ஜோதிட ரகசியங்கள் அல்லது சூட்சமங்கள்
ஐயா எனக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்
மீண்டும் கர்மாவை நோக்கிய பதிவு
ஜாதகத்தில் தடை தாமதம் என்பது இருந்து விட்டால் உடனே இன்சன்ட் ஆக வினை புரிய தடை நீங்க பரிகாரம் கேட்கிறார்கள் நாளை திருமணம் திருமண ஆகி குழந்தை இல்லை திருமணம் நடந்த உடன் பிரிவு.
உடனே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் சென்று எனக்கு இந்த மாதிரியான பிரச்சனை ஏதாவது பரிகாரம் கூறுங்கள் என்று கேள்வி கேட்க படுகிறது. இந்த பிரச்சனை ஒரு சம்பவம் நடந்த பிறகு கேட்க பட வேண்டிய கேள்வியா? அல்லது சம்பவம் நடப்பதற்கு முன்னால் என்ன நடக்கும் என்பதை பார்த்து அதற்கு தகுந்தாற்போல் வாழ்க்கையை காலத்தை கடக்க வேண்டுமா?
ஜோதிடருக்கு தெரியாதா? இந்த ஜாதகியை திருமணம் செய்தால் பிரிந்துவிடுவார்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படும் என்று! எங்கேயோ தப்பு நடக்கிறது. என்ன தவறு விரிவாக பார்க்கலாம்.
பிறப்பு என்பது கர்ம வினையை கழிப்பதற்குதான் அதை ஜாதகம் தெளிவாக காட்டிவிடும் நீ செய்த பாவங்கள் உன்னை ராகு கேதுவோ இந்த பிறப்பில் நிம்மதியாக வாழ விடாது, முதலில் அதை கண்டுபிடித்து அந்த பிரச்சனைகளை தீரத்துகொள்ளவேண்டும்.
எந்த ஒரு கிரகத்திற்கும் காரகம் உண்டு அதை நீ அனுபவிக்க வேண்டுமா வேண்டாமா என்பது ராகு கேதுவின் கைகளில்தான் உள்ளது அதனால்தான் ஒரு கிரகத்திற்கு 3 6 11 ல் ராகு கேதுக்கள் அமைந்து விட்டால் அந்த காரகத்தை தடை இல்லாமல் நீ அனுபவிக்கமுடியும்.
விரிவாக பார்க்காமல் தொடர்ந்து வாருங்கள்.
உன்மனமே உன் வினையை உண்டு பன்னும், நீ செய்யும் பாவத்திற்கும் சாபத்திற்கும் உன்மனமே காரணம்
(யாராவது நமக்கு சாதாமாக பலன் கூறமாட்டர்களா என்று மனம் ஜோதிடரை தேடிக்கொண்டே அலையும். இதுவே வினையாக அமைந்து விடும்)
அன்பு மிக்க வேத ஜோதிட குழு அன்பர்களே என் சிரம்தாழந்த வணக்கங்கள், மனம் என்பது ஒரு செயலை ஆராயும்போது நல்லவைகளை மட்டும் நினைத்து இது சரி என்று முடிவெடுத்து விடும், தீயவைகள் கெடுதல்கள் மனதால் மறைக்கப்படும் இங்குதான் விதி ஆரம்பம் ஆகிறது,
நல்ல தசா பலன்கள் நடக்கும்போது கெடுதல்களிலுருந்து காப்பற்றபடுவீர்கள் ஆனால் கெடுதாலான தசாபலன்கள் நடக்கும்போது கர்மவினை பாவபலன்களை நிறைவேற்றிக்கொள்ளும், உதாரணமாக வீடுகட்டுகிறார் என்றால் நல்ல தசை நடந்தால் வீட்டு அமைப்பு வாஸ்து படி அமையும், பணி ஆட்கள் நல்லபடி அமைவார்கள், பணசிக்கல் ஏற்படாது, ஆனால் கெடுதசை நடந்தால் எல்லாம் தலைகீழாக அமைந்து விடும் செய்கின்ற வேலை போய் பொருளாதரா சிக்கலை ஏற்படுத்திவிடும். இன்னொரு உதாரணம் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்ய ஏற்பாடு செய்வார்கள் அப்போது அவசரப்பட்டு தோஷம்கழியாமல் திருமணம் செய்து வாரிசுக்கு ஏங்கி, அசிங்கம்பட்டு குடும்பம் பிரிந்து சிக்கலில் நிற்கும் நல்ல அமைப்பு இருந்தால் எல்லாம் நன்றாக ஈடேரும். இதில் விதி பெற்றோர்கள் மூலம் நல்ல இடம் விட்டால் கிடைக்காது என்று முடிவெடுத்து முடிவில் விட்டால் போதும் என்று கோர்ட்டுக்கு அலைவார்கள், யோசித்து முடிவெடுங்ள்
ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல, அல்லது அதிஷ்டத்தை தரும் சக்தி அல்ல, சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு வழிகாட்டி! கைகாட்டிதான்"
சோதனை இல்லாமல் சுகத்தில் மிதக்கும்போது மனிதன் மாயையில் சிக்கி இறைவனை மறந்துவிடுவார்கள்.
