🦅இந்த பதிவை 2021 வருட பலனாகவே எடுத்துக்கொள்ளலாம் ஓம் சிவாயநம சிவ!
குரு சனி ராகு கேது (வருட கிரகங்கள்)
செவ்வாய்
எந்த ஒரு வருட கிரகங்கள் பெயர்ச்சி ஆவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பலன்களை கொடுக்க ஆரம்பிக்கும் நல்ல பலன்களாக இருந்தாலும் கெடுபலன்களாக இருந்தாலும் முதலில் ஒரு சலனத்தை ஏற்படுத்திய பிறகே தன் காரகங்களை கொடுக்கும்.
கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு ஆனால் காரகங்கள் வளம் பெறும் விருத்தி அடையும் ஒன்றுக்கொன்று பகையானால் அதன் காரகங்கள் பாதிப்பு ஏற்படும் இணைவு இணைகின்ற இடம் மற்ற கிரகங்களின் பார்வைகளை பொருத்து பாதிப்பகளின் விகிதாசாரங்கள் கூடும் குறையலாம்.
பாதிப்பை மட்டும் எழுதாதே நல்லதையும் எழுது என்கிறது மனம் நல்லது யார்தடுத்தாலும் நிற்காது கிடைத்து விடும் கர்ம பாதிப்புகள் கூட்டு மரணங்கள் நடந்தே தீரும் எந்த மகான்களின் பிராத்தனை உலக மக்களை காக்க மாட்டர்களா என்ற என்னத்தில் பதிவிடுகிறேன் அனைவரின் பிராத்தனைகள் கூட்டு பிராத்தனையாகி வெற்றி அடைய திருவடி வணங்குகிறேன்.
காலம் மிகச்சிறந்த மருந்து மிக கொடியதும் கூட
நடக்க இருக்கின்ற கோட்சாரத்தை நினைத்தாலே பயமாக உள்ளது மீண்டும் என்ன என்ன நடக்க போகிறது என்றே தெரியவில்லை இப்படி பட்ட கால கட்டத்தில் நம் கர்ம பிறப்பு மகா பாவியான பிறப்பாகத்தான் இருக்கிறது புண்ணியங்கள் இல்லை இந்த புனித உலகில். பல பாவங்களை செய்து நம் தலையில் வைத்துவிட்டு சென்று விட்டார்கள்.
மிதுனத்தில் இருந்த ராகு அவர்கள் ரிசபத்தை நோக்கி வர இருக்கிறார்கள் ஆனால் அடுத்து ஆட்சி பெற்ற சனி அத்துடன் ஆட்சி தகுதியில் இருந்த குரு மகரத்தில் நீசம் பெற இருக்கிறார் நீசத்தை நோக்கிய பயணம் குருவின் காரகங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் குரு நிலதத்துவ ராசிகளில் ராகு சனியுடன் இணைவு ஏற்பட உள்ளது.
குரு சனி இணைவு தொல்லை தொந்தரவுகளுக்கு இடமில்லை ஆனால் ராகு இணைவு மிகப்பெரிய ஆபத்தை உண்டுபன்னும் கூட்டு மரணங்களை ஏற்படுத்தும் இத்துடன் செவ்வாய் இணைவு ஏற்படும்போது சொல்லவே வேண்டாம் இயற்கை பேரிடர் பேர்அழிவுகள் இயற்கை சீற்றங்கள் நிலபிளவுகள் மண்சரிவுகள் வெடிவிபத்துகள் ராணுவம் காவல் துறையால் ஏற்படும் பிரச்சனைகள் கலவரங்கள் ஏற்படும, விஷ வாய்வுகசிவுகள் ஏற்படும் மண்ணில் உள்ள ரசாயன கிடங்குகள் வெடிவிபத்துகள் உண்டாகும் இதானால் ஏற்படக்கூடிய கூட்டு மரணங்கள் ஏராளத்தை நடத்தி காட்ட இருக்கிறது.
ரிசபம் நிலம் நிலத்தில் ராகு மகர நிலத்தில் நீச குரு அவருடன் மகர ஆட்சியாளர் சனி இவர்களுக்கு திரிகோணத்தில் அல்லது பாகை நெருக்கத்தில் உஷ்ணமான நெருப்பு செவ்வாய் வரும்போது நிலத்தை பிளப்பதும் எரிமலைகள் அதிமாக வெப்பத்தை வெளிப்படுத்தும் கிடங்குகள் அழிவதும் நிலத்தை நெருங்கும் விமானங்கள் வாகனங்கள் விபத்துக்கள் உள்ளாவதும் உயர்பலிகள்(கூட்டுமரணங்கள்) மண்சாரந்த அழிவுகள் மண்ணில் ஏற்படும் இயற்கை பேர்அழிவுகள்(பூகம்பம்) மண்சரிவுகள்.
எப்போது எல்லாம் ராகு சனி உடன் செவ்வாய் இணைவு ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் அதன் காரகத்துவங்கள் பாதிப்பு அடையும். பொதுமக்கள் கலவரம் தடியடி கட்டபஞ்சாய்த்து இதனால் ஏற்படக்கூடிய உயிர் சேதங்கள்.
இந்த இணைவுகளில் சுக்கிரன் 1 5 9 சப்தம் ஸ்தானம் வீடுகொடுத்தவருடன் இணைவு ஏற்படும் போதும் சுக்கிர காரகத்துவங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் அதாவது பெண்கள் நடிகை நடிகர் மரணங்கள் அவமாணங்கள் உண்டாகும் தற்கொலை முயற்சி மேற்கொள்வார்கள் வாகணம் விபத்துகள் ஏற்படும்.
இப்படி பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்காமல் இருக்க இறைவனை பிராத்தனை செய்வோம்
ஜோதிடம் தோற்று பிராத்தனை வெற்றியாகட்டும்
சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅
0 Comments