Ticker

6/recent/ticker-posts

கிரக பெயர்ச்சி ஆகும்போது கோட்ச்சாரம் எப்படி வேலை செய்கிறது? R

கோட்ச்சாரம்

உலக மக்கள் அனைவருக்கும் எந்த அசாம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க அனைவரும் பிராத்தனை செய்வோம். நான் ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகள் போட்டு    இருக்கிறேன் பதிவிடும்போது எல்லாம் இந்த நிகழ்வுகள் நடக்க கூடாது என்று எண்ணி கொண்டே தான் பதிவிடுகிறேன். கிரக நிலைகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் யார் தடுத்தாலும் நிற்காது.

ஜோதிடத்தை பல வழிகளில் தாழ்த்தி பழித்து எழுதி வருகிறார்கள் ஆரம்பத்தில் கண்டு கொண்டு பதிவுகளில் சுட்டி காட்டி எழுதி வந்தேன் இப்போது எல்லாம் கண்டுகொள்வதில்லை அது அவசியம் இல்லை என்று நினைத்து விட்டேன்.

குரு -உயிர் ஜீவன் மத குருக்கள் தெய்வ ஆலயங்கள் ஞானம் கோவில் நீதிபதி மதபோதகன் அமைச்சர் நீதி நேர்மை

கேது -மருத்துவமனை கோவில் சர்ச் தர்ம ஸ்தானங்கள், நெருக்கடிகள், அவமாணங்கள்.

ராகு -விபத்து ரசாயனம் புகை கோபுரம் பிணம் சமூக விரோதிகள் விஷம் வெடிமருந்து.

செவ்வாய் -காவல்துறை ராணுவம் பூமி கூர்மையான ஆயுதங்கள் ரத்தம் கற்கள் துப்பாக்கி குண்டு வெடிப்பு பல்

சூரியன் - அரசு அரசியல் அதிகாரம் பிரதமர் ஆளுநர் முதல்வர் நிர்வாக அதிகாரி .

இணைவுகள்- குரு சூரியன் கேது அரசு அரசியல் குழப்பங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும், எடுக்கின்ற முடிவுகள் தவறாக அமைந்துவிடும். செவ்வாய் ராகு அதற்கு கேது வீடுகொடுத்தவர் மிதுனம் கேளிக்கை விடுதிகளின் அம்பலங்கள் அம்பலம் ஆகும் காவல் ராணுவம் துறை துறைசார்ந்த உறவுகளுக்கு நெருக்கடிகளுக்கு குழப்பங்கள் அவமாணங்கள் ஏற்படும்.

கோட்சாரத்தில் சனி கேது குரு சூரியன் செவ்வாய் ராகு இணைவுகள் ஏற்படுகிறது இதன் மூலம் பலவிதமான மாற்றங்கள் பிரச்சினைகள் குழப்பங்கள் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் நில நடுக்கம் நில சரிவு  ஆலயங்கள் தீ விபத்து சேதங்கள் ஏற்படும் ஆன்மீக வாதிகள் தாக்கபடுதல் மத கலவரங்கள் வெடி விபத்துகள் பல இடங்களில் கூட்டு மரணங்கள் ஏற்படும். அரசு அரசியல் அதிகாரம் ஆளுநர் மாற்றங்கள் குழப்பங்கள் ஏற்படும். சில முடிவுகள் குழப்பங்களையும் குளறுபடிகளையும் ஏற்படுத்தும் பொது கூட்டங்கள் திருமணம் கூடங்கள் சிறைச்சாலை எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது காவல்துறை துறை சார்ந்த வர்களுக்கு அவமாணங்கள் நெருக்கடிகள் ஏற்படும் ராணுவம் பூமி கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் ரத்தம் கற்கள் கொண்டு தாக்குதல்  துப்பாக்கி குண்டு வெடிப்பு  வாயு கசிவு மரணங்கள் ஏற்படும் வெடிகுண்டு மரணங்கள் ஏற்படும் ஊரடங்கு உத்தரவு தீவிரவாத அச்சுறுத்தல்  காட்டு தீ விபத்து ஏற்படலாம் சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படும் சர்வாதிகாரம்  தலை தூக்கும் சிறப்பு வாய்ந்த பழமையான இடங்கள் சேதமடையக்கூடும்.

கடும் கூட்டு மரணங்கள் ஏற்படாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.

