Ticker

6/recent/ticker-posts

காலம் மிகச்சிறந்த மருந்து

உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது காலம் வரும்போது தானாக வெளியேறும்.

ஓடிபோனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமச்சனி இது ஜோதிட பழமொழி. இன்று வேன்றும் என்றால் ஒன்பதில் குரு இருக்கலாம், மாட்டாமல் சென்று விடலாம் அட்டமச்சனி காலம் வரும் அல்லவா அப்போது செய்த தவறுதலுக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கும் அல்லவா? பல உதாரணங்களை கூறலாம்.

உனக்கு நல்லகாலம் இருக்கும்போது அறம் சார்ந்து இரு, பொருளையும் அவ்வழியாக சேர்த்துக்கொள் உண் சொத்தும் பெயரும் நீடித்து இருக்கும். அறவழியில் சேராத சொத்துக்கள் பதவி புகழ் அந்தஸ்த்துகளை சேர்த்தும் புண்ணியம் இல்லாமல் போகிவிடும் உண்ணால் உன் சந்ததியினர் ஒருபோதும் நிம்மதியாக அனுபவிக்க முடியாது.

காலம் தவறு செய்ய சொல்லலாம் கேட்பதற்கு ஆள் இல்லை ஆனால் உன் கஷ்ட காலத்தில் வட்டியும் முதலுமாக சந்திப்பீர்கள்.

நீ உயர்ந்த பாதைக்கு செல்கிறாய் என்றால் நீ செல்கின்ற வழி உண்மையான அறம்சாரந்ததாக இருக்கவேண்டும் நாடகம் ஆடி உயர்ந்த நிலைக்கு சென்றால் காலம் மிகச்சிறந்து மருந்து தக்க பதில் தரும். நீ முன்னே ஒருவனுக்கு பாவம் செய்தால் அவன் வந்து பழிவாங்க மாட்டான் யாரோ ஒருவன் உன்னை நீ செய்த காரியத்தை நினைத்து உறங்க வைப்பான் இதுவரலாறு.

 எல்லோரும் தெரிந்துகொள்ளுங்கள்

கெட்டவன் எப்போதும் கெட்டவனாகவே இருப்பதில்லை நல்லவர்கள் எப்போது நல்லவர்களாகவே இருப்பதில்லை  கெட்டவன் நல்லவனாக மாறலாம் நல்லவன் கெட்டவனாக மாறலாம் இவைகள் எல்லாம் காலத்தின் கோலங்கள் பாவகிகரங்கள்  மறைவிடஸ்தானத்தில் இருப்பது யோகம்  அதுபோல குரு பகவான் ராசி அதிபதி லக்கனாதிபதி அவர்களின் பார்வைக்கு மகத்துவங்கள் அதிபதி அதுபோல ஸ்தானதிபதி  ஸ்தானத்தை பார்பதும் ஒருவகை யோகமே குருவருளும் திருவருளும்  இருந்து விட்டால் வாழ்க்கையில் எல்லாமே யோகமாக அமைந்துவிடும் தேவைகள் பூர்த்தி அடையும் நினைத்ததை நிறைவேறும் முயற்சிகள் வெற்றிபெறும் எண்ணங்கள் ஈடேரும் முக்கியமாக  வினைகள் விளகும் சாப தோஷங்கள் மறைந்து போகும் (தோஷங்கள் பொதுவாக காரகன் பாவகத்தில் இருந்தால் காரகதோஷம்) பிதுர்காரகன் சூரியன் பிதுரஸ்தானத்தில் இருந்தால் பிதுர்தோஷம் களஸ்திரகாரகன் சுக்கிரன் களஸ்த்திர ஸ்தானத்தில் இருந்தால் களஸ்த்திர தோஷம் சகோதரகாரகன் சகோதர ஸ்தானத்தில் இருந்தால் சகோதர தோஷம் மாத்ருகாரகன் மாத்ருஸ்தானத்தில் இருந்தால் மாத்ருகா தோஷம் அதுபோல மாதுல காரகன் புதன் ( மாமன்) மாதுல ஸ்தானத்தில் மாதுலதோஷம் ஆனால் ஆயுள்காரகன் ஆயுள்ஸ்தானத்தில் இருந்தால் ஆயுள் தீர்க்கம். ஜோதிடம் பயிலுகின்ற மாணவர்களுக்காக எழுதப்பட்டது.

