ஜோதிடத்தில் இழப்புகள். Jothida Pathil
பொதுவாக உயிர்காரகம், உயரற்ற காரகம் என்று இரண்டு உண்டு இழப்பு ஏற்படும் காலத்தில் உயிர்காரகத்தை பாதித்தால் உயிரற்றகாரகம் வலுத்து இருக்கும். உயிர்காரகத்திற்கு எப்படி பட்ட இழப்பை கொடுக்கும் கர்ம வினைக்கேற்ப உயிர்காரத்திற்கு வியாதியை கொடுக்கும் அல்லது உயிரை இழக்க செய்யும் அல்லது அதற்கு சமமான அவமானத்தை கொடுக்கும்.
உயிரற்ற காரகம் பணம் பொருள் வாகனம் வீடு போன்ற செல்வங்களை இழக்க செய்யும் உயிர்காரத்திற்கு சமமான இழப்பாகத்தான் இருக்கும். இழப்பு என்றாலே சந்திரன்தான் இங்கே கர்மக்காரகன் தொடர்பு பெறும்போது இழப்பை உறுதிசெய்யும்.
கர்மக்காரகன் மற்றும் சந்திரன் இணைவு பெறும் காலங்களில் இழப்பை தொடங்கி வைக்கும் அந்த இழப்பு கடுமையானதா இல்லை இயல்பானாத என்பதை உறுதி செய்வது கர்ம வினையால் ஏற்படும் தசைகளே சில சமயம் தன் திசையே தன்னைச்சுடும் சிலசமயம் குடும்ப உறுப்பினர்களின் தசை நமக்கு ஒவ்வாமல் ஆகி பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும்.
சில இழப்புகள் நம்மை புரட்டி போட்டுவிடும் பழய எந்த சுவடுகளும் இல்லாமல் செய்துவிடும்.
உயிர் இழப்பு எப்போது ஏற்படும்? பொருள் இழப்பு எப்போது ஏற்படும்? தொடர்ந்து வாருங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல அது ஒரு கைகாட்டி, அது ஒரு வகை வழிகாட்டி தான் அது, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், ஜோதிடம் மூலம் 60%முதல் 75% பலன்களை பெறலாம் தவிற 100 % பலன்களை பெற இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.
சக்கரவர்த்தி கலியபெருமாள்
Jothida Pathil
0 Comments