Ticker

6/recent/ticker-posts

வாழ்வில் வெற்றிபெற செய்ய வேண்டியவை

சிவ சிவாயநம ஒம் 

வாழ்வில் வெற்றிபெற செய்ய வேண்டியவை

☀️பூஜை அறையில் குலதெய்வ படத்தை வைத்து கும்பிட ஆரம்பியுங்கள், தினமும் குலதெய்வத்தின் திருநாமத்தை கூறி வழிபடுங்கள்.

ஶ்ரீ சென்டாடும் ஐயானார் துணை🎠

☀️மனதிற்கு லயக்கூடிய அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் பிறந்த மகான் சித்தர்களை குருவாக நினைத்து தினமும் வழிபடுங்கள் அவர்களின் நாமத்தை உச்சரியுங்கள்.

☀️மாதம் ஒருமுறை முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்துவாருங்கள்.

☀️ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை தினமும் ஜபித்துவாருங்கள்

உங்கள் கர்ம வினை படிப்படியாக குறைந்து உங்கள் வாழ்க்கையில் நன்மை நடக்க ஆரம்பிக்கும்.

☀️குரு தாய் தந்தை மதிக்காத வணங்காத குடும்பம் கரைசேராது

(இயல்புக்கு மாற பேசுவார்கள் )

இழப்பு எவ்வாறு ஏற்படுகிறது? இழப்பிற்கு கிரகங்கள் எவ்வாறு உதவுகின்றன? 

பொதுவாக உயிர்காரகம், உயரற்ற காரகம் என்று இரண்டு உண்டு இழப்பு ஏற்படும் காலத்தில் உயிர்காரகத்தை பாதித்தால் உயிரற்றகாரகம் வலுத்து இருக்கும். உயிர்காரகத்திற்கு எப்படி பட்ட இழப்பை கொடுக்கும் கர்ம வினைக்கேற்ப உயிர்காரத்திற்கு வியாதியை கொடுக்கும் அல்லது உயிரை இழக்க செய்யும் அல்லது அதற்கு சமமான அவமானத்தை கொடுக்கும்.

உயிரற்ற காரகம் பணம் பொருள் வாகனம் வீடு போன்ற செல்வங்களை இழக்க செய்யும் உயிர்காரத்திற்கு சமமான இழப்பாகத்தான் இருக்கும். இழப்பு என்றாலே சந்திரன்தான் இங்கே கர்மக்காரகன் தொடர்பு பெறும்போது இழப்பை உறுதிசெய்யும்.

கர்மக்காரகன் மற்றும் சந்திரன்  இணைவு பெறும் காலங்களில் இழப்பை தொடங்கி வைக்கும் அந்த இழப்பு கடுமையானதா இல்லை இயல்பானாத என்பதை உறுதி செய்வது கர்ம வினையால் ஏற்படும் தசைகளே சில சமயம் தன் திசையே தன்னைச்சுடும் சிலசமயம் குடும்ப உறுப்பினர்களின் தசை நமக்கு ஒவ்வாமல் ஆகி பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும்.

சில இழப்புகள் நம்மை புரட்டி போட்டுவிடும் பழய எந்த சுவடுகளும் இல்லாமல் செய்துவிடும். 

உயிர் இழப்பு எப்போது ஏற்படும்? பொருள் இழப்பு எப்போது ஏற்படும்?  தொடர்ந்து வாருங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஈசனே அனைத்து உயிர்களையும் செய்த முன்வினை தீவினைகளை மன்னித்து காப்பாற்றுவாயக மன்டியிட்டு கேட்கிறேன்.

குரு -ஜீவன், மதகுரு, போதகர்
ராகு -கர்மாவை முடிப்பவன் நடுங்க செய்பவன் விஷம் கண்ணுக்குதெரியாத பாஷானம் மருத்துவத்திற்கு புலப்படாதா கட்டுபடாத வியாதி உயிர்ச்சேதம் பொருட்சேதம் அவமானங்கள் 
கேது -ரகசியம் கர்மா மயக்கம் தெரிந்தே உயிரை மாய்த்துக் கொள்ளுதல் 
செவ்வாய்- ரத்தம் கூரிய ஆயுதம் பூமி நிலம் காவல் ராணுவம் 
புதன் -அறிவு புலமை விஞ்ஞானம் 
மிதுனம் காற்றுராசி
தனுசு நெருப்பு ராசி

எப்போது எல்லாம் குரு ராகு சேர்க்கை ஏற்படுகிறதோ அப்போதும் எல்லாம் ஜீவனுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் மரணபயம் கோரவிபத்துக்கள் மதகலவரங்கள் இரு மதங்களுக்கு கிடையே கிளர்ச்சிகள் போராட்ங்கள் புதிய வியாதிகள் தோன்றி கூட்டுமரணங்களை ஏற்படுத்தும் கொத்து கொத்தாக மரணங்களை ஏற்படுத்திவிடும்.

