கோட்சார பலன்கள்🦅
கோட்சாரத்தில் செவ்வாய் ராகு இனைவிற்கு சனி பார்வை ஏற்படும் பொழுது வாகன விபத்துக்கள் அதிகரிக்கும், தீ விபத்துக்கள் ஏற்படும், துப்பாக்கி சூடுகள், வெடி விபத்துக்கள் ஏற்படும், பொது இடங்களில் கலவரங்கள் ஏற்படும், காவல் துறை மற்றும் ராணுவத்துறைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு தெளிவு ஏற்படும் பொது சொத்துக்கள் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சேதமடையக்கூடும்.
சிவாய நம ஓம்
பொதுவாக நல்ல கிரகமோ கெட்ட கிரகமோ பெயர்ச்சி ஆகும்போது ஒரு சில கால அளவிற்கு முன்னாலோ அல்லது நடந்து கொண்டிருக்கும்போது கண்டிப்பாக ஒரு சலனத்தை ஏற்படுத்தும் ஆதாவது ஒரு குட்டையில் அதிகமாக தண்ணீர் இருந்தால் புது தண்ணீர் வரும்போது குழம்பித்தான் தெளியும், அதுபோல அந்த குட்டையில் தண்ணி இல்லாவிட்டாலும் புது தண்ணீர் வந்து விழும்போது குழம்பித்தான் தெளியும் அதுபோல இந்த ராகு கேது பெயர்ச்சிகள் பொதுவாக எல்லோருடைய குடும்பத்தையும் ஒரு குழப்ப குழுப்பி இருக்கும். குறிப்பாக தனுசு குரு கும்ப குரு மிதுன குரு துலா குரு பெண்ணாக இருந்தால் தனுசு கும்ப மிதுன துலா சுக்கிரன் உயிர் காரகத்தை பயமுறுத்தும் அச்சுறுத்தும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை உண்டு செய்யும் அல்லது செய்திருக்கும் குறிப்பாக பங்காளி சண்டைகளை தூண்டி இருக்கும்.
தேவை இல்லாமல் சன்டை போடச்செய்யும்
அதுபோல தனுசில் சனி துலாம் சனி சிம்ம சனி அதுபோல தனுசில் செவ்வாய் மேச செவ்வாய் மிதுன செவ்வாய் சிம்ம செவ்வாய் துலாத்தில் செவ்வாய் கும்ப செவ்வாய் உள்ளவர்கள் குடும்பத்தில் கலகம் தகராறு ரத்த சொந்தத்தில் பகை வாய்தகறாறு கலவரத்தில் முடியும். தயவு செய்து அடக்கி வாசிக்கவும.
குறிப்பாக ராகுதசை செவ்வாய்தசை நடப்பவர்கள் இவர்களுக்கு ஏழரை அட்டமம் அர்த்தாஷ்டம்ம் கன்டச்சனி நடந்தாலும் கவனமாக இருக்கவும். சிலரை பீஸ் பிடிங்கி இருக்கும் சிலர் பீஸ் போயிருக்கும்.
பணி செய்யும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை காணமல் போதல் பரிதவித்தல் அவமானம் கெட்டபெயர் வேலை இழப்பு போன்ற நிகழ்வுகளை செய்து காட்டும். உங்களுக்கு தெரியாமல் தொழிலை இழக்கும் தருவாய்க்கு அழைத்து செல்லும்.
சில அதி புத்திசாலிகள் இந்த பலன் பொதுபலன் எல்லாருக்கும் நிகழும் என்று கூறுவார்கள் அவர்களுக்கு வலிவந்தால்தான் தெரியும் வலியின் வேதனை.
எண்ணம் போல் வாழ்வு
தூய்மையான மனம் எண்ணங்கள் கொண்டவர்களின் ஞாயமான பிராத்தனைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் அவர்களுக்கு இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் வழிகாட்டுகிறான் அவனுக்கு யாரை வணங்கவேண்டும் வழிபடவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது அவனுக்கு வழிகாட்ட நல்ல குருவை காண்பித்து அருள்கிறார்.
அவன் யோகம் இல்லை என்றாலும் அவனுக்கு யோகமான மனைவி மூலம் யோகத்தை பெறுகிறான், அவனுக்கு ஆயுள் பலம் குறைவு என்று ஜாதகத்தில் இருந்தால் கணவனுக்கு ஆயுள் பலம் அளிக்க கூடிய விதத்தில் மனைவி அமைகிறாள் அல்லது ஒரு மகனோ மகளோ பிறந்து தந்தைக்கு ஆயுள் பலத்தை கூட்டக்கூடிய அமைப்பில் பிறந்து ஆயுள் பலத்தை நீட்டிக்க படுகிறது அதுபோல செல்வ சுகங்கள் என எல்ல பலன்களும் தன்னை சார்ந்தவர்கள் மூலமாக பெற்றுக்கொள்கிறார்கள்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் ஏன் மரணம் கூட தள்ளிப்போட படுகிறது. அவனுக்கு அமைகின்ற உறவுகள் மூலம் இதற்கு பல உதாரணங்களை கூறலாம் பின் வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம் ?
சக்கரவர்த்தி கலியபெருமாள் ✍
0 Comments