திருச்சிற்றம்பலம் -தமிழ் ஜோதிடம் -ஜோதிட பதில்
மனது எப்போதும் இறை சிந்தனையில் இருக்கவேண்டும், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் இது ஒரு வழியான வழிபாடுகள் கூட இதில் பல ரகசியங்கள் அடங்கி உள்ளது.
நமக்கு தெரிந்ததை நாம் நன்றாக தெரிந்து கொண்டால் போதுமானது, சாதம் இருந்தால் போதும் நீர் ஊற்றி வெங்காயம் ஊருகாய் அல்லது தேங்காய் கீற்றை தொட்டு கொண்டு சாப்பிடலாம் பசி ஆறிவிடும், கொஞ்சம் வசதி இருந்தால் ஏதாவது ஒரு குழம்பு அல்லது சாம்பார் வைத்துகொண்டும் சாப்பிடலாம் இன்னும் வசதியாக இருந்தால் சாதம் சாம்பார் வத்தல் குழும்பு ரசம் மோர் அப்பளம் வடை பாயாசம் என வசதிகளுக்கு ஏற்ப நாம் உணவை தாயாரித்து சாப்பிடலாம் ஆனால் இதில் முக்கியமானது என்ன என்றால் பசி என்ற ஒன்றுக்கான தீர்வதற்கான தீர்வு ஆகும். ஆண்டவன் தினமும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான படிகளை அளந்துகொண்டுதான இருக்கிறான்.
ஜோதிடம் மூலம் நமக்கு உண்டான பிரச்சனைகளை கண்டு பிடிக்க முடியுமா? அந்த பிரச்சனைகள் எந்தக்காலம் வரை நீடிக்கும? நமக்கு எப்போது நல்லகாலம் ஆரம்பம் ஆகும்? திருமணம் எப்போது? எப்போது வேலை கிடைக்கும்? வியாதி குனமாகுமா? குழந்தை பாக்கியம் உண்டா? எப்போது கிடைக்கும். இது போன்ற பொதுவான கேள்விகளுக்கு ஒரு ஜாதகத்தை பார்த்து பதில் கூறினாலும் போதும். வாழ்க்கைக்கு தேவையான கேள்விகளுக்கு பதில் தெரிந்துவிடும். இதுதான் ஜோதிடர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது
நமக்கு எது தேவையோ அதை எல்லாம் நாம்முன்னோர்கள் சொல்லிகொடுத்து சென்றுவிட்டார்கள். தேவை இல்லாதவற்றை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பலன் சொல்ல தேவையான முறைகளையும் அதற்கு என்ன கற்றுக்கொள்ள வேண்டுமோ அதை மிகத்தெளிவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள. ஜோதிடத்திற்கு தேவை இல்லாத ஆணிகளை தேடி ----- வேண்டாம். நமக்கு தேவையும் இல்லை.
நாம் கற்றுக்கொள்ளவேண்டியது எது? கற்றுக்கொள்ள வேண்டாது எது? அது எந்த முறையில் யாரிடம் கிடைக்கிறது? என்பதை ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.
சில ஆசிரியர்கள் ஜாதக ரீதியாக ஏற்படும் பிரச்சனகளை எவ்வாறு சமாளிக்கவேண்டும் என்பதை தெளிவாக சொல்லித்தருகிறார்கள் நல்லவர்களை தேடி பலன் பெறுங்கள்.
வாக்கிய பஞ்சாங்கம்படி தசா, புத்தி , அந்தரம் (சித்திரம்)- ஜோதிட விளக்கம்
(நம்பிக்கை உள்ளோர்களுக்கு மட்டும்)
ஓம் இடைக்காடர் சித்தர் சுவாமிகள் திருவடி போற்றி !