கிரக பெயர்ச்சி ஆகும்போது என்ன நடக்கிறது?

பொதுவாக நல்ல கிரகமோ கெட்ட கிரகமோ பெயர்ச்சி ஆகும்போது ஒரு சில கால அளவிற்கு முன்னாலோ அல்லது நடந்து கொண்டிருக்கும்போது கண்டிப்பாக ஒரு சலனத்தை ஏற்படுத்தும் ஆதாவது ஒரு குட்டையில் அதிகமாக தண்ணீர் இருந்தால் புது தண்ணீர் வரும்போது குழம்பித்தான் தெளியும், அதுபோல அந்த குட்டையில் தண்ணி இல்லாவிட்டாலும் புது தண்ணீர் வந்து விழும்போது குழம்பித்தான் தெளியும் அதுபோல இந்த ராகு கேது பெயர்ச்சிகள் பொதுவாக எல்லோருடைய குடும்பத்தையும் ஒரு குழப்ப குழுப்பி இருக்கும். குறிப்பாக தனுசு குரு கும்ப குரு மிதுன குரு துலா குரு பெண்ணாக இருந்தால் தனுசு கும்ப மிதுன துலா சுக்கிரன் உயிர் காரகத்தை பயமுறுத்தும் அச்சுறுத்தும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை உண்டு செய்யும் அல்லது செய்திருக்கும் குறிப்பாக பங்காளி சண்டைகளை தூண்டி இருக்கும்.

தேவை இல்லாமல் சன்டை போடச்செய்யும்

அதுபோல தனுசில் சனி துலாம் சனி சிம்ம சனி அதுபோல தனுசில் செவ்வாய் மேச செவ்வாய் மிதுன செவ்வாய் சிம்ம செவ்வாய்  துலாத்தில் செவ்வாய் கும்ப செவ்வாய் உள்ளவர்கள் குடும்பத்தில் கலகம் தகராறு ரத்த சொந்தத்தில் பகை வாய்தகறாறு கலவரத்தில் முடியும். தயவு செய்து அடக்கி வாசிக்கவும.

கோட்சாரமும் தசாக்களும் இணையும் போது ஏற்படும் பலண்கள்!

குறிப்பாக ராகுதசை செவ்வாய்தசை நடப்பவர்கள் இவர்களுக்கு ஏழரை அட்டமம் அர்த்தாஷ்டம்ம் கன்டச்சனி நடந்தாலும் கவனமாக இருக்கவும். சிலரை பீஸ் பிடிங்கி இருக்கும் சிலர் பீஸ் போயிருக்கும்.

பணி செய்யும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை காணமல் போதல் பரிதவித்தல் அவமானம் கெட்டபெயர் வேலை இழப்பு போன்ற நிகழ்வுகளை செய்து காட்டும். உங்களுக்கு தெரியாமல் தொழிலை இழக்கும் தருவாய்க்கு அழைத்து செல்லும்.

சில அதி புத்திசாலிகள் இந்த பலன் பொதுபலன் எல்லாருக்கும் நிகழும் என்று கூறுவார்கள் அவர்களுக்கு வலிவந்தால்தான் தெரியும் வலியின் வேதனை.