உங்கள் அவசரத்திற்கும், அவசியத்திற்கும் கிரகங்கள் உடனே ஓடிவந்து யோகத்தை பன்னிவிடாது. ஒரு ஜாதகருக்கு யோகம் செய்யும் கிரகங்கள் என்று இரண்டு உண்டு, பாவம் செய்யும் கிரகங்கள் என்று நான்கு உண்டு எந்த பலுனும் செய்யாமலே வேடிக்கை பார்க்கும் கிரகங்கள் மூன்று உண்டு. இவைகள் எப்போது பயன்படும் என்பது சூட்சமம்.
வாழ்க்கையில் உயர்வது என்பது மலை ஏறுவது போன்றது கடினமாக இருக்கும், வாழ்க்கையில் தாழ்வது என்பது மிக எளிது மலையிலிருந்து இறங்குவது போன்றது)
ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் கழியாமல் திருமணம் செய்வது, மற்றும் பொருத்தம், முகூர்த்தம் இவைகள் மூன்றும் மிக முக்கியமானவை இவற்றை யார் யார் எல்லாம் தவிர்த்துவிட்டு, திருமணம் நடத்தினார்களோ என் அனுபவத்தில், வாரிசு இல்லாமல் போதல், குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து விடுவார்கள், பொருளாதாரத்தில் தடைபட்டு நிம்மதி இல்லாமல் வாழ்தல், இதனால்தான் 10 பொருத்தம் பார்த்த திருமணம் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பிரிந்து விடுகிறது
கடக ராசி கடக லக்கனம்
கடக ராசி கடக லக்கனம் கடகம் நண்டின் குணங்களை கொண்டு வாழ்வார்கள் கடகம் எந்தவழியிலும் செல்லும் தகுதி உடையது முன்னோக்கி நகரும் பின்னோக்கி நகரும் பக்கவாட்டில் நகரும் குறுக்கு மற்றும் நெடுக்கில் நகரும் எனவே எந்த சூழ்நிலையையும் சந்தித்து அதற்கு தகுந்தாற்போல தன் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வார்கள், மற்றவர்களின் மனதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல தன்நடவடிக்கைகளை மாற்றும் தகுதி கொண்டவர் அதனால் தான் இருக்கும் இடத்தில் முதன்மை பெறுவார்கள்.
மிகுந்த பாசம் உள்ளவர்கள் பாசம் என்பதை அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் தனிமையில் அழக்கூடியவர்கள், ஒரு குடும்பத்தில் இந்த ராசிக்கர்ர்கள் இருந்துவிட்டால் அந்த குடும்பத்தை கன்னியமாக கட்டி காப்பார்கள் தாய்மை உள்ளம் கொண்டவர்கள் தனிமையில் அழக்கூடியவர்கள் எப்போதும் சுதாரிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். மற்றவர்களை வசீகரித்து தன்பக்கம் ஈர்க்கும் தன்மை கொண்டவர்.
குரு சனி புதன் தன்மைகள் அடங்கிய கடகம் சந்திரனின் சலனம் துரிதமானது மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்கள் ஆயக்கலைகள் 64 யும் ருசிக்க நினைப்பார்கள், எந்த துறையாக இருந்தாலும் முதன்மை பெற தகுதி உடையவராக இருப்பார்கள், இவர்களின் பேச்சு நிர்வாகத்திறன் ஆளுமை உடையதாக இருக்கும்
இவைகள் எல்லாம் பொதுபலன்களே மற்ற பலன்களை அறிய தனிநபர் ஜாதகம் பாரத்து தெரிந்துகொள்ளுங்கள், நண்பர்கள் அனைவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சுக்கிர தசை எவ்வாறு இருந்தது அனுபவத்தை பதிவிடுங்கள்
நன்றி வேத ஜோதிட ஆராய்ச்சிகள் தொடரும்
சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅-ஜோதிட பதில்
0 Comments