குருவடிசரணம் திருவடிசரணம்
வாக்கியம் பஞ்சாங்கம் சிறப்பா? திருக்கணிதம் பஞ்சாங்கம் சிறப்பா? என்ற விவாதம் வேண்டாம், அவர் அவர் அனுபவத்தில் எது சிறப்பாக செயல்படுகிறதோ, அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள், நான் எழுதும் அனைத்து பதிவுகளும் அனுபவ பதிவுகள், பல ஜாதகங்களை ஆராய்ச்சி செய்துதான் எழுதுகிறேன், சில முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது அந்தரத்தை உபயோகித்து வெற்றி கண்டுள்ளோம், எல்லாவற்றையும் விட குருவருளும் திருவருளும், வாக்கு பலிதம்தான் முக்கியம், வாக்குபலிதம் உள்ளவர்களுக்கும், புன்னியவான்களுக்கும் சொன்னது பலிக்கும், கர்ம வினைகளுக்கு விமோசனம் அளிப்பார்கள்.
பொதுவாக ஒன்பது கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் தசையாக வரும், தசையின் உட்பிரிவு புத்தி, அந்த தசையில் அந்த கிரகத்தின் புத்தி முதலில் வரும். அடுத்து வரிசைப்படி மற்ற எட்டு புத்திகளும் நடக்கும். ஒரு புத்தியில் ஒன்பது கிரகங்களின் உட்பிரிவு நடக்கும், அதற்கு அந்தரம் என்று பெயர். ஆற்காடு பஞ்சாங்கத்திலும், பாம்பு பஞ்சாங்கத்திலும் தசா பத்தி அட்டவனையில் பார்க்கலாம், சிலர் அந்தரத்தை சித்திரம் என்று கூறுவார்கள், குறிப்பாக இராமநாதபுரம் பஞ்சாங்கத்தில் அந்த புத்தியின் உட்பிரிவை சித்திரம் என்று குறித்திருக்கும், அந்தரம் அல்லது சித்திரத்தின் உட்பிரிவு சூட்சமம், சூட்சமத்தின் உட்பிரிவு பிராணன் இப்படி தசை, புத்தி, சித்திரம் (அந்தரம்) சூட்சமம், பிராணன் என்று ஐந்து பிரிவுகள் உண்டு, அதாவது ஒரு வருடத்தில்12 மாதங்கள், ஒரு மாதத்தில் 30 நாட்கள், ஒரு நாளில் 24 மணி நேரம், ஒரு மணியில் 60 நிமிடம் என்று இருப்பது இல்லையா?
உதரணமாக சந்திர தசை 10 வருடம், இதில் 10 மாதம் முதலில் சந்திர புக்தியும், பிறகு செவ்வாய் புத்தி, ராகு புத்தி, குரு புத்தி என்று வரிசைப்படி வரும், சந்திர புக்தி 10 மாதத்தில் சந்திரன் அந்தரம், அல்லது சித்திரம் 25 நாள். அடுத்து செவ்வாய் அந்தரம் 17 நாள்,30 நாழிகை. பிறகு ராகு அந்தரம் ஒரு மாதம்,15 நாள் என்று நடக்கும். ஒன்பது அந்தரங்களும் சேர்ந்து சந்திர புக்தி 10 மாதம் ஆகும். சந்திர அந்தரம் 25 நாள். இதன் உட்பிரிவு சூட்சமம். சந்திர தசையில் சந்திர புக்தியில் சந்திர அந்தரத்தில் (சித்திரத்தில்) சந்திர சூட்சுமம் 2 நாள்,5 நாழிகை வரும். தொடர்ந்து செவ்வாய் சூட்சுமம், ராகு சூட்சுமம் என்று சந்திரஅந்தரம் 25 நாள் முடியும். இந்த சூட்சுமத்தின் உட் பிரிவு பிராணன். இது நாழிகை, வினாடி கணக்கில் அமையும். ஆனால் சரியான தசாபுக்தி இருந்தால்தான் இந்த அந்தரம் வேலை செய்யும். வாக்கியப் பஞ்சாங்க ஜாதகதுக்கும் திருக்கணிதப் பஞ்சாங்க ஜாதகத்துக்கும் தசா இருப்பு வித்தியாசப்படும். சமயத்தில் நட்சத்திரம் மாறிவிடும். அப்படிப்பட்ட ஜாதகத்துக்கு அந்தரம், சூட்சுமம் எல்லாம் சரியாக இருக்காது. வித்தியாசம் ஏற்படும். ஜனன ஜாதகத்தில் இருப்பு தசை வித்தியாசம் ஒரு வருடத்துக்கு மேல் வந்தால் அந்தரம்கூட (சித்திரம்) மாறிவிடும். எனவே தசா-புக்தி இரண்டையும் அனுசரித்தால் போதும். கோட்ச்சாரம் கடுமையாக இருந்தால்-அட்டமச்சனி, ஏழரைச்சனி என்று நடந்தால் தசா புக்தியே வேலை செய்யாது. இப்படி ஜாதகத்தில் பல நுட்பங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக குருவருளும் திருவருளும் வாக்குப் பலிதமும் இருந்தால் தசா புக்தி வித்தியாசம் இருந்தாலும் ஜோதிடப் பலன் பலிக்கும்.
