ராகு, கேது கிரகங்கள் போல, குளிகை, மாந்தி என்பவற்றையும் முன்னோர் நிழல் கிரகங்களாக வகுத்தனர். சூரியன் முதலான கிரகங்கள் ஏழிற்கும் ஏழு நாட்களின் பெயர் சூட்டினார்கள். ராகுவிற்கு தினமும் ராகு காலமாகவும், கேதுவிற்கு எமகண்ட நேரமும் ஒதுக்கப்பட்டன. குளிகைக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது, நல்ல செயல்கள் செய்யும் போது குளிகை காலம் பர்ர்க்கத் தேவையில்லை தாரளமாக செய்யலாம், பிதுர் (முன்னோர் வழிப்பாடு) காரியங்கள் செய்யும் போது குளிகையில் செய்ய கூடாது
குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். குளிகனுக்கு உகந்த காலமான குளிகை காலத்தினை இந்து சமய சோதிடம் வரையறை செய்துள்ளது. இதன்படி பகல் மற்றும் இரவு என இருவேளைகளிலும் குளிகை காலம் வருகிறது.
குளிகை காலத்தில் செய்யப்படுகிற காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையாகும். அதனால் நற்காரியங்களையும், சுபகாரியங்களையும் மட்டுமே இந்தக் காலத்தில் செய்கின்றார்கள்.
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது, வீடு – நகை வாங்குவது இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் செய்தால் தொடரும்.
குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்டே போகும். கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும்.
அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது. அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சனிப் பிணம் துணை தேடும் என்று சொல்வார்கள். குறிப்பாக குளிகை காலத்தில் இறந்தாலோ, குளிகை காலத்தில் ஈமச்சடங்கு செய்தாலோ அடுத்ததாக ஒரு இழப்பை சந்திக்க நேரிடும். அதனால்தான் அந்த காலகட்டத்தில் இதுபோன்றவைகளை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். பொதுவாகவே குளிகை காலத்தை தவிர்ப்பது நல்லது.
சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅
0 Comments