Ticker

6/recent/ticker-posts

ஜோதிடம் என்றால் என்ன?

தமிழ் -ஜோதிட பதில்

ஜோதிடம்- கர்ம வினை பதிவுகள்

கர்ம வினையின் பதிவுகள் தான் ஜாதகம், ராசி கட்டத்தில் அமைந்து உள்ள கிரகங்களை கொண்டு நிகழ்கால எதி்கால இறந்த கால பலன்களை பற்றி கூறுவதான் ஜோதிடம் ஆகும். பலன்கள் 60 முதல் 85 விழுக்காடுவரை கூற இயலும். வயது கூட கூட உன்னை சார்ந்த உறவுகளை வைத்து உன்னுடைய பலன்கள் 100 விழுக்காடு நிச்சயமாக மாறுபடும். எனவே உன் குடும்ப நபர்களின் ஜாதகங்களையும் சேர்த்து பார்த்து பலன் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஜோதிடம் என்பது ஒரு கைகாட்டி அது ஒரு வகை வழிகாட்டி தான் அது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுப நிறைந்த ஆசானால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான்.

அப்ப ஜோதிடத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாதா? ஆமாம்! கண்டிப்பாக முடியாதுதான் ஆனால் உன்னை பற்றி தெரிந்து கொண்டு நீ எவ்வாறு உழைக்க வேண்டும் எவ்வளவு தூரம் கஷ்ட படவேண்டும் உன் இலக்கை அடைய எவ்வளவு தூரம் பயணம் பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் ஒரு மாற்று பாதையை கண்டு பிடித்து அதில் பயணம் செய்யலாம்.

ஒரு உதாரணம் பொதுவாக லக்கனம் அல்லது ராசி அல்லது ஜாதகமே கெட்டவனுக்கு பிறந்த ஊரில் உருப்பட மாட்டான் அவனை எப்படியாது வெளியேற்றி விட்டால் அவன் நன்றாக வாழ்ந்து விடுவான். இது நிதர்சனமான உண்மை அதுபோல பல வழிகள் உண்டு இதை தெரிந்து கொண்டு வாழ்க்கையின் போக்கை மாற்றி வாழலாம் ஒழிய உன் விதியை மாற்ற முடியாது.

மனம் மிக முக்கியமானது, கர்மா உன் மனதை கொண்டுதான் செயல்பட வைக்க்கும் அதிகம் ஆசைபட வைக்கும் பொய் சொல்ல சொல்லும் திருட சொல்லும் தவறு செய்ய தூண்டும் மது மாதுக்களை தொட வைக்கும் கடன் வாங்க சொல்லும் நீ கட்டுபாட்டுடன் ஆசான் துணை கொண்டு ஒரு நல்ல வழிகாட்டியுடன் உயர்ந்த எண்ணம் கொண்ட நட்புடன் உன் வாழ்க்கை பயணபட்டால் கர்மாவை கடந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

உதாரணம் அனுபவங்கள்

நான் எழுதும் (முன்னோர்கள் சொன்ன ஆசான்கள் சொன்ன) விதிகள் என் ஜாதகத்தில் அமையபெற்றாலும் அதை நான் அனுபவித்தே தீருவேன் இவர் நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் சாமியார் பணக்காரர் ஆசிரியர் தலமை ஆசியர் கவிஞர் மருத்துவர் யாராக இருந்தாலும் ஊர் நட்டாண்மை பஞ்சாயத்து தலைவர் எவராக இருந்தாலும்.

