சில சமயம் மரணபயம் கூட ண்டாகும்.

பொதுவாக எல்லா கிரகங்களும் ஒரு தொழிலை காட்டும், எனவே அனைத்து கிரக காரகங்களை நன்றாக படித்து தெரிந்து கொண்டால்தான் தொழிலை சரியாக கூற இயலும். கிரக காரகங்கள் பற்றி அறிய இந்த Link ஐ கிரக காரகங்கள் பயன் படுத்திகொள்ளுங்கள்.

10 ஆம் பாவம் தொழில் ஸ்தானம் ஆகும் சனி கர்மக்காரகன் சனியோடு எத்தனை கிரகம் சேர்ந்து இருக்கிறதோ பார்க்கிறதோ அத்தனை தொழில்களை செய்வார்கள். லக்கனத்திற்கு ராசிக்கு திரகோனாதிபதி தசா காலங்களில் நல்ல லாபத்தை அடைவார்கள். மனோ இச்சைக்கு மனம் சொல்லும் போக்கிற்கு செயல்கள் அமைவது கர்மாவின் வழி அது கண்டிப்பாக தோற்றுப்போகும். குரு ஆசான் அனுபசாலி மகான சித்தர்களின் ஆலோசனை கொண்டு செயல்படும் செயல்கள் உன்னை வெற்றி அடையச்செய்யும். ஒருதொழிலை செய்யும் முன்பு அந்த தொழிலை பற்றிய அனைத்தும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். வேலை ஆட்களால் வரும் இடர்பாடுகளை சமாளிக்க முடியும். சூரியன் சனி சேர்க்கை பார்வை அரசு தொழிலை தரும் சூரியன் தந்தை ஜாதகருக்கு இல்லை என்றால் தந்தை அரசு துறையில் இருந்திருப்பார்கள்.

ஆன்மீக தொழில் -ஜோதிட பதில

தடைகளை தொழிலாக்கி கொள்ளுங்கள்

சந்திரன் - மனம்
சனி - கர்மா
குரு- ஜீவன்
மேற்கண்ட கிரகங்களுடன் கேது பகவான் இணைவு ஏற்பட்டால் அதாவது சனி கேது, சந்திரன் கேது அல்லது குரு கேது.
(இணைவுகள் சனி குரு சந்திரன் இவற்றிற்கு 1 5 9 ல் கேது இருந்தாலும் )
ஆசைகளை இயற்கையாகவே துறந்தவர்கள் பிறருக்காக வாழ வைக்கும், வாழ நினைப்பார்கள் ஆசைகளை சுருக்கி கொள்வார்கள் ஒருகாலத்தில் அமைதியை நாடி சென்றுவிடுவார்கள் இவர்களுக்கு ஞானிகள் சித்தர்கள் மகான்களின் தொடர்பு ஏற்படும் அல்லது எளிதில் சந்திப்பார்கள் தியானம் ஆன்மீகம் இவர்களுக்கு கைவரக்கூடும்.
ஆன்மீக தொழிலை தேர்ந்தெடுக்கலாம் குறி சொல்லுதல் ஜோதிடம் கோவில் பூசாரி(அர்ச்சகர் ) கோவில் கணக்கு எழுதுதல் குறி சொல்பவர்களுக்கு உதவியாக இருத்தல் மந்திரவாதிகள் தொடர்பு, தகடு எழுதுதல், விஷக்கடி மருந்து, தீராத வியாதிகளுக்கு மூலிகை வைத்தியம், மஞ்சல்காமாலைக்கு மருந்து கொடுத்தல், நாட்டு வைத்தியம், நாட்டு மருந்து தயாரித்தல், இறை அளங்கார வேசம் ஆன்மீக வேசம் போட்டு ஆடுதல்.
சுயநலம் இல்லாத பொது நலம் உங்களை வாழ வைக்கும்.

