Ticker

6/recent/ticker-posts

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம் -Tamil Astrlogy ஜோதிட பதில்

ஆண் ஜாதகத்தில் சுக்கிலத்தை  (விந்துவை) குறிக்கும் கிரகம் சுக்கிரன் 
பெண் ஜாதகத்தில் கரு முட்டையை 
குறிக்கும் கிரகம் 
சுக்கிரன் ஆகும் 
சூரியன் -நெருப்பு கிரகம் 
சந்திரன் -நீர் கிரகம் 
ஆண் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு குழந்தை பாக்கியத்தை தடுக்கும் தாமதப்படுத்தும் 

பெண் ஜாதகத்தில் சுக்கிரன் சந்திரன் இணைவு குழந்தை பாக்கியத்தை தடுக்கும் கரு கலைதலை ஏற்படுத்தும் அல்லது  தாமதப்படுத்தும் 

அவர்அவர்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்களை பொறுத்து குழந்தை பாக்கியம் உண்டாகிறது.

சுக்கிரன் விந்துஉயிர் அணுக்கள்கருமுட்டை
சூரியன் சுக்கிரன் சந்திரன் இவர்கள் பகைவர்கள் ஆவார்கள்.
சூரியன் நெருப்பு கிரகம்
சந்திரன் நீர் கிரகம் 
ஜீவன் குரு ஜாதகன்
நெருப்புடன் விந்து உயிர் அணுக்கள் சேர்ந்தால்உயிர் அணுக்கள் அழிந்து விடும்அதுபோல சுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்தாலும் சுக்கிலம் நீர்த்து போகிவிடும்அதுபோல பெண்களுக்கு கர்ப பையில் கோளாறு ஏற்படும் கருமுட்டை அழிந்து போகும் கர்ப பையில் கரு தங்காது.
ராகு கேதுக்கள் தடை தாமதம் அழிவை உண்டு செய்யும்அதாவது சுக்கிரன் சூரியனுக்கு திரிகோணங்களில் ராகு இருந்தால் கருவை பாக்கித்தை அழிக்க செய்யும்.
சுக்கிரன் சூரியனுக்கு திரிகோணங்களில் கேது இருந்தால் தடைகளை உண்டு செய்யும்.
சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் விந்து விரயம் ஏற்படாமல் ஜீவன் பாக்கியம் நன்றாக இருக்கும் குறிப்பாக ஜீவன் நன்றாக வாழும்.

5 ஆம் இடம் என்பது

மனசு, இதயம், மகிழ்ச்சி, எண்ணம், திட்டம், குழந்தை பாக்கியம்

ஆசைகள், பூர்வ புண்ணிய ஸ்தானமும் இந்த இடம்தான். 

உன்மனாதால் நினைக்கும் எண்ணங்கள் நல்லவைகளாக இருக்கவேண்டும் அவைகள் பாவங்களாக மாறக்கூடாது உன் மன எண்ணங்கள் வக்கரத்தனமாகவும் வஞ்சிக்கும் நினைவில் இருந்தால், நீ எத்தனை புண்ணியங்கள் செய்தாலும் அன்னதானங்கள் செய்தாலும் எத்தனை மகான்களை தரிசித்தாலும் உன் ஜாதக யோகங்கள் வேலை செய்யாது தரித்தர யோகத்தில் நிர்கதியாய் நிற்பாய்.
பாவகணக்கில் வரவு வைக்கப்பட்டு கோட்சார ரூபத்தில் வாடவைத்து வதங்க வைத்து உன்னை கொண்று விடும்.
ஐந்திற்கு ஐந்தாம் இடம் என்பது பூர்வ ஜென்ம புண்ணியஸ்தானம் தகப்பனார் அதற்கு ஐந்தாம் இடம் உன் பிறப்பு லக்கனம் அல்லது ஜீவன் ஆகும்
நான்கிற்கு ஐந்தாம் இடம் எட்டாம் இடம் பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு விரயம்தான் மரணம்.
மேலும் சூட்சமம் நோக்க நோக்க புரியும் தெரியும் மற்ற பதிவில் பார்க்கலாம் 

கர்ப்பிணி பெண்களுக்கு கவனம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சிறுநீர், மலம் அடக்கி வைக்க கூடாது. சரியான நேரத்தில் கழிவுகள் வெளியேற்ற வேண்டும்,  நீங்கள் அடக்கி வைத்தால் பிறக்கும் குழந்தைகள் புத்தி மந்தம், கண் பார்வை குறைபாடு, வாய் பேச முடியாமல் போகிறது எனவே சிறுநீர் மலத்தை அடக்காமல் கழித்துவிடவேண்டும்.


இளம் வயது திருமணம் எந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு ஏற்படும்?

ஆண் ஜாதக அமைப்பு எப்படி இருக்கவேண்டும்?

ஒரு ஆண் ஜாதகத்தில் குருவுடன் ஒரே ராசியிலோ அல்லது அதற்கு அடுத்த ராசியிலோ சுக்கிரன் இருக்குமானால், ஜாதகருக்கு இளம் வயதில் திருமணம் நடப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம், 

பெண் ஜாதக அமைப்பு எப்படி இருக்கவேண்டும்?