நடந்தே தீரும் உதாரணமாக மன்னனாக இருந்து பல பெண்கள் தொடர்பு ஏற்படும் என்றால் அதற்கு கௌரமான பெயர் உண்டு அந்தப்புரம் ஆனால் சாமானியன் பல பெண்களின் தொடர்பு ஏற்பட்டால் அதற்கு வேறு வகையான பெயர் பட்டம் எல்லாம் உண்டு.
எனவே என் பதிவுகளில் அனுபவ உண்மைகள் இருக்கும் கடினமாகத்தான் இருக்கும் அந்த விதி இணைவுகளுக்கு பலன் நடந்தே தீரும்.
என்னை தொடர்புவர்கள் தொடர்ந்து வாருங்கள் பல அனுபவ உண்மைகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது உறுதி.
இளமையிலேயே ஏற்படும் சுக்கிர தசை சனி புத்தி மாணவராக இருந்தால் மிகுந்த கவணமாக கடந்து வாருங்கள் படிப்பை தொடரவிடாது பிறப்பு ஜாதக புதனுக்கு செவ்வாய் 1 2 5 7 9 ல் செவ்வாய் இருந்தால் கவனமாக படித்துவாருங்கள் அதிக கவனம் டுயுசன் வைத்து கொள்வது அன்றைய பாடத்தை அன்றே படிப்பது நல்லது ஏமாற்ற தோன்றும் அதற்கு வழி கொடுக்காமல் அக்கரையுடன் படித்துவரவும்.
உனக்கு கடைசியில் ஊரும் வராது உறவும் வராது கல்லாதவனாக கஷ்டபடுவாய்

திருமணம் திருமண தடை பிரிவு முறிவு

திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது ஆண் (குரு) பெண் (சுக்கிரன்
கணவன்- செவ்வாய்
மனைவி- சுக்கிரன்
சனி -கர்மா
குரு -ஜீவன் ஆண்
ஒருவருக்கு திருமணம் என்பது செவ்வாய் சுக்கிரன் இணைவு ஏற்படும் போது திருமணம் நடைபெறும், அதற்கு கர்மா தொடர்பு ஜீவனாகிய குருவின் தொடர்பு கட்டாயம் வேண்டும்.

திருமணத்தடை 

செவ்வாய் சுக்கிரன் இவர்களுக்கு பிறப்பு ஜாதகத்தில் ராகு கேதுக்கள் 1 5 9 ல் இருந்தாலோ அல்லது ராகு கேதுகளுக்கு மையத்தில் இருந்தாலோ திருமணத்தில் தடையேற்படுத்தும் காலதாமதத்தை உண்டு பண்ணும்.
செவ்வாய் சுக்கிரன் அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்தாலும் திருமணத்தில் பிரச்சனைகள் உண்டு.
வேறு சில காரணங்களும் உண்டு அடுத்த பதிவில் விட்டதை பார்க்கலாம்.

திருமணத்தில் ஏற்படும் பிரிவுகள் முறிவுகள் எற்படும் காலங்கள் அதற்கு உண்டான காலங்கள் அடுத்த பதிவில்.

நன்றி மேலும் அடுத்த ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.

தோஷம் (குறைபாடு பாதிப்பு ) 🦅 

தோஷம் என்பது பாதிப்பு அடைவது என்று பொருள்
எந்த காரகத்தை பற்றி சொல்கிறோமோ 
அதற்கு அந்த காரகத்திற்கு
குறைபாடு ஏற்படும் என்று பொருள் 
ஆண் -மனைவியை குறிக்கும் கிரகம் சுக்கிரன் 
பெண் - கனவனை குறிக்கும் கிரகம் செவ்வாய் ஆகும். 
குரு -ஜாதகனை குறிக்கும்   (ஆண் )
சுக்கிரன் -ஜாதகியை குறிக்கும்  (பெண்)
பொதுவாக ஒரு கிரகத்திற்கு ராகு கேதுவின் தொடர்பு ஏற்பட்டாலோ பகைகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்பட்டாலோ
அந்த கிரகத்தின் காரகத்தை பாதிப்பு அடையச் செய்யும்.
உதாரணமாக பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1 5 9 3 7 11 2 12 ல் சனி இருந்தால் செவ்வாய் காரகத்தை பாதிப்பு அடையச்செய்யும் இதை தோஷம் என்று கூறலாம்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் ✍

பிறப்பின் பதிவுகள் 🦅

ஒவ்வொரு பிண்டமும் கர்ம வினை பதிவோடு பிறக்கும் அந்த பிண்டம் நல்வினையாவதும் தீவினையாவதும் கர்ம வினை பதிவை பொறுத்தே கர்ம வினை பதிவுகளை  மனக்காரகனே முதலில் பதிவு செய்து விடுவான். அவன் சலனமே முதல் சலனம்.

மனதை அடக்கு மார்க்கம் உண்டு.✍

சக்கரவர்த்தி கலியபெருமாள் -ஜோதிட பதில்

Post a Comment

0 Comments