சனி -தொழில் உத்தயோகம் வேலை
குரு -ஜாதகர் விருப்பம்
கேது -தடை சிக்கல் வெறுப்பு 
சனி கேது சேர்க்கை உள்ளவர்கள் விருப்பம் இல்லாமல் வேலை அல்லது தொழிலை செய்து வருவார்கள் மன திருப்பிதி இருக்காது. எபோதும் விரகத்தியாக இருப்பார்கள் தொழில் நிலையாக அமையாது மாறி கொண்டே போவார்கள் ஆன்மீகம் மருத்தும் ஜோதிடம் குறி சொல்லுதல் பூசாரி வேலை பார்க்கலாம். 
குரு சனி சேர்க்கை உள்ளவர்கள் தான் விரும்பிய வேலை கிடை்கும் அல்லது விரும்பிய தொழிலை செய்து வருவார்கள் குரு சனி சேர்க்கை என்பது குருவிற்கு 1 5 9 2 12 3 7 ல் சனி இருப்பது ஆகும். குரு கேது சேர்க்கை பற்றற்ற நிலை ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும் பூர்வீகத்தை விட்டு வெளியே இருப்பார்.

சிவ சிவ சிவாயநம (பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள்)

வெற்றி பெற வேண்டுமென்றால் பல சோதனைகளை கடந்து வரவேண்டும்

சந்திரன்- தாய் பயணம் சலனம் தடுமாற்றம் இழப்பு உணவு கெமிக்கல் பெயிண்ட்
கேது -ஞானம் ஞானக்காரகன் மோட்சகாரகன் ஆன்மிகம் தடை
சனி- தொழில் மூத்த அண்ணன்
குரு- மூக்கு ஜாதகன் கல்லீரல் தொட
மிகச்சிறந்த மருத்துவராக Doctor இருப்பார் அவர் மகன் மதுவிற்கும் போதை மாத்திரைக்கும் அடிமையாக இருப்பான் ஒரு சிலர் அங்கம் குறைபாடு உள்ள குழைந்தகளாக பிறப்பார்கள், ஒரு சில ஆசிரியர்களின் மகன் கொத்தனார்களாகவும் கூலி வேலை செய்பவராகவும் இருப்பார்கள். ஜோசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிட்ட வழிக்கு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் ஜோசியர் நினைத்தாலும் மனைவியையோ மகனையோ அல்லது அண்ணன் தம்பிகளை திருத்த இயலாது.
விதி கர்மா மிக மிக வலிமையானது உலக உறுப்பினர்கள் (மாமிச பிண்டங்கள்) 12 ராசிகளில் ஒன்றாகவும் ஒன்பது கிரகங்களை கொண்டும் 27 நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தில் அவதரித்து ஒன்பது நட்சத்திரத்திற்கு குறைவான சாரம் பெற்று பிறப்பு எடுத்து இருப்பார்கள். இதற்கு அப்பால் எந்த கிரகங்களும் கிடையாது. ஆனால் கணக்கில் அடங்காத சோதனைகள் வேதனைகள் நன்மைகள் என எல்லா பிறப்புகளும் அடைந்து மடிகிறது.
அப்படி என்றால் ஜோதிடத்தால் நாம் அடைந்த அடையபோகும் அனுபவித்த பலன்களை எடுக்க முடியாதா? முடியும் என்றால் எப்படி? ஒரு கிரகத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு பல காரகங்கள் உண்டு காரகம் என்பது காரணமானவர் அதில் உயிர்காரகங்கள் உயிரற்ற காரகம்( பொருள் காரகம்)
உதாரணமாக (சந்திரன் கேது) தாய் ஆன்மீக ஈடுபாடு உண்டு தாய் நோயால் அவதி அடைவாள் தர்ம சிந்தனை உடையவள் தானும் ஆன்மீகத்தில் ஈடுபடுவான்.
(சனி கேது) சிறு வயதில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிகத்தை தொட்டு நடந்துவந்திருப்பார் மனதில் ஒருவித விரக்தியோடும் ஏதோ ஒன்றை பறிகொடுத்ததுபோன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும், உத்தியோகம் வேலை பணி நிரந்தரம் உறுதி அல்ல. வெறுப்பான வாழ்க்கை மோட்சத்தை தேடும் நோக்கில் செயல்கள் இருக்கும்.
இப்படி ஒவ்வொரு காரகமாக கிரகங்களை இணைத்து பலன்களை கூறினால் பலன்கள் பழுது இல்லாமல் கிடைக்கும்.
என்ன பிராப்த்தமோ அதை தொழிலாக்கி கொள்ளுங்கள் அதை தான்டி செல்லும்போது தோல்வியில் முடிகிறது.
சிவ சிவ சிவாய நம

இந்த பதிவு இன்னும் தொடரும் -இந்த பதிவுகளை திரும்ப திரும்ப படித்து உணர்ந்து செயல்படுங்கள்.


சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments