பாக்கியஸ்தானம் செய்த பாவ புண்ணியங்கள்
உங்கள் சுய ஜாதகத்தில் யோகங்கள் இல்லாவிட்டாலும் உங்களை ஆயுள் வரை அழைத்துச்செல்லும் கோட்சார யோகங்கள் உங்களை வாழ வைக்கும், உங்கள் ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் வருகின்ற கோட்சார அவ யோகங்கள் உங்களை நசுக்கிவிடும், சமயத்தில் கோட்சாரமே கொன்று விடும். இவைகள் எல்லாம் கர்ம வினைகளை பொருத்து சுகமும் வலியும் வேதனைகளும் மாறுபடும்.
உங்களை கர்ம வினைகளை கரைக்கும் தன்மை சித்தர்களுக்கும் மகான்களுக்கு மட்டும்தான் உண்டு, சித்தர்களின் ஜீவசாமதிக்கு சென்று சரனடையுங்கள்.
பாக்கியம் நன்றாக இருந்தால்தான் அனைத்தும் தடை இல்லாமல் கிட்டும், பாக்கியம் பலம் இல்லாதவன் எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆகிறான், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது, உழைப்பு அதிகம் பலன்கள் குறைவு, பேருக்கு வாழந்து வருவான், இருந்தும் இல்லாத நிலை, வாழ்க்கை கற்பனையில் முடிந்து விடும், அதிஷ்டம் இல்லாதவன் ஆகிறான், பாக்கியத்தை வலுப்படுத்தி கொள்ளுங்கள்.
பாக்கியம் என்பது ஒன்பதாம் இடம்
(ஐந்து ஒன்பதுக்குரியவர் பாபர் அசுபர் ஆயின் மிஞ்சும் சுப பலனே, லக்னாதிபதி, பாக்கியாதிபதி, பஞ்சமாதிபதி யோகம் செய்வார் பாதகம் செய்மாட்டார்.)
ஒரு ஜாதகத்தில் யோகமான கிரக சேர்க்கைகள் இருந்தால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் எந்த குறையில்லாமல் வாழ முடியும், தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை மனைவி மூலம் விருத்தி, குழந்தைகள் மூலம் செல்வ சேர்க்கை, பணி ஆட்கள் மூலம் நன்மைகள் வாங்கிய சொத்தின் மூலம் மதிப்புகள் படித்த கல்வியின் மூலம் சிறப்பு ஏற்படும்.
அப்படி இல்லை என்றால் கோட்சரத்தில் உங்களுக்கு எப்போது எல்லாம் கிரக இணைவு ஏற்படுகிறதோ அப்போது மட்டும் சொற்ப யோகங்களை மட்டுமே அனுபவிக்க முடியும் நீ எத்தனை முறை யாரிடம் ஜோதிடம் பார்த்தாலும் உன் பலன்கள் மாறாது மாறாக மகான்கள் சித்தர்களை உண்மையாக சரன் அடையுங்கள் உங்கள் பூட்டை திறந்து விடுவார்கள் நம்பிக்கையோடு.
சில சமயம் கோட்சரம் சித்தம் பேதளித்து வீட்டை விட்டு துரத்தி யாசகம் எடுக்க வைக்கும் சில சமயம் விஷம் விபத்து வெடி விபத்து ஆயுத மரணத்தை உண்டு பண்ணும் சில சமயம் தகாத உறவு கொள்ள தூண்டி உறவு முறை பாராமல் பெண்கள் மேல் சபலம் கொள்ள வைத்து அவமானபடுத்தி தெருவில் நிற்க வைக்கும்.
செய்த பாவங்கள்
எல்லா பின்டமும் பாவங்களை செய்து விட்டு பிறந்த பிறப்பே என்ன பாவங்கள் என்பது அவர் அவர் ஜாதகத்தில் கிரகங்களாக அமைந்து இருக்கிறது.
இதை முதலில் நம்ப வேண்டும் நான் இப்போது மிக மிக நல்லவன் எனக்கு இந்த சோதனையா என்றால் உங்கள் கிரக அமைப்பு இப்படி! நான் எந்த துரோகமும் செய்யவில்லை இப்படிப்பட்ட நல்ல எனக்கு இப்பேற்பட்ட மகனா பிறந்து என்னை வேதனை படுத்துகிறானே ! இது எல்லாம் செய்த வினை!
கிரகங்களை ஒப்பிட்டு பலன்களை பதிவிட்டால் உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டுபார்த்தால் சங்கடமாகத்தான் இருக்கும் எனக்கும் அப்படித்தான் நான் உண்மைகளை எழுதினால் இது நமக்குத்தான் எழுதி இருக்கிறார் என் ஜாதகம் இப்படித்தான் இருக்கிறது சித்தரின் ஜாதகம் அப்படித்தான் இருக்கிறது மகான்களின் ஜாதகம் அப்படித்தான் இருக்கிறது அருணகிரிநாதர் ஜாதகம் அப்படித்தான் இருக்கிறது என்றால் நான் என்ன செய்ய முடியும்.
அனுபவத்தையும் உண்மைகளையும் எழுதும்போது சங்கடங்கள் கண்டிப்பாக வரும் இதை என்னால் ஒன்றும் செய்ய இயலாது.
திருடன் என்றால் அதற்கான கிரக இணைவுகளை எழுதினால்தான் தெரியும் பொய் சொல்பவன் ஜாதகன் கிரக இப்படி இருக்கும் என்றால் எழுதினால்தானே தெரியும் பெண்பித்ததன் நல்லவன் இதற்கெல்லாம் கிரக இணைவு எழுதினாலதானே உங்களுக்கு தெரியும் பதிவு பதிவிட்ட உடனேயே உங்கள் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு இப்படித்தான் இருக்கிறது என்றால் நான் என்ன செய்வது.
என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் ஈசன் செயல்
அன்பர்களே நீங்கள் யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் உங்களுகளுக்கு நேரடியாக உதவமாட்டார்கள், நீங்கள் வணங்கும் இறைவனும்தான் எந்த தெய்வத்தை வணங்கினாலும் யாருக்கும் நேரடியாக வந்து உதவமாட்டார்கள், மாறாக உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உதவி அளிக்கப்படும், உங்களுக்கு வேண்டிய சொத்து, விரும்பிய சொத்து நேசித்த உறவு உங்களை விட்டு பிரியும்.
கால சோதனை கிரகங்களின் பலன்கள், உங்களுக்கு ஒவ்வாத சொத்து வேறு ஒருவருக்கு மாளிகைக்கு உதவும், யாரோ ஒருவரின் உதவி உங்களின் இந்த வாழ்க்கைக்கு துணையாக அமைந்து இருக்கும், அவர் சேர்த்த சொத்த்திற்கு ஆதாரமாக அமைந்திருக்கும்.
ஓவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கு பின்னால் ஒருவரின் உதவி மறைந்து வாழும் அதுதான் இறைவன், நீங்கள் செய்யும் ஒவ்வொரு புன்னியமும் யாரோ ஒரு ரூபத்தில் உங்களையோ உங்கள் குடும்பத்தாரையோ வாழ வைக்கும்.
கிரக சோதனைக்காலத்திலும் தசா சந்தி காலத்திலும் கிரக சந்தி காலத்திலும் கோட்சார சந்திகாலத்திலும் பாதிப்பும் பங்கமும் செலவும் சேதமும் விரயமும் நடக்ககூடும்.
ஒவ்வோரு ஜாதகத்திலும் 1 ஆம் இடம் 5 ஆம் இடம் 9 ஆம் இடம் வலுப்பெறவேண்டும் அதற்கு அவப்பொழுதும் தவப்பொழுது என்ற மாதிரி இடைவிடாத பிராத்தனை, உங்கள் குலதெய்வமும் நீங்கள் வழிபடும் இஷ்ட தெய்வமும் வழிபாடுகளும், நீங்கள் செய்கின்ற புண்ணியங்களும், ஜீவன்களுக்கிடத்து காட்டும் இறக்கங்களும் உங்களை அறியாமல் மேற்சொன்ன மூன்று இடங்களும், வலு அடையும், உங்களுக்கு துணையாக நின்று வழிநடத்தும். அதிஷ்டங்களை அள்ளித்தரும்.