தெரிந்துகொள்ளுங்கள்

கெட்டவன் எப்போதும் கெட்டவனாகவே இருப்பதில்லை நல்லவர்கள் எப்போது நல்லவர்களாகவே இருப்பதில்லை  கெட்டவன் நல்லவனாக மாறலாம் நல்லவன் கெட்டவனாக மாறலாம் இவைகள் எல்லாம் காலத்தின் கோலங்கள் பாவகிகரங்கள்  மறைவிடஸ்தானத்தில் இருப்பது யோகம்  அதுபோல குரு பகவான் ராசி அதிபதி லக்கனாதிபதி அவர்களின் பார்வைக்கு மகத்துவங்கள் அதிபதி அதுபோல ஸ்தானதிபதி  ஸ்தானத்தை பார்பதும் ஒருவகை யோகமே குருவருளும் திருவருளும்  இருந்து விட்டால் வாழ்க்கையில் எல்லாமே யோகமாக அமைந்துவிடும் தேவைகள் பூர்த்தி அடையும் நினைத்ததை நிறைவேறும் முயற்சிகள் வெற்றிபெறும் எண்ணங்கள் ஈடேரும் முக்கியமாக  வினைகள் விளகும் சாப தோஷங்கள் மறைந்து போகும் (தோஷங்கள் பொதுவாக காரகன் பாவகத்தில் இருந்தால் காரகதோஷம்) பிதுர்காரகன் சூரியன் பிதுரஸ்தானத்தில் இருந்தால் பிதுர்தோஷம் களஸ்திரகாரகன் சுக்கிரன் களஸ்த்திர ஸ்தானத்தில் இருந்தால் களஸ்த்திர தோஷம் சகோதரகாரகன் சகோதர ஸ்தானத்தில் இருந்தால் சகோதர தோஷம் மாத்ருகாரகன் மாத்ருஸ்தானத்தில் இருந்தால் மாத்ருகா தோஷம் அதுபோல மாதுல காரகன் புதன் ( மாமன்) மாதுல ஸ்தானத்தில் மாதுலதோஷம் ஆனால் ஆயுள்காரகன் ஆயுள்ஸ்தானத்தில் இருந்தால் ஆயுள் தீர்க்கம். ஜோதிடம் பயிலுகின்ற மாணவர்களுக்காக எழுதப்பட்டது.

காரணமே தெரியாமல் முடிவு எடுப்பது இப்படியாக இருக்குமோ அப்படியாக இருக்குமோ என்ற தவறான எண்ணத்தில் இருப்பது காரணமேதெரியாமல் குழம்புவது குழப்புவது மனம் எப்போதும் சஞ்சலத்தில் இருப்பது ஸ்திரமான முடிவுகள் எடுக்கமுடியாமல் தினறுவது தெரிந்த தொழிலை விட்டு விட்டு தெரியாத தொழிலை தொடங்குவது தி எல்லாம் ஏழரையின் ஆட்டங்கள் எந்த புதியதொழிலை தொட்டாலும் மனம் ஸ்திரம் இல்லாத நேரத்தில் நீ எந்த தொழிலை தொட்டாலும் உன்னால் விளங்க வைக்க முடியாது எல்லாம் நட்டத்தில் முடியும் நீ ஒரு கணக்குபோட்டு இருங்குவாய் கர்ம வினை கழிக்கும் காலம் அது ஒரு கணக்கோடு உன்னை ஓரங்கட்டிவிடும் பார்ப்பவர்கள் எல்லாம் உன் மனதிற்கு பாவியாக தெரிவார்கள்.

இவர் நம்மிடம் இருக்கிறார் இவரும் நம் வியாபாரத்திற்கு வருவார் என்று நினைத்தால் இருக்கட்டும் அண்ணா எனக்கு கடுமையான வேலை இருக்கு நான் முடிந்ததும் வருகிறேன் என்று கூறி தன்நடையை கட்டுவார்.

ஒவ்வொரு பதிவிகளிலும் விளக்கங்கள் எழுதுகிறோம் படித்து உணர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் ஜாதகம் பார்க்க வந்தால் உங்களை வினைகளை கண்டுகொள்ள வருகிறாய் ஜோதிடருக்கு எவ்வளவு பாவம் என்பது உனக்கு தெரியாது அவர் தட்சனை கேட்டால. இந்த குழுவில் காசு கொடுத்தால்தான் ஜோதிடம் பார்ப்பார்கள் என்று பதிவிடுகிறீர்கள் ஒவ்வோரு ஜோதிடரும் எத்தனை நபர்களின் கர்மவினைகளை சுமந்துகொண்டு திரிகிறார்கள் தெரியுமா நீங்கள் எல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் ஜோதிடத்தை கற்றுக்கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிடாலம் உலகம் புகழ்பெறலாம் என்று நினைவில் இருந்தால் ஒதுங்கிவிடுங்கள் இது ஒரு மாயை கர்ம வினைகளை சுமந்துகொண்டு அலையவேண்டும். அவர்வர்கள் படும்பாடு அவர்களுக்குத்தான் தெரியும் 

எல்லா குழுமத்திலும் பின்டங்கள் புலம்பும் புலம்பல்களை பாருங்கள் எத்தனை போட்டிகள் சன்டைகள் சச்சரவுகள் எல்லாம் கர்ம வினைகளின் தான்டவம்.

சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள் ✍ -ஜோதிட பதில்

Post a Comment

0 Comments