Ticker

6/recent/ticker-posts

நாம் எவ்வாறு கர்மாக்ககளை கடக்க வேண்டும்?

கர்மாவை கடப்பது எப்படி? Karma

னதை எப்படி வைத்திருக்கவேண்டும்:

மனது எப்போதும் இறை சிந்தனையில் இருக்கவேண்டும், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் இது ஒரு வழியான வழிபாடுகள் கூட இதில் பல ரகசியங்கள் அடங்கி உள்ளது.
நமக்கு தெரிந்ததை நாம் நன்றாக தெரிந்து கொண்டால் போதுமானது, சாதம் இருந்தால் போதும் நீர் ஊற்றி வெங்காயம் ஊருகாய் அல்லது தேங்காய் கீற்றை தொட்டு கொண்டு சாப்பிடலாம் பசி ஆறிவிடும், 

கொஞ்சம் வசதி இருந்தால் ஏதாவது ஒரு குழம்பு அல்லது சாம்பார் வைத்துகொண்டும் சாப்பிடலாம் இன்னும் வசதியாக இருந்தால் சாதம் சாம்பார் வத்தல் குழும்பு ரசம் மோர் அப்பளம் வடை பாயாசம் என வசதிகளுக்கு ஏற்ப நாம் உணவை தாயாரித்து சாப்பிடலாம் ஆனால் இதில் முக்கியமானது என்ன என்றால் பசி என்ற ஒன்றுக்கான தீர்வதற்கான தீர்வு ஆகும். ஆண்டவன் தினமும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான படிகளை அளந்துகொண்டுதான இருக்கிறான்.

ஜோதிடர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:-

ஜோதிடம் மூலம் நமக்கு உண்டான பிரச்சனைகளை கண்டு பிடிக்க முடியுமா? அந்த பிரச்சனைகள் எந்தக்காலம் வரை நீடிக்கும? நமக்கு எப்போது நல்லகாலம் ஆரம்பம் ஆகும்?  திருமணம் எப்போது? எப்போது வேலை கிடைக்கும்? வியாதி குனமாகுமா? குழந்தை பாக்கியம் உண்டா? எப்போது கிடைக்கும். இது போன்ற பொதுவான கேள்விகளுக்கு ஒரு ஜாதகத்தை பார்த்து பதில் கூறினாலும் போதும். வாழ்க்கைக்கு தேவையான கேள்விகளுக்கு பதில் தெரிந்துவிடும். இதுதான் ஜோதிடர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது.

நமக்கு எது தேவையோ அதை எல்லாம் நாம்முன்னோர்கள் சொல்லிகொடுத்து சென்றுவிட்டார்கள். தேவை இல்லாதவற்றை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பலன் சொல்ல தேவையான முறைகளையும் அதற்கு என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ அதை மிகத்தெளிவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள. ஜோதிடத்திற்கு தேவை இல்லாத ஆணிகளை தேடி அலைய வேண்டாம். நமக்கு தேவையும் இல்லை.

நாம் கற்றுக்கொள்ளவேண்டியது எது? கற்றுக்கொள்ள வேண்டாது எது? அது எந்த முறையில் யாரிடம் கிடைக்கிறது? என்பதை ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.
சில ஆசிரியர்கள் ஜாதக ரீதியாக ஏற்படும் பிரச்சனகளை எவ்வாறு சமாளிக்கவேண்டும் என்பதை தெளிவாக சொல்லித்தருகிறார்கள் நல்லவர்களை தேடி பலன் பெறுங்கள்.

ஒருவன் ஜாதகத்தில் கர்மா என்னவாக உள்ளதோ அதன் படிதான் அவன் வாழ்க்கை அமையும்.