பெண் ஜாதகத்தில் சுக்கிரனுடன் ஒரே ராசியிலோ அல்லது அதற்கு அடுத்த ராசியிலோ செவ்வாய் இருக்குமானால், ஜாதகிக்கு இளம் வயதில் திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.ஆனால் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் பெறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது 

கர்ம வினைகளின் வீரியம் -2

குருவே சரனம் குருவடிச்சரணம்

உங்கள் சுய ஜாதகத்தில் யோகங்கள் இல்லாவிட்டாலும் உங்களை ஆயுள் வரை அழைத்துச்செல்லும் கோட்சார யோகங்கள் உங்களை வாழ வைக்கும், உங்கள் ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் வருகின்ற கோட்சார அவ யோகங்கள் உங்களை நசுக்கிவிடும், சமயத்தில் கோட்சாரமே கொன்று விடும். இவைகள் எல்லாம் கர்ம வினைகளை பொருத்து சுகமும் வலியும் வேதனைகளும் மாறுபடும்.

உங்களை கர்ம வினைகளை கரைக்கும் தன்மை சித்தர்களுக்கும் மகான்களுக்கு மட்டும்தான் உண்டு, சித்தர்களின் ஜீவசாமதிக்கு சென்று சரனடையுங்கள்.

பாக்கியம் நன்றாக இருந்தால்தான் அனைத்தும் தடை இல்லாமல் கிட்டும், பாக்கியம் பலம் இல்லாதவன் எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆகிறான், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது, உழைப்பு அதிகம் பலன்கள் குறைவு, பேருக்கு வாழந்து வருவான், இருந்தும் இல்லாத நிலை, வாழ்க்கை கற்பனையில் முடிந்து விடும், அதிஷ்டம் இல்லாதவன் ஆகிறான், பாக்கியத்தை வலுப்படுத்தி கொள்ளுங்கள்.

பாக்கியம் என்பது ஒன்பதாம் இடம்

(ஐந்து ஒன்பதுக்குரியவர் பாபர் அசுபர் ஆயின் மிஞ்சும் சுப பலனே, லக்னாதிபதி, பாக்கியாதிபதி, பஞ்சமாதிபதி யோகம் செய்வார் பாதகம் செய்மாட்டார்.)

ஒரு ஜாதகத்தில் யோகமான கிரக சேர்க்கைகள் இருந்தால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் எந்த குறையில்லாமல் வாழ முடியும், தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை மனைவி மூலம் விருத்தி, குழந்தைகள் மூலம் செல்வ  சேர்க்கை, பணி ஆட்கள் மூலம் நன்மைகள் வாங்கிய சொத்தின் மூலம் மதிப்புகள் படித்த கல்வியின் மூலம் சிறப்பு ஏற்படும்.

அப்படி இல்லை என்றால் கோட்சரத்தில் உங்களுக்கு எப்போது எல்லாம் கிரக இணைவு ஏற்படுகிறதோ அப்போது மட்டும் சொற்ப யோகங்களை மட்டுமே அனுபவிக்க முடியும் நீ எத்தனை முறை யாரிடம் ஜோதிடம் பார்த்தாலும் உன் பலன்கள் மாறாது மாறாக மகான்கள் சித்தர்களை உண்மையாக சரன் அடையுங்கள் உங்கள் பூட்டை திறந்து விடுவார்கள் நம்பிக்கையோடு.

சில சமயம் கோட்சரம் சித்தம் பேதளித்து வீட்டை விட்டு துரத்தி யாசகம் எடுக்க வைக்கும் சில சமயம் விஷம் விபத்து வெடி விபத்து ஆயுத மரணத்தை உண்டு பண்ணும் சில சமயம் தகாத உறவு கொள்ள தூண்டி  உறவு முறை பாராமல் பெண்கள் மேல் சபலம் கொள்ள வைத்து அவமானபடுத்தி தெருவில் நிற்க வைக்கும்.

இது நல்லோர்க்கல்ல நயவஞ்ஞோர்க்கிதுவே

அட்டமாதிபதி தசை பலன்கள் என்ன செய்யும்?

அட்டமாதிபதி தசை உனக்கு எதற்கு வேலை பிடிங்கிவிடுவான் , ஒரு மூலையிலே உறங்க வைத்து வேடிக்கை பார்பான் உற்றார் உறவினர் கலகம் மூட்டி பிரித்து வைப்பான், செய்யாத காரியத்திற்கு  தண்டனைக்கு ஆளாக்குவான், மனை மக்களை விட்டு பிரியவைப்பான்,  உற்ற நண்பருக்கே உளைவைத்து பிரிந்துடுவான், ஒருவன் களத்திரத்தை உன்னத போகம் செய்வான், காமத்தை கூட்டி கேவலத்திற்கு ஆளாகுவான், ஊரார் பஞ்சயாத்தில் உன்னை ஒருநாள் கைகட்டி நிற்க வைப்பான்  உறவிலே மரணத்தை உண்டுபன்னுவான், தனிமையில் அழவைத்து வேடிக்கை பார்ப்பான்  ஒரு மாய தோற்றத்தை மனதிலே உண்டு பன்னி ஒப்புக்கு உதவாத வேலை செய்யச்சொல்லி காலத்தை வீனாக்குவான்,  ஒரு வேலைக்கு ஏங்க வைப்பான், கர்ம வினை கணக்குகளை சரிபார்த்து சந்தியலே நிற்க வைத்து உன்பிறப்பை உணர்த்திடுவான்.

இது நல்லோர்க்கல்ல நயவஞ்ஞோர்க்கிதுவே. “ மதி கதி பார்க்கவேண்டும்”

ஈசனே என் அப்பனே என் கனவிலும் பாவங்கொள்ள செய்யாதே

Post a Comment

0 Comments