Ticker

6/recent/ticker-posts

கணக்கன் தன்கணக்கை தான் அறியான் R

தமிழ் ஜோதிடம் -ஜோதிட பதில் Tamil Jothidam

சிவ சிவ சிவாய நம ஓம்

சுய நலக்கார நபர்களிடம் இருந்து விளகி சென்று விடுங்கள்
அவர்களால் உங்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது.
வாக்கு ஸ்தானத்தில் சுப கிரகங்களையைம் பாவ கிரகங்களையும் கொண்ட ஒரு அன்பர் ஒரு சில பல ஆசிரியர்களிடம் ஜோதிடம் பயின்று பல நூல்களை படித்து
குறி சொல்பவர்கள் போல பலன் சொல்லி பரிகாரம் கூறிக்கொண்டிருந்தார்
நாம் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்று நன்றாக சென்று கொண்டிருந்தது உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் பாவத்தை கழிக்கத்தானே பிறந்து உள்ளது.
அவருக்கும் பிரச்சனைகள் உடல் நலக்கோளாறுகள் ஊருக்கெல்லாம் பரிகாரம் (கணக்கன் தன்கணக்கை தான் அறியான்).
பிண்டம் திணறியது சொல்கின்ற குறி (பலன்) கூட பலிக்க வில்லை அமைதியானது ஜோதிடம் கர்ம கணக்கு இறைபக்தியோடு கூற வேண்டும். இல்லை என்றால் காலம் சென்றவர்களின் கணக்கை எடுத்து பாருங்கள்
கர்மவினை கணக்கு புரியும் ஊருக்கு கர்ம உபதேசம் நான் ( நீ) பட்டபாடு யாருக்கு தெரியும் இது தேவையா?
யோசித்து தேர்ந்து எடு புண்ணியவழியில் உன் பாதையை மாற்றிக்கொள்.
சிவாய சிவ ஓம்

உண்மை-காலம் கோட்சாரத்தில் 1 5 9 இடத்து அதிபதிகள் மறையும்போதும், குருவும் சனியும் பார்க்கும் சமயம் குருவருளும் திருவருளும் மௌனமாகி போகும், குலதெய்வமும் இஷ்டதெய்வமும் கெட்ட தசாபுத்திகளின் ஆதிக்கத்தில் கட்டுண்டு செயலற்றுக் கிடைக்கும். இப்படிப்பட்ட சமயத்தில்தான் ஆத்திகவாதிகளும் நாத்திகம் பேச ஆரம்பிப்பார்கள். நாத்தீகவாதிகளும் ரகசியமாக பூஜை பரிகாரங்களைச் செய்துகொண்டு ஆத்திகத்தை நம்புவார்கள். மனது நினைப்பது எல்லாம் உடனே நடக்கவேண்டும் என்று நினைப்பது எதிர்பார்ப்பது தவறு, சாதம் வடிக்க உலை கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும், பிறகு அரிசியை கலைந்து போட்ட பிறகு அரிசி வெந்த பிறகு வடிக்கவேண்டும், அவசரபட்டால் அரைவேக்காடுதான் திரும்ப வேகவைக்கவும் முடியாது சாப்பிடவும் முடியாது, மனிதனின் கர்ம வினை கஷ்ட காலத்தில் அத்திவாசிய தேவைகளுக்கு இறைவன் படி அளப்பான். ஆடம்பர தேவைகள் யோக்காலத்தில் ஈடேரும்.