ஒரு சில உதாரணங்களை கொண்டு பார்க்கலாம் அதாவது ஒரு ஆரம்ப பள்ளியில் ஒத்த வயது உள்ள மாணவர்கள் படிப்பதாக எடுத்து கொள்வோம் அங்கே வகுப்பில் ஆசிரியர்கள் ஒரே மாதிரியாக பாடங்களை சொல்லித்தருவார்கள் ஆனால் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் வாங்குவதில்லை, மதிப்பெண்களில் வேறுபாடுகள் குனங்களில் வேறுபாடு, நடவடிக்கைகளில் வேறுபாடு என மாறுபடுகிறது ஒரு சிலர் தொடர்ந்து படித்து வருகிறார்கள் ஒரு சிலர் கல்வியை தொடராமல் மனம்போன போக்கிற்கு அவன் தடம் மாறுகிறது, ஒருசிலர் தன் தகப்பனார் அல்லது தாத்த நண்பன் மாமன்கள் என உறவுகள் செய்கின்ற தொழிலுக்கு மனம் அடிமையாகி உதவிக்கு செல்லபோகி பிற்காலத்தில் அந்த தொழிலை அவன் செய்ய தொடங்கிறான். ஒரு சிலர் தவறான பாதைக்கு செல்கிறான் ஒரு சிலர் பொய்சொல்ல ஆரம்பித்து அதுவே தொழிலாக மாற்று கிறான். போதைக்கும் குடிக்கும் அடிமையாகிறான். ஒரு சிலர் சமூகத்தில் நல்லவர்போல வேசமிடுகிறான் நிஜத்தில் வக்கிரபுத்தியால் மாட்டிக்கொள்கிறான்.

கர்மா எவ்வாறு செயல்படுகிறது? Karma

இதற்குகாரணம் என்ன தகப்பனார் சரியில்லையா? அல்லது வளர்ப்பு சரியில்லையா? 

அவன் கர்மாவே காரணம் பிறப்பு என்றாலே வினையை அனுபவிக்க பிறந்து இருக்கிறான் என்று பொருள். ஒருவன் யாசகம் எடுத்துதான் வாழவேண்டும் என்றால் அவன் ஜீவன் மனம்போன போக்கிற்கு கர்மா இட்ட வழியில் தெருதெருவாக அலைய ஆரம்பிக்கிறான் அவன் கர்மா யாசகமாகிறது. அவனுக்கு என்ன அறிவியல் முறையில் கவுன்சிலிங் கொடுத்தாலும் கர்மா ரெக்கார்டு தெருத்தெருவாக அலைந்து யாசகம் எடுத்து உண்டால்தான் அவன் மனம் திருப்தி அடையும்.

அப்படி என்றால் கர்மாவை திருத்த முடியாதா? என்ன விதைத்தாயோ அதைகண்டிபாக அறுவடைசெய்தாக வேண்டும் ஒருவன் திருடிதான் பொய்பேசிதான் பிழைப்பு ( கர்மா) என்றால் அவன் என்ன செய்வான் பாவம் அவன் செய்கின்ற தொழிலில் பொய்யையும் பித்தலாட்டத்தையும் திருட்டுதனத்தனத்தையும் சேர்த்து செய்து தொழிலை வளர்ப்பான் இல்லை என்றால் அவனுக்கு லாபம் கிடைக்காது. இனம் இனத்தோடு சேரும் குனம் குனத்தோடு சேரும்.

யார் யார் பொய்சொல்லுவார் எந்த அமைப்பு திருடச்சொல்லும், எந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் யாருடன் இணைவார்கள் அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஜோதிடம் என்பது நாம் வாழ்ந்த வாழ்கின்ற வாழபோகின்ற வாழ்க்கைதான் அந்த உண்மையான வாழ்க்கையின் கிரக இணைவுகளே துல்லியமான ஜோதிடம் உடனே இது எனக்காக எழுதி இருக்கிறார் உனக்காக எழுதி இருக்கிறார் என்று பார்க்கவேண்டாம் உண்ணமையாக எழுதியிருக்கிறேன்.

Tamil Astrology -ஜோதிட பதில

You May also like

Post a Comment

0 Comments