அசுவினி நட்சத்திர பலன்கள் (பொது பலன்)
குருவடிசரணம் திருவடிசரணம்
ஓம் நமசிவாய எல்லாம் சிவமயம்
அசுவினி நட்சத்திரம் மேச ராசியில் நான்கு பாதங்களையும் கொண்டுள்ளது, இந்த நட்சத்திரம் கேது பகவானின் நட்சத்திரம் ஆகும், மருத்துவ குணம் உடைய நட்சத்திரம் என்று சாத்திரங்கள் கூறும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வைத்தியராக (டாக்டர்) பணிபுரியவர்களாக இருப்பார்கள் டாக்டர் பட்டம் பெறாதவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர் கையால், தண்ணீரே, மருந்தாகி சாப்பிட்டவற்கு நன்மை செய்யும்; நோய் தீர்க்கும் என்பது அனுபவக் கணிப்பு ஆகவே, அசுவினியில் பிறந்தவர்களை மருத்துவர் என்று சொல்வது பொருத்தம் ஆகும். இவர்கள் பிறந்து 25 வயதுக்கு மேல் அந்திமக் காலம் வரை நல்ல பெயரோடும், புகழோடும் வாழ்வார்கள். சிறுத்த கண்களும், பருத்தத் தோள்களும் இந்த நட்சத்திரத்தின் சிறப்பு அம்சம். எல்லோர்க்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கம் உடையவர்கள். பிறர் சொல்லும் சொல்லையும் செயலையும் மதிக்கத் தெரிந்தவர்கள் சமயம் வரும்போது தனது உதவியை மற்றவர்க்கு தவறாமல் செய்யும் இயல்பு உடையவர்கள் அரசு உத்தியோகஸ்தர் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பெரியோர்களால் பராட்டப்படுவார்கள். பற்கள் மட்டும் ஈறுகளில் குறைபாடுகள் காணப்படும்.
எவரையும் எளிதில் நட்பு கொண்டு தன்னோடு இணைத்து கொள்வதில் மிகவும் வல்லவர்கள் சிறு வயதில் இவரை யோகம் இல்லாதவர் எனக் கூறுவார்கள் ஆனால் அவர்களே பிற்காலத்தில் இவரைப்போல் யோகசாலி யாருமில்லை எனப் பாராட்டப்படுவார்கள் எதிர்காலப் பலனை இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலிகளாவார்கள் இந்த அளவிற்கு பிற்காலத்தில் உயர்ந்த நிலையைக் கொடுக்கும் அசுவினி நட்ச்சதிரத்தார்க்கு புத்திர பாக்கியத்திற்கு குறையில்லை ஒருசிலர்க்குபணக்கார மனைவி இயற்கையாகவே அமைவர் ஒருசிலர்க்கு திருமணமானபின் வசதி வாய்ப்புகள் வந்து சேரும் அமைதியான குடும்பம், ஆனந்தமான வாழ்வு அசுவினிக்கு உண்டு.
இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து கொள்ள தனி நபர் ஜாதகம் பார்த்து அல்லது குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஓம் நமசிவாய எல்லாம் சிவமயம்
0 Comments