கிரக சோதனைக்காலத்தில் ஆண்டவன் அத்தியாவசிய தேவைகளுக்கு படி அளப்பான் யோக காலத்தில் ஆசைகளை நிறைவேற்றுவான்.
*என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் ஈசன் செயல்*
ஜோதிடம் ஜோதிடர்
ஜோதிடம் மூலம் கர்ம வினை பலன்களை மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும, ஜோதிடர்கள் மூலம் கர்ம வினை பலன்களால் நாம் பெறக்கூடிய நல்லவை கெட்டவைகளை அறிந்து கொள்ள முடியும் கர்ம வினை அடிகளை ஜோதிடர்கள் குருக்கே நின்று தடுக்க முடியாது ஒவ்வொருவரும் பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ப சுப அசுப பலன்களின் கால அளவுகள் நடைபெறும் காலம் மாறுபடும் நான் மிக நல்லவன் எனக்கு ஏன் இப்படி சோதனை என்றால் 5 ம் 9ம், ஒன்பதுக்கு 11 ஆம் இடமும், உனக்கு 11 ஆம் இடமும் என்ன சொல்கிறதோ அந்த வினைகளை அனுபவித்தே தீரவேண்டும்.
ஜோதிடம் பார்த்த உடன் பலன் தந்துவிடாது
ஜோதிடம் பார்த்த உடன் பலன் தந்துவிடாது ஜோதிடர் பார்த்த உடன் பாவம் தீர்த்து விடாது புண்ணியம் செய்திருக்கவேண்டும் மகான்களை தரிசித்து சரனாகதி அடைந்து வாருங்கள் உங்கள் கர்ம வினை கணக்குகளை அவர் பெற்றுக்கொண்டு உங்களுக்கு விமோசனம் தருவார்கள்.
உங்கள் கர்ம வினைகள் அனைத்தும் ராகு கேதுக்களிடம் ஒப்படைக்கு பட்டு பிறப்பு ஏற்படுகின்றது ராகு கேது என்பது கர்ம கணக்கு தெரிந்த மாயை கண்ணுக்கு புலப்படாத ஒன்று
எதை கொடுக்க வேண்டும் என்பதை ராகு பகவான் தடையின்றி கொடுத்துவருவார். எதை தடுக்க வேண்டுமோ அதை முறையாக கேது தடுத்துவருவார். எண்ணங்கள் ஆசைகள் மோகங்கள் போகங்கள் அலைமோதும்
இளமை காலத்தை ராகு பகவான் ஆட்சி செய்வார்கள் ஆசைகளை அதிகரித்து எண்ணங்களை அதிகரித்து செயல்களை அதிகரித்து மோகங்கள் போகங்களை அதிகரித்து எல்லாவற்றையும் பரந்து விரிந்து செய்யவைப்பார்.
அந்திம காலத்தை கேது பகவான் ஆட்சி செய்வார் எல்லாவற்றையும் சுருக்கி விடுவார் உடல் சுருங்கி தோல் சுருங்கி ரத்தம் சுன்டி ஆசைகளை சுருக்கி பார்வைகளை சுருக்கி உணவை சுருக்கி செயலை சுருக்கி மோகத்தை சுருக்கி வாழ்க்கை தத்துவ ஞானத்தை உணர்த்தி காட்டி சுருக்கிவிடுவார்.
எனவே சுருக்கி வாழ்ந்தால் ஆயுள் கூடும் எனவே புற ஆசைகளை குறைத்து அகத்தை நோக்குங்கள் ஆயுள் கூடும்.
வாழ்க நலமுடன்
0 Comments