Ticker

6/recent/ticker-posts

என்ன பிராப்த்தமோ அதை தொழிலாக்கி கொள்ளுங்கள் அதை தான்டி செல்லும்போது தோல்வியில் முடிகிறது. R

சிவ சிவ சிவாயநம (பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள்)

வெற்றி பெற வேண்டுமென்றால் பல சோதனைகளை கடந்து வரவேண்டும்
சந்திரன்- தாய் பயணம் சலனம் தடுமாற்றம் இழப்பு உணவு கெமிக்கல் பெயிண்ட்
கேது -ஞானம் ஞானக்காரகன் மோட்சகாரகன் ஆன்மிகம் தடை
சனி- தொழில் மூத்த அண்ணன்
குரு- மூக்கு ஜாதகன் கல்லீரல் தொட
மிகச்சிறந்த மருத்துவராக இருப்பார் அவர் மகன் மதுவிற்கும் போதை மாத்திரைக்கும் அடிமையாக இருப்பான் ஒரு சிலர் அங்கம் குறைபாடு உள்ள குழைந்தகளாக பிறப்பார்கள், ஒரு சில ஆசிரியர்களின் மகன் கொத்தனார்களாகவும் கூலி வேலை செய்பவராகவும் இருப்பார்கள். ஜோசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிட்ட வழிக்கு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் ஜோசியர் நினைத்தாலும் மனைவியையோ மகனையோ அல்லது அண்ணன் தம்பிகளை திருத்த இயலாது.
விதி கர்மா மிக மிக வலிமையானது உலக உறுப்பினர்கள் (மாமிச பிண்டங்கள்) 12 ராசிகளில் ஒன்றாகவும் ஒன்பது கிரகங்களை கொண்டும் 27 நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தில் அவதரித்து ஒன்பது நட்சத்திரத்திற்கு குறைவான சாரம் பெற்று பிறப்பு எடுத்து இருப்பார்கள். இதற்கு அப்பால் எந்த கிரகங்களும் கிடையாது. ஆனால் கணக்கில் அடங்காத சோதனைகள் வேதனைகள் நன்மைகள் என எல்லா பிறப்புகளும் அடைந்து மடிகிறது.
அப்படி என்றால் ஜோதிடத்தால் நாம் அடைந்த அடையபோகும் அனுபவித்த பலன்களை எடுக்க முடியாதா? முடியும் என்றால் எப்படி? ஒரு கிரகத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு பல காரகங்கள் உண்டு காரகம் என்பது காரணமானவர் அதில் உயிர்காரகங்கள் உயிரற்ற காரகம்( பொருள் காரகம்)
உதாரணமாக (சந்திரன் கேது) தாய் ஆன்மீக ஈடுபாடு உண்டு தாய் நோயால் அவதி அடைவாள் தர்ம சிந்தனை உடையவள் தானும் ஆன்மீகத்தில் ஈடுபடுவான்.
(சனி கேது) சிறு வயதில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிகத்தை தொட்டு நடந்துவந்திருப்பார் மனதில் ஒருவித விரக்தியோடும் ஏதோ ஒன்றை பறிகொடுத்ததுபோன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும், உத்தியோகம் வேலை பணி நிரந்தரம் உறுதி அல்ல. வெறுப்பான வாழ்க்கை மோட்சத்தை தேடும் நோக்கில் செயல்கள் இருக்கும்.
இப்படி ஒவ்வொரு காரகமாக கிரகங்களை இணைத்து பலன்களை கூறினால் பலன்கள் பழுது இல்லாமல் கிடைக்கும்.
என்ன பிராப்த்தமோ அதை தொழிலாக்கி கொள்ளுங்கள் அதை தான்டி செல்லும்போது தோல்வியில் முடிகிறது.