ஒவ்வோரு ராசி வீடுகளுக்கு ஏற்ப நீரால் நிலத்தால் காற்றால் நெருப்பால் பிரச்சனைகளை ஏற்படுத்தும் குருராகு இணைவு 1 5 7 9 ஏற்படும் போதும் அதற்கு திரிகோண வீடுகளையும் பாதிப்பு அடையச்செய்யும் ஒவ்வோரு வீடுகளுக்கு சொந்தமான நாடுகளை ஆட்டிபடைக்கும்.

வராலாற்று நிகழ்வுகள் பல சான்றுகள் உள்ளன நீங்களே கண்டு பிடித்து கமண்ட செய்யுங்கள் உங்கள் ஆய்வுகளில் குறித்துக்கொள்ளுங்கள்

உங்கள் ஆய்வுகளுக்காக

1917 ஆண்டு குரு ரிஷபத்தில் வக்ரம் ராகு தனுசு கேது மிதுனம் அந்த ஆண்டு என்ன பேரழிவு தொடங்கியது என்று பார்த்துகொள்ளுங்கள்.
குரு நீசத்தை நோக்கிய பயணம் கர்மா சனி கேது ராகு செவ்வாய் இவர்களின் பதிவுகளை பெற்று பெயர்ச்சியாகிறது எல்லோரையும் நீசபடுத்தி செல்கிறது.
நிறைய எழுதவேண்டும் மரணபயத்துடன் நானும் ஒருவனாக இந்த பாவி மாமிச பிண்டம் பதிவிடுகிறது.
இந்த உலகமக்களை இந்த அழிவிலிருந்து ஆண்டவன் பாதுகாத்து விட்டால் என் பிண்டம் ஜீவனோடு இருந்தால்  நான் செய்யும் பரிகாரம் நான் கடைசிவரை ஜீவன்களுக்கு அன்னாதானம் செய்வேன் என் சொத்துகள் அனைத்தும் ஜீவன்களுக்கு அன்னதானம் செய்வதே.
இறைவா இந்த கொடுமையான காலத்திலிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவாயாக
குறிப்பு -இதில் செவ்வாய் மாறும் போது ஒரு சில மாற்றங்களும் குரு மாறும் போது ஜீவன்களுக்கு நிம்மதி ஏற்படும் 

பதிவை திரும்ப திரும்ப படித்து தெளிவாக்கி கொள்ளுங்கள் 
அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🕊
நாம் அனைவரும் முன் செய்த பாவங்களை தீர்பதற்காகவே இந்த பிறப்பு எடுத்து உள்ளோம் இதை மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
நீ என்ன என்ன பாவங்கள் துரோகங்கள் செய்தாயோ யார் யாரை வஞ்சித்தாயோ மனைவிக்கு செய்த துரோகங்கள் பங்காளிக்கு செய்த நம்பிக்கை துரோகம் மகனுக்கு செய்த துரோகம் ஏமாற்றிய சொத்துகள்.
இவைகள் எல்லாவற்றிற்கும் இந்த பிறப்பில் நீ ஏங்கவேண்டும் அவ்வளவு எளிதில் நீ அடைய முடியாது ஏங்கி ஏங்கி உறங்க வைக்கும் பகைகிரங்களாக ராகு கேது சனி செவ்வாயாக ஜாதகத்தில் அமர்ந்து உன்னை ஆசைபட வைத்து ஏங்க வைக்கும்.

நீ இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இதை சரி செய்யாமல் நீ  எந்த யோகத்தையும் அனுபவிக்க முடியாது.
இதுதான் உன் பிறப்பு ஜாதக கர்ம வினை முடிச்சு இந்த முடிச்சியை நல்ல குருவை நாடி உன் பயணத்தை முடித்துக்கொள்.
இல்லை என்றால் திக்கு தெரியாமல் நசுங்கி வெந்து நொந்து கேவலப்பட்டு அசிங்கப்பட்டு கர்ம வினை படி மாமிச பிண்டத்தை விட்டு ஆன்மா வெளியேறும்.
தொடருவோம் 
சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள் ✍

Post a Comment

0 Comments