காரணமே தெரியாமல் முடிவு எடுப்பது இப்படியாக இருக்குமோ அப்படியாக இருக்குமோ என்ற தவறான எண்ணத்தில் இருப்பது காரணமேதெரியாமல் குழம்புவது குழப்புவது மனம் எப்போதும் சஞ்சலத்தில் இருப்பது ஸ்திரமான முடிவுகள் எடுக்கமுடியாமல் தினறுவது தெரிந்த தொழிலை விட்டு விட்டு தெரியாத தொழிலை தொடங்குவது தி எல்லாம் ஏழரையின் ஆட்டங்கள் எந்த புதியதொழிலை தொட்டாலும் மனம் ஸ்திரம் இல்லாத நேரத்தில் நீ எந்த தொழிலை தொட்டாலும் உன்னால் விளங்க வைக்க முடியாது எல்லாம் நட்டத்தில் முடியும் நீ ஒரு கணக்குபோட்டு இருங்குவாய் கர்ம வினை கழிக்கும் காலம் அது ஒரு கணக்கோடு உன்னை ஓரங்கட்டிவிடும் பார்ப்பவர்கள் எல்லாம் உன் மனதிற்கு பாவியாக தெரிவார்கள்.

இவர் நம்மிடம் இருக்கிறார் இவரும் நம் வியாபாரத்திற்கு வருவார் என்று நினைத்தால் இருக்கட்டும் அண்ணா எனக்கு கடுமையான வேலை இருக்கு நான் முடிந்ததும் வருகிறேன் என்று கூறி தன்நடையை கட்டுவார்.

ஒவ்வொரு பதிவிகளிலும் விளக்கங்கள் எழுதுகிறோம் படித்து உணர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் ஜாதகம் பார்க்க வந்தால் உங்களை வினைகளை கண்டுகொள்ள வருகிறாய் ஜோதிடருக்கு எவ்வளவு பாவம் என்பது உனக்கு தெரியாது அவர் தட்சனை கேட்டால. இந்த குழுவில் காசு கொடுத்தால்தான் ஜோதிடம் பார்ப்பார்கள் என்று பதிவிடுகிறீர்கள் ஒவ்வோரு ஜோதிடரும் எத்தனை நபர்களின் கர்மவினைகளை சுமந்துகொண்டு திரிகிறார்கள் தெரியுமா நீங்கள் எல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் ஜோதிடத்தை கற்றுக்கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிடாலம் உலகம் புகழ்பெறலாம் என்று நினைவில் இருந்தால் ஒதுங்கிவிடுங்கள் இது ஒரு மாயை கர்ம வினைகளை சுமந்துகொண்டு அலையவேண்டும். அவர்வர்கள் படும்பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.

எல்லா குழுமத்திலும் பின்டங்கள் புலம்பும் புலம்பல்களை பாருங்கள் எத்தனை போட்டிகள் சன்டைகள் சச்சரவுகள் எல்லாம் கர்ம வினைகளின் தான்டவம்.

குருவருள் திருவருள்

பொதுவாக ஒரு காரியத்திலோ செயலிலோ வெற்றி பெற வேண்டும் என்றால் குருவருளூம் திருவருளூம் வேண்டும் பெதுவாக ராசிநாதன் லக்கனநாதன் ஐந்துக்கு உடையவன் தர்மகர்மாதிபதிகள் வலுப்பெற்றிருக்க வேண்டும் மறைவு பெற கூடாது சுப வலிமை அல்லது சூட்சம வலிமை பெற்றிருக்க வேண்டும் இப்படி அமைய பெற்ற  ஜாதகர்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவார்கள்.

ராசிநாதன் லக்கனநாதன் ஐந்து ஒன்பதுக்கு உடையவர்கலோ தர்மகர்மாதிபதிகலோ ஆறு எட்டு பண்ணென்டில் மறைந்தாலோ நீசம் பெற்றாலோ மேற்கண்ட கிரகங்களுக்கு வீடு கொடுத்தவர் மறைவு பெற்றாலோ சுப வலிமை சூட்சம வலிமை இலந்தாலோ செய்கின்ற செயல்களில் தடை தாமதங்கள் குறுக்கீடுகள் ஏற்படும்.

உதாரணமாக காரியத் தோல்வி என்பது வேறு, காரிய தாமதம் என்பது வேறு, காரியத் தடை என்பது வேறு காரிய ஏமாற்றம்என்பது வேறு, ஒரு உதாரண விளக்கதோடு பார்போம் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகிறோம், இட்லி சாப்பிட ஆசைப்பட்டு  கேட்கிறோம் இட்லி முடிந்தது தோசை அல்லது ஊத்தாப்பம் இருக்கிறது என்றால்! விரும்பியது கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் ஆகும். அதேபோல் சப்பாத்தி கேட்டால் பூரிதான் இருக்கிறது என்றால் அதுவும் ஏமாற்றம்தான்! எல்லா பதார்த்தமும் முடிந்து விட்டது வெறும் காபி டீ மட்டும்தான் இருக்கிறது என்று சொன்னால் வேறு கடைக்குத்தான் போக வேண்டும் அது காரியத்தடை தோல்வியைக் குறிப்பதாகும். இட்லி இருக்கிறது இருபது நிமிடங்கள் ஆகும் வேகிறது என்றால் காரியதாமதம் ஆகும். எனவே பலன்களை இவ்வாறு பகுத்து பார்த்தால் நிச்சயமாக பலன்கள் பழுது ஏற்படாது 

சுப வலிமை என்ன என்பதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ✍

Post a Comment

0 Comments