Ticker

6/recent/ticker-posts

குருவின் பார்வை உங்களின் தோஷங்கள் பாவங்களை போக்கும் R

தமிழ் ஜோதிடம் -ஜோதிட பதில் Tamil Jothidam

சிவ சிவ சிவாய நம ஓம்

சுய நலக்கார நபர்களிடம் இருந்து விளகி சென்று விடுங்கள்
அவர்களால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது.
அவதார சின்னம்
உங்களுக்கு ஒவ்வாத நட்சத்திர நபர்களால் உங்களுக்கு எந்த வித அனுகூலமும் கிடைக்காது நீங்கள் அல்லது குரு தேர்ந்தெடுக்கும் நபர் அவர்களின் நட்சத்திரத்திற்கு சாதகமாக இருந்தால்தான் குருவின் பார்வை அனுகூலம் பலன்கள் எல்லாம் பழுது இல்லாமல் கிடைக்கும்.
குருவின் பார்வை உங்களின் தோஷங்கள் பாவங்களை போக்கும்.
தேவை இல்லாத இடத்தில் தேடி உங்கள் காலத்தை வீனடிக்காதீர்கள்.
சிவ சிவ சிவாய நம ஓம்

கர்மபலன் திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி ஒரு குடுபத்தில் சுபகாரியம் செய்யும்போது தான் அவன் விதி ஆரம்பம் ஆகிறது அதன் பிறகுதான் அவன் தன் தலைவிதியை கர்மாவை அனுபவிக்கிறான் அதாவது வீடு, திருமணம், வாகனம், தொழில், இடம், கல்வி, இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த நபரிடம் அறிந்து ஆரம்பியுங்கள் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்று ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க வேண்டும் தெய்வாத்தால் ஆவது திரிகோணம், முயற்சிக்கு தகுந்த பலன்கள் கேந்திரம் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே அது சில சமயங்களில் நம் கண்ணிற்கு படாமல் இருக்கலாம் கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம் அனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்தரம் இல்லை அவரவர் ஜாதக ரீதியாக கிரங்கள் மூலம் கர்மபலனை அனுபவிக்கநேரும் கர்மவினை கிரகங்களாக கட்டத்தில் அமைந்து விடுகிறது

ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடி போற்றி ஜோதிடர் என்பவர்கள் கர்ம வினை ஆலோசகர், மகான்கள் கர்ம வினை பாவங்களை கறைப்பவர்கள் ( யாரிடம் எதைப்பெற முடியுமோ அதைத்தான் பெறமுடியும் ) குருவடிசரணம் திருவடிசரணம் பொதுவாக ஜாதகம் பார்க்கவருபவர்கள் நல்ல படியாக இருக்கும் காலத்தில் வருபவதில்லை அதாவது காரு, பணம், பங்களா, வீடு, வாசல், வேலை, தொழில், உத்தியோகம், பணி ஆட்கள், மனைவி மக்கள், நல்ல சுகத்தோடு வாழும்போது யாரும் ஜோதிடரை பார்க்க வருவதில்லை, எல்லாம் போன பிறகு அல்லது இழந்த பிறகு வந்து கேட்பார்கள் நான் என்ன செய்யவேண்டும், எப்படி இழ்ந்தேன் என்று தெரியவில்லை, எதாவது பரிகாரம் இருக்கிறதா, ராசிக்கல் அணிந்து கொள்ளலாமா, அல்லது எத்தனையோ பரிகாரம் செய்து விட்டேன் ஒன்றும் வேளைக்கு ஆகவில்லை, மாற்று வழி இருக்கிறதா சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்பார்கள், எப்படி கெட்ட நேரத்தில் நல்ல நேரம் எப்போது வரும் என்று கேட்கிறிர்களோ அது போல நல்ல காலத்தில் இருக்கும் போது எனக்கு எப்போது கஷ்ட காலம் வரும் அதற்கு என்ன மாற்று வழி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு உண்டான மாற்று வழியை உருவாக்கி அதன் வழி நடந்து கொள்ளவேண்டும், ஒரு குடும்பத்தில் சுபகாரியம் செய்யும்போது தான் அவன் விதி ஆரம்பம் ஆகிறது அதன் பிறகுதான் அவன் தன் தலைவிதியை கர்மாவை அனுவபிக்கிறான் அதாவது வீடு, திருமணம், வாகனம், தொழில், இடம், கல்வி, இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த நபரிடம் அறிந்து ஆரம்பியுங்கள் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க வேண்டும். சில ஒவ்வாத தசைகள் நடந்தாலோ கோடிஸ்வரர்களையும், கீழே தள்ளி விட்டு நிர்மூலம் ஆக்கிவிடும், ஒருவருக்கு ஏழரைச்சனியோ, அட்டமச்சனியோ, அர்த்தாஷ்டமசனியோ, கண்டச்சனியோ நடக்கும்போது தசா சந்தி நடந்தால் மிகப்பெரிய இழப்புகளும், சேதங்களும், கண்டங்கள், மற்றும் மரணங்களை கூட ஏற்படுத்தும், இவைகளை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல மாற்று எற்பாடுகளை செய்து கொள்ளலாம், இறைவன் உங்கள் தேவைகளுக்கு உதவுவான் ஆசைகளுக்கு உதவ மாட்டான், கடினமான காலங்களில் ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு தேவைகளை வேண்டி பெற்றுக்கொள்ளலாம். இதையெல்லாம் படித்து விட்டு நான் உங்களை மாற்றி விடுவேன் என்று எண்ணம் வேண்டாம், நன்றாக இருக்கும்போதே யோசனைகள் செய்யவேண்டும், கஷ்டமான காலத்தில் இறைவன் கூட கண்மூடிதான் நிற்பார்கள், ஜோதிடர்களுக்கும் காலக்கணக்கு புடிபடாது. எல்லாம் அவன் செயல் செய்தார்க்கு செய்தபடி என்பார்கள். குருவே சரணம் குருவடி பாதம் பணிவோம் குரு பதம் அடைவோம்