குருவே சரணம் ஓம் குண்டலினி முனிவர் திருவடிகள் போற்றி காலம் என்பது கரும்புக்குச் சமம் கரும்பின் அடிப்பாகம் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும் நுனிபாகம் கொழந்தாடைப் பக்கம் இனிப்புச் சுவை குறைவாக இருக்கும் இரவுக்குப் பிறகு பகல், புயலுக்குப் பின் அமைத, துன்பத்துக்குப் பிறகு இன்பம், அழகைக்குப் பிறகு சிரிப்பு, கெட்டதுக்குப் பிறகு நல்லது, இப்படி மாற்றங்களைத் தருவதுதான் இயற்கை காலத்தின் கணக்கும் அதுவே ஆகும். இதுதான் கால சக்கரம் ஒரு உதாரணம் ஒரு திருமணம்-தாலி கட்டப் போகும் நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சிணைப் பிரச்சிணையால் நின்று போனது பெண் வீட்டாருக்குப் பெரும் கவலை, புலம்பிக் கொண்டே இருந்தார்கள், பத்தாவது நாளில் அந்த மாப்பிள்ளைப் பையன் விபத்தில் இறந்து விட்டான். பெண்ணைப் பெற்றவர்களுக்கு இப்போது மகிழ்ச்சி. தங்கள் பெண்ணை விதவையாக்காமல் கடவுள் காப்பாற்றிவிட்டார் என்று திருப்தியடைந்தார்கள். இதை வைத்துத்தான் "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" என்று பகவதி கீதையில் பரந்தாமன் சொன்னார். கோட்சாரத்தில் 11 ஆம் இடத்தில் வரும் சனி பலத்தையும் வெற்றியும் உண்டாக்கும், செல்வாக்கும் அந்தஸ்தும் உண்டாகும் கௌரவப் பதவிகள் கிடைக்கும். சங்கரன் கோவில் -கரிவலம் வந்தநல்லூர் அருகில் பனையூர் ஒடுக்கம் என்ற கிராமத்தில் அப்பாவும் மகனும் ஜீவசமாதியாக இருக்கிறார்கள் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் கர்ம வினை தீர அங்கு சென்று வழிபடலாம்.

🦅 காலம் மிகச்சிறந்த மருந்து உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது காலம் வரும்போது தானாக வெளியேறும். ஓடிபோனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமச்சனி இது ஜோதிட பழமொழி. இன்று வேன்றும் என்றால் ஒன்பதில் குரு இருக்கலாம், மாட்டாமல் சென்று விடலாம் அட்டமச்சனி காலம் வரும் அல்லவா அப்போது செய்த தவறுதலுக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கும் அல்லவா? பல உதாரணங்களை கூறலாம். உனக்கு நல்லகாலம் இருக்கும்போது அறம் சார்ந்து இரு, பொருளையும் அவ்வழியாக சேர்த்துக்கொள் உண் சொத்தும் பெயரும் நீடித்து இருக்கும். அறவழியில் சேராத சொத்துக்கள் பதவி புகழ் அந்தஸ்த்துகளை சேர்த்தும் புண்ணியம் இல்லாமல் போகிவிடும் உண்ணால் உன் சந்ததியினர் ஒருபோதும் நிம்மதியாக அனுபவிக்க முடியாது. காலம் தவறு செய்ய சொல்லலாம் கேட்பதற்கு ஆள் இல்லை ஆனால் உன் கஷ்ட காலத்தில் வட்டியும் முதலுமாக சந்திப்பார்கள். நீ உயர்ந்த பாதைக்கு செல்கிறாய் என்றால் நீ செல்கின்ற வழி உண்மையான அறம்சாரந்ததாக இருக்கவேண்டும் நாடகம் ஆடி உயர்ந்த நிலைக்கு சென்றால் காலம் மிகச்சிறந்து மருந்து தக்க பதில் தரும். நீ முன்னே ஒருவனுக்கு பாவம் செய்தால் அவன் வந்து பழிவாங்க மாட்டான் யாரோ ஒருவன் உன்னை நீ செய்த காரியத்தை நினைத்து உறங்க வைப்பான் இதுவரலாறு ✍️

என்னிடம் பலர் கேட்ட கேள்வி ஒரு கிரகம் அஸ்தமனமகவும் வக்கிரமகவும் இருந்தால் என்ன பலன்? வக்கிரத்தில் உக்கிர பலன் வக்கிரத்தை பற்றி கவலைபட வேண்டாம் ஆனால் ஒரு கிரகம் அஸ்தமனம் அடைந்தால் அந்த கிரகத்தின் தசையோ அல்லது புத்தியோநடந்தால் சிரமத்தை கொடுக்கும். ஜோதிட விதி தசநாதனோ புத்தி நாதனோ அஸ்தமனம் அடையக்கூடாது.

விபரீத ராஜ யோகம் என்றால் என்ன? குருவடிசரணம், திருவடிசரணம் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.

லக்னாதிபதி யோகம் என்றால் என்ன?

ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8 ஆம் இடங்களில் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் ஆகும். இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.

Post a Comment

0 Comments