ஏழரைச் சனியும் அட்டமச் சனியும் பொதுவாக கெடுக்கும் என்றாலும் எல்லாரையும் கெடுக்காது- ஜோதிட ஆராய்ச்சி (ஆராயய்சிக்காக எடுக்கபட்டேன் தவிர ஆதரவுக்காக இல்லை) ஓம் திருவள்ளுவர் சித்தர் திருவடிகள் போற்றி குருவடிசரணம் திருவடிசரணம் நல்லதும் கெட்டதும் ஒரே இடத்தில் அமைகிறது.கடல்நீர் உப்புக் கரித்தாலும் அதன் கரையில் தோண்டிய ஊற்று நீர் சுவை யுடையதாக மாறுவதுபோல ராகு-கேது எந்த இடத்துக்கு கெடுதல்களைச் செய்கிறார்களோ அந்த இடத்துக்கு நல்லதையும் செய்வார்கள் நல்ல குணமும் கெட்ட குணமும் ஒரே மனிதனிடம் தான் குடி கொண்டுள்ளது. மனிதன் மிருகமாகவும் மாறலாம்; தெய்வமாகவும் மாறலாம். இந்த மாற்றத்துக்கு கிரகங்களே காரணம்! உதாரணமாக ஏழரைச் சனியும் அட்டமச் சனியும் பொதுவாக கெடுக்கும் என்றாலும் எல்லாரையும் கெடுக்காது. ஒரு சிலரைத் தாழ்வாக்கினாலும் பலரை வாழ்விக்கும் பிரபல சினிமா நடிகர் ராஜேஷ் அவர்கள் தனுசு ராசி. அதற்க்குச் சனி எட்டில் இருந்தபோது பிரபலமான யோகத்தை அனுபவித்தார். ஜாக்பாட் அடித்த மாதிரி யோகம்! ஆனால் சனி 9-ல் மாறியபோது வதைத்து எடுத்தவிட்டது. தனுசு ராசிக்கு அதிபன் குரு 8-ல் கடகத்தில் உச்சம். அப்படி குருவின் யோகத்தை வாரி வழங்கிவிட்டார் என்பதுதான் ரகசியம். கலைஞர் கருனாநீதி ரிஷபாராசி அதற்கு சனி எட்டில் தனுசு ராசியில் வந்தபோதுதான் பதினாறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதல்வரானார் அட்டமத்துச்சனி விலகியதும் மீண்டும் ஆட்சியை இழந்து சில வருடங்களுக்குப் பிறகுதான் மறுபடி ஆட்சிக்கு வந்தார் கலைஞர் ஜாதகத்தில் ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் இதுவரை எந்தத் தேர்தலிலும் அவர் தோற்றதே இல்லை காமராஜரும் அண்ணாவும்கூட தங்கள் தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார்கள் கலைஞர் ஒருமுறை தஞ்சைத் தொகுதியில் செல்வாக்குப் பெற்ற பரிசுத்த நாடாரை (காங்கிரஸ் வேட்பாளரை) ஜெயித்தார் கலைஞர் ஜெயிப்பார் என்று யாருமே எதிர்பாராத ஒரு வெற்றி அவர் கடக லக்னம் அட்டமாதிபதி சனி ஆனால் ரிஷபராசிக்கு தர்மகர்மாதிபதி யோகாதிபதி ஆகவே சனி எல்லாரையும் கெடுக்கமாட்டார் என்பதற்கு உதாரணமாகத்தான் இத்தனை விளக்கம். (கலைஞர் எந்த சுகத்தையும் பரிபூர்ணமாக அனுபவித்தது இல்லை, அவருடைய சுய ஜாதகத் ஆராய்ச்சி பதிவில் விளக்கமாக பதிவிடுகிறேன்) அதேபோல ராகுவும் கேதுவும் கெடுதலை செய்யும் கிரகங்கள் என்றாலும் நல்லதும் செய்வார்கள். அதேபோல மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மகர ராசி. கடகத்தில் (40 வருடங்களுக்கு முன்பு) சனி இருந்தபோது, அடுத்த அட்டமத்துச்சனி வரப் போகிறது; அதனால் அதற்க்கு முன்னதாகவே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் என்று அவருக்கு வேண்டிய ஜோதிடர்கள் எல்லாம் கூறக் கேட்டு தேர்தலை நடத்தி தோல்வியை அடைந்துவிட்டார். அடுத்து சிம்மத்தில் சனி வந்த பிறகு அட்டமத்துச் சனியில்தான் சிக்மகளூரில் போட்டியிட்டு எம்பி ஆனார். சனி எட்டில் இருக்கும்போது மீண்டும் ஆட்சியை கைபற்றி பிரதமர் ஆனார்.

தெய்வ ரகசியம் குருவே சரணம் குருவடிசரணம் திருவடிசரணம் திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி அதிஷ்டம் என்பது அது இஷ்டமாகத்தான் வரும் நாம் நினைக்கும்போது எல்லாம் வந்துவிடாது அது தெய்வ ரகசியம், ஜோதிடசூட்சமம் உங்கள் ஜாதகத்தில் அந்த யோகங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொண்டு தேடுங்கள் ஒருசில ஜாதகனுக்கு அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும், சிலருக்கு சிரமத்தோடு அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி அடையும், கடவுளால் உனக்குக் கொடுக்கப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது, அதுபோல கடவுளால் உனக்குக் மறுக்கப்பட்டதை எவராலும் தரமுடியாது அது தெய்வ ரகசியம் கடவுளால் உனக்குக் கொடுக்கப்பட்டது எவைகள்? அதுபோல கடவுளால் உனக்குக் மறுக்கப்பட்டது எவைகள்? அதுவும் தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சமம், எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும், அந்த ஜோதிடசூட்சுமங்களை நேரில் அனுகி குடும்ப ஜாதகத்தை பார்த்து குருமரியாதை செலுத்தி உங்கள் யோகங்களையும் அவயோகங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். என்னிடம் அல்ல ஜோதிட ஆசான்களிடம் "குரு கடாச்சியம் இருந்தால் தவறுகள் மன்னிக்க படலாம், விதிகள் மாற்ற படலாம்” குருவடிசரணம் திருவடிசரணம்

Post a Comment

0 Comments