குருவேசரணம் குருவடிசரனம் திருவடிசரனம் திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி கிரகங்களால் குடும்பங்களுக்கு ஏற்படும் திடீர் பிரச்சனைகள் பிரசவம் பார்க்க போனவர் டைவர்ஸ் கேட்டு கணவனுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார் இது எதனால், பாசமோடு வாழ்ந்த குடும்பங்கள் ஊரார் பார்க்க சண்டைகள் போட்டுகொண்டு பாகபிரிவினைக்கு சென்றுவிடுகிறார்கள் இது எதனால், தன் மகளை பாசத்தோடு வளர்த்து என்ன கேட்டாலும் தட்டாமல் வாங்கிகொடுத்து வளர்த்த மகள், படிக்கும்போது கூட படிக்கும் மாணவனுடனோ, சொல்லி கொடுக்கும் ஆசிரியரோடோ அல்லது எதிர்வீட்டு பையனோடோ இப்படி முறைமாறி காதலித்து அவன்தான் வேண்டும் என்று மல்லுக்கட்டி ஓடுவதும் நீதிமன்றம் வரை சென்று குடும்பத்தை கேவலபடுத்துவதும், பின்னால் வழாவெட்டியாக வீட்டில் வந்து சேர்வதும் எதனால், சில ஒவ்வாத திசை சந்தியில் குடும்பமே சிதறி சின்னா பின்னமாக நிற்கும் பெற்ற தாய், தந்தை, நான் என்ன பாவம் செய்தேனோ என்று அழுது புலம்ப வைத்துவிடும் நன்றாக படித்து கொண்டு இருந்த பிள்ளை இனி பள்ளிக்கு போகாமட்டேன் என்று மல்லுக்கு நிற்பதும் கூடாத நட்பால் புத்தி கெட்டு அலைவதும், போதைக்கு அடிமை ஆகி நிற்பதும் எதனால் கல்லூரிக்கு படிக்கச் சென்று பாய் பிரண்டுடன் ஊர் சுற்றி போதைக்கு அடிமையாகி வாழ்கையை தொலைத்து நிர்மூலமாய் நிற்பதும் எதனால், பல குடும்பங்கள் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத வேதனையில் நிற்கிறார்கள், பெற்றோர்களே நல்ல ஜோதிடருக்கு முக்காலத்தையும் கணிக்ககூடிய சக்தி உண்டு, தங்கள் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடம் பார்த்து குடும்பத்தை பற்றியும் திசை சந்தி பற்றியும் மகன் மகள் பற்றியும் எதிர்காலத்தில் வரக்கூடிய திசை சந்தி அதனால் ஏற்படும் கெடுபலன்கள் பற்றியும் தெரிந்து கொண்டு அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை பற்றியும் அதற்கான பரிகார முறைகளை தெரிந்து வாழுங்கள் அதை விட்டு விட்டு ஜோதிடரை சோதிக்காதீர்கள் உண்மையை சொல்லி கேளுங்கள். சிலஜோதிடர் உண்மை சட்டென்று சொல்லிவிடுவார்கள் சிலஜோதிடர் எப்படி தங்கள் மகளை அல்லது மகனை பற்றி பெற்றோரிடம் சொல்வது என்று பட்டதும் படாததுமாய் சொல்லுவார்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது ஜோதிடரை சந்தி்த்து பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய சித்தரும் ஜோதிடரும் ஆவார். அவர் எழுதிய திருக்குறள் ஒரு மிகப்பெரிய ஜோதிட புத்தகம் ஆகும், ஜோதிடத்தை வெறுப்பவர்கள் திருவள்ளுவரை வணங்கி அவர் சொல்லிய வழியை பின்பற்றுங்கள் எத்தனையோ அரசியல்வாதிகள் திருவள்ளுவ சித்தரை வணங்கி இன்றுவரை சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் திருவள்ளுவர் ஒரு சித்தர் திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய சித்தரும் ஜோதிடரும் ஆவார். அவர் எழுதிய திருக்குறள் ஒரு மிகப்பெரிய ஜோதிட புத்தகம் ஆகும், ஜோதிடத்தை வெறுப்பவர்கள் திருவள்ளுவரை வணங்கி அவர் சொல்லிய வழியை பின்பற்றுங்கள் எத்தனையோ அரசியல்வாதிகள் திருவள்ளுவ சித்தரை வணங்கி இன்றுவரை சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் "பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி" குருவடிசரணம் திருவடிசரணம்

Post a Comment

0 Comments